ரூ.100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய விஜய்
‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கும் இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவிருக்கிறது. இந்த படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.கேரளாவில் நவம்பர் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இரண்டாம் கட்டமாக மைசூரிலும், மூன்று, நான்காம் கட்ட படப்பிடிப்பை தமிழ்நாட்டிலும், வடஇந்தியாவில் டார்ஜிலிங், குலுமணாலி ஆகிய இடங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளனர். இறுதிக்கட்டப் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். கன்னட நடிகர் சுதீப், பழைய நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
-மாலைமலர் -
ரூ.100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய விஜய்
ரூ.100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய விஜய் ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார...
Post a Comment