முதலில் பந்தா காட்டிவிட்டு, பிறகு கெஞ்சிய ராம் ஜெத்மலானி
ஜெயலலிதா ஜாமீன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரத்னகலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிருந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் மனு தொடர்பாக வாதாட தமக்கு அரசிடமிருந்து ஒப்புதல் அல்லது உத்தரவு வரவில்லை என்று சொன்னார்.
அப்போது ஜெயலலிதா தரப்பில் வாதாடிய ராம்ஜெத்மலானி, அரசு தரப்பு வாதாட முன்வரவில்லையென்றால் உடனே ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கவேண்டும் என்று கூறினார். ஆனால் நீதிபதி இதற்கு ஒத்திவைக்கவில்லை..
தான் ஒரு மூத்த வக்கீல் என்றும் இந்த வழக்கிற்காக லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும், உடனே அமெரிக்கா செல்லவண்டும் என்றும் ஜெத்மலானி கூறினார்.
ஆனால் நீதிபதி ரத்னகலா, யாராக இருந்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் ஒரு தரப்பு வாதத்தை வைத்து தாம் முடிவுக்கு வரமுடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
விசாரணையை பிற்பகல் இரண்டரை மணிக்காவது தள்ளிவைக்கவேண்டும் என்று ஜெத்மலானி பத்து நிமிடங்களுக்கு மேலாக கெஞ்சிப்பார்த்தார்.. ஆனால் நீதிபதி சம்மதிக்கவேயில்லை.
வேண்டுமென்றால், தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்று முறையிட்டுக்கொள்ளுங்கள் அதற்கு உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டு மனு விசாரணையை அக்டோபர் ஆறாம் தேதி அதாவது வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்
வழக்கை தள்ளிவைப்பதோ, அல்லது தலைமை நீதிபதியை கலந்தாலோசிப்பதோ உங்கள் விருப்பம் என்று நீதிபதி ரத்னகலாவிடம் அவர் கூறினார். இதையடுத்து வழக்கை திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்
முதலில் பந்தா காட்டிவிட்டு, பிறகு கெஞ்சிய ராம் ஜெத்மலானி
முதலில் பந்தா காட்டிவிட்டு, பிறகு கெஞ்சிய ராம் ஜெத்மலானி ஜெயலலிதா ஜாமீன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரத்னகலா முன் விசாரணைக்கு வந்...
Post a Comment