எல்லோ (Ello ) பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம்.
எல்லோ என்றால் என்ன?
இது என்ன எல்லோ புதிதாக இருக்கிறது ? எங்கிருந்து முளைத்தது இந்த எல்லோ! இது என்ன சேவை ? ஏன் இதைச்சுற்றி இத்தனை பரபரப்பு?
எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை.
பேஸ்புக்கிற்கு போட்டியா? இப்படி சொல்லிக்கொள்ளும் எத்தனை சமூக வலைப்பின்னல் சேவைகளை கேள்விபட்டாயிற்று என்று அலட்சியம் கொள்வதற்கு இல்லை. ஏனெனில் எல்லோ, பேஸ்புக் மீது சொல்லப்படும் குறைகளை எல்லாம் களைந்து முற்றிலும் புதிதான பயனாளிகளை மையமாக கொண்ட சமூக வலைப்பின்னலாக அறிமுகமாகி இருப்பதாக சொல்லப்படுவது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது.

பேஸ்பிக்கிற்கு மாற்று
’ உங்கள் சமூக வலைப்பின்னல் சேவை விளம்பர நிறுவனங்களால் சொந்தம் கொண்டாடப்படுகிறது என எல்லோ நெத்தியடியாக பேஸ்புக் மீது தாக்குதல் நடத்தி வீட்டு, விளம்பரங்கள் இல்லாத சேவையாக அறிமுகம் செய்து கொள்கிறது. பயனாளிகளின் டைம்லைனில் விளம்பரங்களை இடம்பெற வைப்பதில்லை என்பதையும் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரித்து மூன்றாவது நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்பதையும் எல்லோ தனது சேவையின் சிறப்பம்சமாக சொல்கிறது. இவை இரண்டுமே பேஸ்புக் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
பேஸ்புக் உங்களை வைத்து காசு பார்க்கிறது என்று சொல்லப்படுவதை பொருட்படுத்தாதவர்கள் கூட பேஸ்புக் டைம்லைன் முழுவதும் விளம்பரமயமாகி வருவதால் நிச்சயம் அதிருப்தி கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டு அவர்களின் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான சேவை என்பதை மீறி பேஸ்புக்கில் எப்போதும் விளம்பர செய்திகளும் தகவல்களும் எட்டிப்பார்த்து கொண்டிருக்கின்றன.

இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் நட்பு பகிர்வுகளுக்கானதாக மட்டுமே இருக்கும் எளிமையான தூய்மையான சமூக வலைப்பின்னல் சேவை இருந்தால் எப்படி இருக்கும் ? என்ற ஏக்கம் பலருக்கு இருக்கலாம்.
அமோக வரவேற்பு
இந்த ஏக்கத்திற்கான பதிலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் எல்லோ உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் துவக்கப்பட்ட சில வாரங்களிலேயே பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அழைப்பு மூலம் உறுப்பினர்களை அனுமதிக்கும் இந்த சேவையில் சேர மணிக்கு 30,000 பேருக்கு மேம் விருப்பம் தெரிவிப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த சேவையில் இணைவதற்கான அழைப்புகள் பிரபல ஏல் இணையதளமான இபேவில் விற்கப்படும் அளவுக்க் இதற்கு கிராக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இவற்றை விட முக்கியமான விஷ்யம் ஒன்று இருக்கிறது. சமீபத்தில் பேஸ்புக் , பயனாளிகள் தங்கள் உண்மையான பெயரில் தான் பதிவு செய்து கொள்ள வேண்டும் , பொய்யான பெயர்கள் செல்லுபடியாகாது என தெரிவித்தது. இதனால் குறிப்பிட்ட பாலின கொள்கையை கொண்டவர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். இவர்களில் பலர் பேஸ்புக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேற விரும்பும் நிலையில் , எந்த பெயரில் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் சுதந்திரம் அளிக்கும் எல்லோ கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. இதனால் தான் எல்லோ பற்றி எல்லோரும் பேசத்துவங்கியிருக்கின்றனர்.
எல்லோவில் என்ன இருக்கிறது
எல்லாம் சரி, எல்லோ சேவை எப்படி இருக்கிறது? அதில் எப்படி சேரலாம்?
எல்லோ சமூக வலைப்பின்னல் மிக எளிதாக இருப்பதாக சொல்கிறார்கள். அதன் வடிவமைப்பில் அலங்காரமோ குழப்பமோ கிடையாது. அதன் அமசங்களிலும் ஆர்ப்பாட்டம் இல்லை என்கின்றனர். இதில் உறுப்பினராக சேர்ந்தால், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். ( இணைப்புகள் மற்றும் வீடியோக்களும் உண்டு) . நண்பர்கள் பகிர்வை பார்க்கலாம். அவ்வளவு தான் என்கிறனர். லைக்,ஷேர் எல்லாம் கிடையாது. திடிரென எட்டிப்பார்க்கும் வீடியோ மற்றும் விளம்பரங்களும் கிடையாது. டைம்லைனிலும் அதிக குழப்பம் இல்லை. பதிவுகள் நண்பர்களின் பதிவுகள் , பொதுவானவை (நாய்ஸ்) என்று மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளன.
நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். ஆனால் தேடல் வசதி இன்னும் முழுமையாக இல்லை என்கின்றனர். பேஸ்புக் சேவை ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அப்படி எளிமையாக இருப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. ஆக , நட்பை பகிர்ந்து கொண்டு நட்பு வட்டார தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் சேவையாக எல்லோ இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உறுப்பினராக சேரும் போதும், பேஸ்புக் போல பிறந்த ஊர், படித்த பள்ளி எல்லாம் கேட்பதில்லை. உங்கள் பெயர் ( பயனர் பெயர் தான்) சுருக்கமான அறிமுகத்தை தெரிவித்து நட்பு கொள்ளத்துவங்கிவிடலாம்.

எல்லோவின் அழைப்பு
பேஸ்புக்கின் குழப்பமான அம்சங்களுக்கு பழகியவர்களுக்கு இதன் அடிப்படையான வசதி மட்டும் கொண்ட எளிமை வியப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கலாம். எல்லோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாகமல் பீட்டா வடிவில் தான் உள்ளது. எனவே உறுப்பினராக சேர அழைப்பு தேவை. ஒன்று உங்கள் நண்பர்கள் உறுப்பினராக இருந்து அழைக்க வேண்டும். இல்லை என்றால் இதில் அழைப்பு கேட்டு கோரிக்கை சமர்பித்து காத்திருக்கலாம். பேஸ்புக்கிற்கு போட்டி என்று சொல்லப்படுகிறதே பேஸ்புக்கை தூக்கி சாப்பிடுமா? பேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டு இதற்கு மாறலாமா? என்று கேட்கலாம். பேஸ்புக் மீது ஆயிரம் குறைகள் இருந்தாலும் அதன் வீச்சு மற்றும் பிரம்மாண்ட வளர்ச்சியுடன் மல்லு கட்டுவது என்பது எளிதானதல்ல. அதோடு பல சமூக வலைப்பின்னல் சேவைகள் பேஸ்புக்கிற்கு போட்டி என கூறி அறிமுகமாகி மண்ணைகவ்வி இருக்கின்றன. இவ்வளவு ஏன் ஜி பிளஸ்சே திண்டாடுகிறது. ஆனால் பேஸ்புக்கின் விஸ்வரூப வளர்ச்சியாலேயே அதற்கு மாற்று தேவை இல்லை என்று சொல்ல முடியாதே. மேலும் பேஸ்புக்கிற்கான மாற்று தேவை எனும் ஏக்கமும் உள்ளது.
எல்லோவுக்கு மாறலாமா?
பேஸ்புக்கில் இருந்து எல்லோவுக்கு மாறலாமா? என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்து. பேஸ்புக்கின் வீச்சும் வேண்டாம், அதன் தொல்லைகளும் வேண்டாம் என்று நினைத்தால் எல்லோவை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் ஒன்று பேஸ்புக் கூறப்படும் அந்தரங்க மீறல் புகார் விஷ்யத்தில் எல்லோவும் பெரிய அளவில் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு எல்லோ விளம்பரம் இடம்பெற வைக்காத்தை முக்கிய அம்சமாக சொல்கிறது. அப்படி என்றால் வருவாய்க்கு வழி ?வருங்காலத்தில் புதிய அம்சங்கள் கட்டண சேவையாக அறிமுகமாகும் என்கிறது எல்லோ. ஆக அதற்கும் தயாராக இருங்கள். எல்லோ சேவையின் பூகோள பரப்பு பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை. இப்போதைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரபரப்பாக இருக்கிறது. எதற்கும் இமெயில் முகவரியை சமர்பித்து காத்திருங்கள். அதற்கு முன்,
எல்லோவின் கொள்கை அறிக்கையை அவசியம் படித்துப்பாருங்கள்!
எல்லோ சேவை: https://ello.co/wtf/post/manifesto
சைபர்சிம்மன்
பேஸ்புக்கிற்கு போட்டியாக பிரபலமாகும் எல்லோ !
எல்லோ (Ello ) பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது ...
Post a Comment