Ads (728x90)

 ஜெயலலிதாவை சிறையில் சந்திக்க முடியாமல் திரும்பிய ஷீலா பாலகிருஷ்ணன்!


சென்னை: பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர்  திரும்பினர்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இதையடுத்து  ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்து விட்டார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். அதன்படி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலருமான ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர்.  அங்கு, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், சிறை விதிமுறையின்படி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பரப்பன அக்ரஹாரா சிறை முன் மாலை 4.30 மணி வரை  ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கடராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் காத்திருந்துவிட்டு, அனுமதி கிடைக்காததை தொடர்ந்து திரும்பினர்.
இந்நிலையில், நாளை ஜெயலலிதாவை சந்திக்க சிறப்பு அனுமதி கேட்டு சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவை சிறையில் சந்திக்க முடியாமல் திரும்பிய ஷீலா பாலகிருஷ்ணன்!

  ஜெயலலிதாவை சிறையில் சந்திக்க முடியாமல் திரும்பிய ஷீலா பாலகிருஷ்ணன்! சென்னை: பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் தமிழக ...

Post a Comment