நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா யார்?
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ள தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 1977ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தவர். 1990ம் ஆண்டு கர்நாடக நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து கர்நாடக லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடக மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் இந்த சொத்து குவிப்பு வழக்கின் தனி நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுமுதல் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார்.இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார். தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்பட கடந்த 4 நாட்களாக திருத்தி டைப் செய்துள்ளார். இவர் ஒருமுறை தீர்ப்பு அளித்தால் அந்த வழக்கு அடுத்தடுத்த உயர்நீதிமன்றங்களை அணுகினாலும் தோல்வியையே தழுவுமாம். அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் நியாயத்தையும், நேர்மையையும் கடைபிடிப்பவர் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலர் இவரது தீர்ப்பை பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-dinakaran-
நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா யார்?
நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா யார்? பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ள தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா க...
Post a Comment