தமிழகத்தின் முதல்வராக 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர் செல்வத்தின் பயோடேட்டா இங்கே...
ஓ.பன்னீர்செல்வம் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவர் தற்போது அ.தி.மு.க பொருளாளராக இருந்து வருகிறார்.
உள்ளாட்சி மன்றத்தில்....
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார்.
சட்டமன்றத்தில்..
2001 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
* வருவாய்த்துறை அமைச்சர் (2001 ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை)
* தமிழக முதல்வர் (2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை)
* பொதுப்பணித்துறை அமைச்சர் (2002 மார்ச் 2 முதல் 2006 மே வரை )
2006 ஆம் ஆண்டு தேர்தல்...
2006 ஆம் ஆண்டு தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆவது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் எதிர்கட்சி துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
2011 ஆம் ஆண்டு தேர்தல்...
2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், அவை முன்னவர் என்று மே 16 ஆம் தேதி 2011 முதல் 28, செப்டம்பர் 2014 வரை பணியாற்றினார்.
தமிழக முதல்வராக...
கடந்த 27 ஆம் தேதி பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தவுடன் அவர் முதல்வர் பதவி பறிபோனது. 28 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வானார்.
வாழ்க்கை குறிப்பு
புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 1951 ஆம் ஆண்டு தேனிமாவட்டம் பெரியகுளம் தென்கரை கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு வயது தற்போது 63. தந்தை ஓட்டக்காரத்தேவர். தாயார் பழனியம்மாள். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு கவிதாபானு என்ற மகளும் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற மகன்களும் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான்கு சசோதரிகள். 3 சகோதரிகள்.
தனது 31 ஆவது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், 1982 ல் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ஆனார். 1989 ல் நகர இணைச் செயலாளராகவும் 1993 ல் நகர செயலாளராகவும் ஆனார். பின்னர், 1996 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பெரியகுளம் நகராட்சி தலைவர் ஆனார். 2000 த்தில் மாவட்ட செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.
வருவாய்த்துறை அமைச்சர், முதல்வர் என்று முன்னேறிய அவர் 2002 ஆம் ஆண்டு கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், பிறகு கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாகவும், கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்த பன்னீர்செல்வம், 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராக இரண்டாவது தடவையாக இன்று பொறுப்பேற்றார். ஒவ்வொரு பதவி ஏற்பு விழாவிலும் ஆனந்தம் தவழ்ந்த கவர்னர் மாளிகையின் தர்பார் மண்டபம் இன்று சோகம் அப்பிய நிலையில் காணப்பட்டது. இந்த நாளும் மறக்கமுடியாத நாள்...!
- எஸ்.முத்துகிருஷ்ணன்
-vikatan-
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயோடேட்டா!
த மிழகத்தின் முதல்வராக 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர் செல்வத்தின் பயோடேட்டா இங்கே... ஓ.பன்னீர்செல்வம...
Post a Comment