ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை, ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்துக்கு நிச்சயம் ஓர் பின்னடைவுதான்!
*****************************************************
மு.வே....யோகேஸ்வரன்
*********************************
ஆரம்ப காலங்களில் ஈழப் போராட்டங்களுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் எதிராக இயங்கிவந்தவர்தான் ஜெயலிதா..அது மட்டுமன்றி, தலைவர் பிரபாகரன்,பொட்டம்மான் போன்றவர்களை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒருகாலத்தில் கோரிக்கை வைத்தவர் ஜெயலலிதாதான்!.. அவைகளை மறந்து விடுவதற்கு நாம் அரணைகள் அல்ல!.ஆனால், கடந்த சில வருடங்களாக ஜெலலலிதாவின் போக்கு அடியோடு மாறியிருந்தது..என்பதை அரசியல் நோக்கர்கள் மறந்துவிட மாட்டார்கள்..சட்ட சபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ,ராஜபக்சாவுக்கு எதிராக,இலங்கைமீது பொருளாதார தடை கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய அரசைக் கோரும் தீர்மானமும்,இலங்கையை ஓர் இனப்படுகொலை நாடு என்று அறிவிக்ககோரியும், அவரால் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் ராஜபக்சாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை நாம் மறுப்பதற்கில்லை..
அது மட்டுமன்றி,இந்தியாவில் இலங்கைப் படைகளுக்கு பயிற்சி அளிக்கப் படக் கூடாது என்பதை தீவிரமாக எதிர்த்து வந்தவர் ஜெயலலிதா , என்பது மட்டுமன்றி,தமிழ் நாட்டில் இருந்த சில பயிற்சிப் பாசறைகளில் இருந்து இலங்கைப் படைகளை வெளியேற்றியும் உள்ளார் ..இதை வெறும் அரசியல் ஸ்டண்ட்' என்று சொல்லி கொக்கரிப்போரும் உண்டு..பதவியில் முதல் அமைச்சராக உள்ள ஒருவர் இப்படியான கோரிக்கைகளை வைப்பதை, வெறும் அரசியல் ஸ்டண்ட்' என்று ஒதுக்கிவிட முடியுமா என்ன?..தமிழ் நாட்டில் உள்ள
சிலர், அரசியல் ஸ்டண்ட்' என்று வக்கிர புத்தியுடன் இதை சொல்கிறார்கள்...ஆனால்,அத்தகையவர்கள் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? அதுவும் உருப்படியாக... என்பதுதான் முக்கிய கேள்வியாகும்!..ஆனால்,சென்ற முறை, ஜெயலலிதாவின் சட்ட சபைத் தீர்மானத்தின் எதிரொலியாக, மத்திய காங்கிரஸ் அரசு, ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது!
அது மட்டுமன்றி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்களை,உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர், அதிரடியாக விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பித்தவரும் அவரேயாகும்.அன்றைய காங்கிரஸ் அரசு அதற்கு தடை பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது..
அதன் விளைவாக, ஈழத் தமிழர்கள் விவகாரத்திலும்,-தமிழக மீனவர்கள் விடயத்திலும், ஜெயலலிதா என்பவர்,ராஜபக்சாவுக்கு எதிரான ஓர் சக்தியாக உருவெடுத்தவர் என்பதால்தான்,அண்மையில் கூட ஜெயலிதாவின் உருவபொம்மைகளை எரித்தும், அவரை மோடியுடன் சேர்த்து அவமானப் படுத்தியும் கொழும்பில் ராஜபக்சாவின் ஆதரவாளர்கள்..
அவமானப் படுத்தினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
இலங்கையில் நடை பெற்றது இனப் படுகொலைகள்தான் என்று அடித்து சர்வதேச நாடுகளுக்கு கேட்கக் கூடியதாக உரத்துச் சொல்லியவர் ஜெயலலிதா ..
இன்றைய நிலையில் அவர் ஓர் குற்றவாளியாக நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது உண்மைதான்! அவரைத் தண்டிப்பதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கவில்லை-அப்படி கொடுக்கவும் கூடாது..என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்..ஆனால்,ஓர் இந்திய மாநில முதல் அமைச்சரின் வலுவான குரல்-அதுவும் சுமார் 7.5கோடி மக்களைக் கொண்ட ஓர் மாநில முதல் அமைச்சரின் குரல், ஈழத் தமிழர்களின் ஜென்ம விரோதியான,இனப்படுகொலையாளியான,ராஜபக்சாவுக்கு எதிராக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியுமா?..சுப்பிரமணிய சாமி போன்றோர் இன்று ஜெயலிதாவை ஓர் புலிகளின் ஆதரவாளர் என்று வக்கிர புத்தியுடன் சொல்லியுள்ளார்..அதில் இருந்தே ஜெயலலிதா ராஜபக்சாவுக்கு எதிராக இருந்தவர்-இருப்பவர் என்று புரியவில்லையா,என்ன?
எனவே ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்துக்கு ஜெயலலிதாவின் சிறைத் தண்டனை ஓர் பின்னடைவுதான் என்பதை இன்று யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது!

ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை, ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்துக்கு நிச்சயம் ஓர் பின்னடைவுதான்! **************************************...
Post a Comment