இப்போது சென்னை செண்ட்ரலிலும் இலவச வை-ஃபை இண்டெர்நெட்
சென்னை,
சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில்
ரயிலுக்காக காத்திருக்க நேர்ந்தாலோ அல்லது உறவினர்களை வரவேற்க
காத்திருந்தாலோ இனி மந்தமான அனுபவத்தை அது ஏற்படுத்த போவது இல்லை. ஏனெனில்
தென்னிந்தியாவின் பரபரப்பான ரயில்வே முனையங்களில் ஒன்றான சென்னை செண்டிரல்
ரயில் நிலையத்தில், மொபைல் போன் மற்றும் லேப்டாப் மூலமாக இலவசமாக வை-ஃபை
பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று இந்த வசதியை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே துறை மந்திரி சதானந்த கவுடா, தனது மொபைல் போனிலும் பரிசோதனை செய்து கொண்டார்.
இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், லேப்டாப், ஐபாடு பயனாளர்கள் 30 நிமிடங்கள் இலவசமாக தங்கள் சாதனங்களில் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
நிகழ்ச்சிக்கு பிறகு தென்னிந்தியாவின் பழைமையான ரயில் முனையமான ராயபுரம்
ரயில்வே ஸ்டேஷன் சென்ற சதானந்த கவுடா, அங்கு மூன்றாவது முனையம்
அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்த அவர் கூறுகையில், ராயபுரத்தில் முனையம் அமைப்பதற்கு அரசு
ஏற்றுக்கொண்டது. ஆனால் அதை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
எனவே மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து ரயில்வே செயல்படும் என்றார்.
மத்திய மந்திரி சதானந்த கவுடாவுடன் மத்திய இனை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடன் வந்தனர்.
-dailythanthi-
இப்போது சென்னை செண்ட்ரலிலும் இலவச வை-ஃபை இண்டெர்நெட்
இப்போது சென்னை செண்ட்ரலிலும் இலவச வை-ஃபை இண்டெர்நெட் சென்னை, சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்க நேர்ந்தாலோ ...
Post a Comment