அதிக நேரம் தூங்குவது நல்லதா?.
அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும்.இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது.
சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும்.
அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.
அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.
-malaimalar-
அதிக நேரம் தூங்குவது நல்லதா?.
அதிக நேரம் தூங்குவது நல்லதா?. அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுக...
Post a Comment