Ads (728x90)

விண்வெளி வீரரிகளின் விண்வெளி வாழ்க்கை 
சில சுவாரசியமான தகவல்கள்.

சாதாரண மனிதனுக்கு விண்வெளியின் வாழ்க்கையை அனுபவிக்கும் வசதி எளிதில் கிட்டுவதில்லை.
இந்த அனுபவம் விண்வெளி ஆய்வாளர்கள்
அல்லது
விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே கிட்டுகிறது.
இந்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளார்கள்.
நாம் விண்வெளியில் உயிரினங்கள் வாழ முடியாது என்று பந்தயம் கட்டினாலும், அங்கு சென்று சாகசங்கள் செய்ய பலரும் தயாராக உள்ளனர்.
இந்த சாகச பயணங்களை செய்ய வேண்டாம் என்று கருதுபவர்கள், விண்வெளி வாழ்க்கை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவாவது விரும்புவார்கள்.
இங்கே விண்வெளி வாழ்க்கையைப் பற்றி சில விந்தையான ஆர்வமூட்டும் தகவல்கள் உங்களுக்காக
Smile
சூரிய உதயங்கள்!


***********************
நீங்கள் விண்வெளியில் இருக்கும் போது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயத்தை பார்க்க முடியும்.
இதனால் தான் விண்வெளி வீரர்களின் தூக்கத்தில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன.
சாதாரணமாக இருக்கும் பகல் மற்றும் இரவு வேளைகள் இல்லாததால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
சர்வதேச விண்வெள தளத்தின் நிர்வாகிகள் இந்த பிரச்னைக்கு ஒரு புதுமையான தீர்வு கண்டுள்ளனர்.
அவர்கள் விண்வெளி வீரர்களுக்காக 24 மணி நேர அட்டவணையை தயார் செய்துள்ளனர்.
பூமி நேரத்தை அடிப்படையாக கொண்ட இந்த கால அட்டவணைப்படி அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.
உடற்கூறு மாற்றங்கள்
*****************************
விண்வெளியில் உள்ள மிகவும் குறைந்த புவிஈர்ப்பு விசை காரணமாக நமது முதுகெலும்பு பூமியில் பெற்று வரும் தொடர்ச்சியான அழுத்தம்
விடுபட்டு விடும்.
அதன் காரணமாக விண்வெளி வீரர்களின் முதுகெலும்பு நேராக நிமிர்ந்து, சுமார் 2.25 அங்குல அளவிற்கு அவர்களுடைய உயரம் அதிகரிக்கும்.
விண்வெளி சுகவீனம்
****************************
விண்வெளிக்கு சென்று விட்டு திரும்பும் வீரர்களின் உடல் நிலை 2-3 நாட்களுக்கு சுகவீனமாக இருக்கும்.
விண்வெளியில் குறைவான புவிஈர்ப்பு விசை இருந்ததன்காரணமாகவும் மற்றும் விண்வெளிக்கு 
யார் சென்றாலும் ஏற்படும் சாதாரண விஷயமாகவும் 
இது உள்ளது.
தூக்கம் 
**********
விண்வெளிக்கலத்தில் தூக்கம் என்பது ஒரு சிக்கலான விஷயமாகும்.
விண்வெளியில் சிறிது நேரமாவது தூங்க நினைக்கும் விண்வெளி வீரர்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்.
அவர்கள் தங்களை ஒரு பட்டைக்குள் புகுத்திக் கொண்டு - மிதப்பதையும், மற்ற பொருட்களுடன் மோதுவதையும் தவிர்த்துக் கொண்டு தூங்குவார்கள்.
ஆடை அணிகள் 
*********************
விண்வெளியில் ஒவ்வொருவருடைய ஆடை அணிகலன்களை சரி செய்வது என்பது சவாலான காரியம் தான்.
விண்வெளி வீரர்கள் தங்களுக்கான பிரத்யோகமான உடைகளை கொண்டு சென்று, கலத்தின் சுவர்களில் உள்ள லாக்கர்களிலும், பிற பொருத்தும் இடங்களிலும் வைப்பார்கள்.
தங்களுடைய முடிகளை அலசுவதற்கு அவசியம் இல்லாத ஒரு வகையான ஷாம்பூவை கொண்டு சுத்தம் செய்வார்கள்.
உணவுப்பழக்கங்கள் 
***************************
விண்வெளியில் புவிஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் உப்பு மற்றும் மிளகு போன்றவற்றை தெளிக்க முடியாது.
எனவே அவர்கள் திரவ உணவுகளை சாப்பிடுகிறார்கள்.
திட உணவுகள் மிதந்து சென்று ஏதாவது ஒரு இயந்திர பகுதிக்குள் சிக்கிக் கொள்ளவோ அல்லது விண்வெளி வீரரின் கண்களை தாக்கவோ வாய்ப்புகள் உள்ளது.
காஸ்மிக் கதிர்வீச்சுகள்
******************************
கருமையான விண்வெளியின் பரந்த வெளி பரப்பில் நீல நிறத்தில் காட்சியளிக்கும் பூமியை விண்வெளி வீரர்களால் காண முடியும்.
மேலும், அவர்கள் நிலவின் பின் பகுதியை பார்க்கவும், நிலவில் பட்டுத் தெறிக்கும் வித்தியாசமான வெளிச்சங்களை அவர்களுடைய கருவிழிகளால் உணரவும் கூடிய அனுபவங்களை பெற்றிருப்பார்கள்.
மூளையில் என்ன நடக்கும்?
**********************************
அறிவியலாய்வாளர்கள் எவ்வளவு தான் பரிசோதனைகள் செய்து விண்வெளி வீரர்களின் அழுத்தத்தை தாங்கும் திறன்களை சோதித்தாலும், நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் பயணம் செய்ய நேரிட்டால் மூளை பாதிக்கப்படும் என்பதை மறுக்க
முடியவில்லை.
ஏனெனில், விண்வெளியில் உலவி வரும் காஸ்மிக் கதிர்கள் மூளையைத் தாக்க வல்லவையாகும்.
கழிப்பறைகள்
*******************
விண்வெளியில் கழிப்பறைகளை பயன்படுத்துவது என்பது சவாலான காரியம் தான்.
பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்களம் இந்த
பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் பொருட்டாக பல
மணி நேரங்களை செலவிட்டுள்ளன.
முன்னதாக, விண்வெளி கழிப்பறைகள் காற்றை அடிப்படையாக
கொண்டு இயங்கி வந்தன.
எனினும், தற்போதைய ஏர் பில்டரிங் முறையும் முன்பையொத்த முறையாகவே உள்ளது.
மீண்டும் பூமி வாழ்க்கை.....?
***********************************
விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய பின்னர், பூமியின் புவிஈர்ப்பு விசையுடன் பழகுவதற்கு நெடுநேரம் எடுத்துக் கொள்வார்கள்.
அவர்கள் விண்வெளியில் பொருட்களை கீழே போடுவதைப் போலவே, பூமியில் போட்டு பொருட்களை உடைக்கவும் செய்வார்கள்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t49139-topic#ixzz3EodTgKfw 
Under Creative Commons License: Attribution
விண்வெளி வீரரிகளின் விண்வெளி வாழ்க்கை சில சுவாரசியமான தகவல்கள்.

விண்வெளி வீரரிகளின் விண்வெளி வாழ்க்கை  சில சுவாரசியமான தகவல்கள். சாதாரண மனிதனுக்கு விண்வெளியின் வாழ்க்கையை அனுபவிக்கும் வசதி எளிதில் கிட்...


சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும். படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.

 சரஸ்வதிபூஜை - அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது. சாமுண்டிதேவி: நவராத்திரியில் ஒன்பதாவது நாள் தேவியானவள் சாமுண்டி மாதா என அழைக்கப்படுகிறாள். இந்த நாள் தேவிக்கு மிகவும் சிறப்பு தரும் நாளாகும். சப்தமாதர்களுள் ஒருத்திதான் சாமுண்டி. துர்க்கா தேவி மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவளை எதிர்த்து சண்டையிட மகிஷனின் அமைச்சர்களாகிய சண்டன், முண்டன் வந்தனர். துர்க்காதேவி தன் அம்சமான சாமுண்டி தேவியை அனுப்பி சண்டனையும் முண்டனையும் அழிக்குமாறு பணித்தாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரையும் வீழ்த்தியதால் அதாவது சண்ட முண்ட வதம் செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள். சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனுர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச் சன்னதி உண்டு. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும், உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பின்னி, சூன்யம் வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவராத்திரி ஒன்பதாம் ஆலயங்களில் உள்ள சப்தமாதர் வரிசையில் கொலுவிருக்கும் சாமுண்டி தேவியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் தேடி வரும்.
வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டு...

 சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும்

ஸ்ரீசரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம். ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட வேண்டும். (விக்கிரகம் என்றால் அதற்கு அபிஷேகம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம்). சரஸ்வதிக்கு உகந்தவை என்று சொல்லப்பட்ட வெள்ளைத் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூ ஆகியவற்றை சரஸ்வதிக்கு அணிவிக்கலாம்.
 இந்தப் பூக்களையே அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம். பழ வகைகளுடன், அவல், பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து வைக்கலாம். கடலை சுண்டல், வெண்பொங்கல், தேங்காய் சாதம், பால் சாதம், இனிப்பு வகைகள் போன்றவற்றையும் வைத்து நிவேதனம் செய்யலாம்.
மேலும், புத்தகங்கள், எழுதுகோல்கள், இதர கல்வி உபகரணங்கள், பயிற்சிகளுக்கான சாதனங்கள், கலைப்படைப்புகள், கருவிகள், தொழிலுக்கு உரிய ஆயுதங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றையும் வைத்துப் படைக்க வேண்டும். (கன ரகக் கருவிகளையும் இயந்திரங்களையும் அவை இருக்குமிடத்திலேயே சுத்தப்படுத்தி, சந்தனம் தெளித்து, மஞ்சள், குங்குமம் வைத்துத் தூப தீபம் காட்டலாம்.) ஜீவனத்துக்கு ஆதாரமான எந்தப் பொருட்களையும் படையலில் வைத்து ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபடலாம். பூஜை முடியும் போது ஆயுதங்களுக்கும் இயந்திரங்களுக்கும் எலுமிச்சம் பழங்களைச் சுற்றி அறுத்துக் குங்குமம் தடவிப் பிழிவது, கற்பூரம் ஏற்றப்பட்ட தேங்காயையும் குங்குமம் திணிக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காயையும் சுற்றி வாயிலில் போட்டு உடைப்பது போன்ற திருஷ்டிக் கழிப்புகளையும் தவறாமல் செய்ய வேண்டும்.
 ஆயுத பூஜை செய்ய உகந்த நேரங்கள்………
 1. அதிகாலை 5.03 மணி முதல் 6.02 வரை.
 2. காலை 10.34 மணி முதல் 11.03 வரை.
 3. மாலை 4.34 மணி முதல் 6.03 வரை.
 4. இரவு 7.33 மணி முதல் 8.03 வரை.
 மேலே குறிப்பிட்டபடி சரஸ்வதி பூஜை வழிபாடுகளை நடத்தலாம். காய்கறிகளின் கூட்டு, பொரியல், வறுவல், சாம்பார், ரசம், அப்பளம், வடை, பாயாசம் என்று உணவு தயாரித்துப் படையல் இட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள், அவ்விதமே உணவுகளை படைத்து நிவேதனம் செய்து வழிபடலாம். நவராத்திரி விரதத்தை முறையாக ஒன்பது நாட்களின் இரவிலும் கடைப்பிடித்து வருபவர்கள், சரஸ்வதி பூஜை தினத்தில் நவமி திதி உள்ள இரவு வேலையிலும் பூஜை செய்து நவராத்திரி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
 சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி ஏதாவது ஒருவேளை பூஜையை விரிவாகவும், ஏதாவது ஒருவேளை பூஜையைச் சுருக்கமாகவும் செய்து கொள்ளலாம். அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வசதி வாய்ப்புகளைப் பொறுத்து, காலை அல்லது மாலையில் ஒரே படையலாக இட்டுப் பூஜை செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒன்பது நாட்களிலும் வீட்டில் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜை தினத்தின் மாலையிலோ, இரவிலோ வழிபாடு நடத்தாமல் விடக்கூடாது! கட்டாயமாக மாலை அல்லது இரவில் வழிபாடுகள் நடத்தி, ஒன்பதாம் நாள் இரவோடு நவராத்திரி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
 கொலுவுக்கு வருகை தரும் பெண்மணிகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ, வாழைப்பழம், தாம்பூலம் ஆகியவற்றை வழங்குவது உகந்தது. வசதி படைத்தவர்கள், பிளாஸ்டிக், மரம் அல்லது வெள்ளியால் செய்த குங்குமச் சிமிழ்கள், ரவிக்கைத் துணிகள், சேலைகள், கலைப் பொருட்கள், தெய்வீகப் படங்கள், சிறிய விக்கிரகங்கள், இறைவழிபாட்டுப் பாடல்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக கொடுக்கலாம்.
சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும்

 சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும் ஸ்ரீசரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வா...

இன்றைக்கு இப்படம் கடைசி... ‘ஆர்க்குட்’!
பத்து வருஷத்துக்கு முன்னாடி 2004-ல ஜனவரி மாதம் 24-ம் தேதி கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்க்குட்டுக்கு இன்னிக்கு மூடுவிழா!
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஆர்க்குட் பய்யோக்கோக்டென் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கண்டுபிடிச்ச இந்த சமூகவலைதளம் நம்ம இந்தியர்களோட வாழ்க்கைல உண்டாக்குன பாதிப்பு கொஞ்சமா நஞ்சமா? 2006-ல உச்சத்துல இருந்த ஆர்க்குட் நம்ம வாழ்க்கையோட எப்படில்லாம் பின்னிப்பிணைஞ்சு இருந்துச்சுன்னு கொஞ்சம் கொசுவத்தியை சுத்தவிட்டு பார்ப்போமா?

* Fans, Friends, Scraps, Testimonials, Communities- இந்த வார்த்தைகள்லாம் தானே அப்போ நம்மளோட மைண்ட் பூரா ஆக்கிரமிச்சுக் கிடக்கும்!
* ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒவ்வொரு பொண்ணுகிட்டயும் ஸ்க்ராப் பண்ணினதை ஊரே பார்த்து கைகொட்டி சிரிச்சுச்சே...! அதை எல்லாம் மறக்க முடியுமா?
* மிரட்டியே 'நல்லவரு வல்லவரு'னு நம்மக்கிட்ட சிக்கின அடிமை எவனையாச்சும் ‘டெஸ்ட்டிமோனியல்’ எழுத வைப்போமே? அதைப் பார்த்து எவளாச்சும் நமக்கு ஃபேனாகி ஸ்க்ராப் பண்ணுவானுதானே கண்ணுல வெளக்கெண்ணெயை வெச்சுண்டு காத்துக் கெடந்தோம்!
* ‘உன் நண்பனைக் காட்டு... நீ யாரென்று சொல்லுகிறேன்!’ - இது பழைய பழமொழி. ‘உன் கம்யூனிட்டியை பார்த்தேன்...நீ மோசமான பேமானி!’ -இதானே 2006-ல ஆர்க்குட் புதுமொழி!
* இன்னிக்கு இன்பாக்ஸ்ல போய் வழிஞ்சாலும் வெளியே தெரியாது ஃபேஸ்புக் சாட்டிங் ரகசியக் காப்பு வசதி. இதுலாம் அன்னிக்கு ஆர்க்குட்ல இல்லாததால ‘ஸ்க்ராப்’ல போய் முரட்டுத்தனமா வழிஞ்சவய்ங்களோட அத்தனை ஸ்க்ராப்களையும் ஒவ்வொரு புரொபைலா போய் படிச்சு செமையாய் டைம் பாஸ் பண்ணினோமே...ஞாபகம் இருக்கா?
* கடவுள் பாதி மிருகம் பாதியா பூராப்பயலுகளும் ‘இறையன்பு ஐ.ஏ.எஸ் கம்யூனிட்டி’லயும் இருப்பாய்ங்கே ‘ஹாட் மல்லு ஆன்ட்டீஸ் கம்யூனிட்டி’லயும் இருப்பாய்ங்கேளே...ஞாபகம் இருக்கா ஜி?
* அந்த இளம் நீல வண்ணப் பக்கங்களில் பிங்க் கலர் ‘orkut’ என்ற வார்த்தை எவ்வளவு அழகு! தெறிக்க வைக்கிற கலர்கள்ல லேஅவுட்டை அடிக்கடி மாத்தி வெச்சு கெத்துக் காட்டுவோமே ஞாபகம் இருக்கா?
* பலபேரு நம்மளோட பழைய ஸ்கூல்மேட்களை இந்த கம்யூனிட்டிகள்லதானே கண்டடைஞ்சோம்? எத்தனை எத்தனை டவுசர்கால நண்பர்களை இதுல மீட்டெடுத்தோம்!
* இதுக்குப்பேருதான் செல்ஃபினு தெரியாமலே நம்மள்ல எத்தனைப் பேரு அப்பவே புரொபைல் படத்தை வெச்சு கெத்துக்காட்டினோம்னு ஞாபகம் இருக்கா?
* ‘இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ...
உன்னை விட Fans, Friends, Scraps அதிகமா சம்பாதிச்சி
நீ எப்படி பில்ட்-அப் கொடுக்கறியோ அதே மாதிரி நானும் கொடுக்கல...என் பேருல ஆர்க்குட் கம்யூனிட்டியை ஆரம்பிக்கல...நான் ஆர்க்குட் வெறியன் இல்லடா!’னு பஞ்ச் பேசுனோமே...அந்த கோல்டன் ஆர்க்குட் டைம் இனிமே வருமா?
* மாற்றம் என்ற சொல்லே மாறாதது!’ நாளைக்கு இதே நிலைமை ஃபேஸ்புக்குக்கும் வரலாம். அப்போ எப்படில்லாம் இப்படி மொக்கையா ஸ்டேட்டஸ் போடுவோம்னு இப்பவே யோசிச்சு வெச்சுக்கோங்க மக்களே!
* குட் பை ஆர்க்குட்!
இன்றைக்கு இப்படம் கடைசி... ‘ஆர்க்குட்’!

இன்றைக்கு இப்படம் கடைசி... ‘ஆர்க்குட்’! பத்து வருஷத்துக்கு முன்னாடி 2004-ல ஜனவரி மாதம் 24-ம் தேதி கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்க்குட...

தமிழக அமைச்சர்கள் பதவி ஏற்பை எதிர்த்து வழக்கு: இன்று மாலை தீர்ப்பு

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி, வக்கீல் என்.ராஜாராம் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழக முதல்– அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவுக்கு, ஊழல் வழக்கில் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா பொதுச் செயலாளராக உள்ள அ.தி.மு.கவை சேர்ந்தவர்களை முதல்–அமைச்சராகவும், பிறத்துறைகளின் அமைச்சர்களாகவும் பதவி ஏற்க அனுமதிக்க கூடாது. அந்த கட்சியை சேர்ந்தவருக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்றும் கடந்த 29–ந்தேதி தமிழக கவர்னரின் செயலாளர், தலைமை செயலாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் பரிசீலிக்கவில்லை.

எனவே, என் மனுவை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல் ராஜாராம் ஆஜராகிவாதிட்டார். இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை இன்று மாலையில் பிறப்பிப்பதாக கூறி வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்கள்.
தமிழக அமைச்சர்கள் பதவி ஏற்பை எதிர்த்து வழக்கு: இன்று மாலை தீர்ப்பு

தமிழக அமைச்சர்கள் பதவி ஏற்பை எதிர்த்து வழக்கு: இன்று மாலை தீர்ப்பு சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி, வக்கீல் என்.ராஜாராம் ஆகியோர் ...

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஆவியானது ஏன் ஆய்வு செய்யும் மங்கள்யான்

சென்னை: செவ்வாய்க் கிரகத்தில் இருந்த  தண்ணீர் ஏன் ஆவியானது என்பது குறித்து மங்கள்யான் மிகத் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கிரகத்தில் ஆறுகள் இருந்துள்ளன. பின்னர் அவை முற்றிலும் வறண்டு அவற்றில் இருந்த தண்ணீர் ஆவியாகிவிட்டது.
இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் இருந்த  தண்ணீர் ஏன் ஆவியானது என்பது குறித்த ஆய்வை மங்கள்யான் மேற்கொள்கிறது மங்கள்யான். அத்துடன் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலம்,மேற்பரப்பு ஆகியவற்றையும் தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளது மங்கள்யான். இதனால் இன்னும் பல்வேறு அறிவியல் சுவாரஸ்யங்கள் வெளிவரும்.

மேலும்,செவ்வாய்க் கிரகத்தில் நீர் இல்லாமல் போனது எதனால் என்பதை கண்டு பிடிப்பதன் மூலம் நாம் வாழும் பூமியில் தண்ணீர் இல்லாமல் போவதைத் தடுக்க இயலும்.அங்கு மனிதர்கள் குடியேறும் சூழல் வந்தால் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வழியையும் கண்டு பிடிக்கலாம்.மேற்பரப்பு ஆய்வின் மூலம் கனிம வளம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இந்த ஆய்வு, செவ்வாய்க் கிரக ஆய்வில் முக்கியப்படி நிலை என்பது அறிவியலாளர் கருத்தாக உள்ளது
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஆவியானது ஏன் ஆய்வு செய்யும் மங்கள்யான்

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஆவியானது ஏன் ஆய்வு செய்யும் மங்கள்யான் சென்னை : செவ்வாய்க் கிரகத்தில் இருந்த  தண்ணீர் ஏன் ஆவியானது என்பது ...

'யான்' - ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் வீடியோ!


'யான்' - ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் வீடியோ!

'யான்' - ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் வீடியோ!

ஜெயா நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கும் காட்சி !


இது போன்ற காட்சிகளை ஏன் எந்த தமிழ் செய்திகள் தொலைகாட்சிகளும் வெளியிட வில்லை .

ஜெயா நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கும் காட்சி !

ஜெயா நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கும் காட்சி ! இது போன்ற காட்சிகளை ஏன் எந்த தமிழ் செய்திகள் தொலைகாட்சிகளும் வெளியிட வில்லை .

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. அதில் 90 சதவீதம் தவறானவை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மை நிலையை அறிந்து கொள் வதற்காக சிறையில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தவர்களிடமும் சில சிறைத்துறை அதிகாரிகளிடமும் பேசினோம். அவர்கள் அளித்த தகவல் வருமாறு:
வருமான வரி செலுத்துபவர் என்ப தாலும், முக்கிய அரசியல் தலைவர் என்பதாலும் பரப்பன அக்ரஹாரா சிறை யில் ஜெயலலிதாவுக்கு ‘ஏ-கிளாஸ்' அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ‘விஐபி'கள் அடைக் கப்பட்டுள்ள பகுதியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கட்டிடம் இல்லை. எனவே மற்ற விஐபிகள் இருக் கும் பகுதியிலேயே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் இருக்கிறார்கள்.
மேலும் ஜெயலலிதாவின் உடல் நிலையையும் வயதையும் கருத்தில் கொண்டு சிறைத்துறை நிர்வாகம் அவருக்கு அதிக‌ கட்டுப்பாடுகளை விதிக்க வில்லை. அதேபோல நீதிபதி டி'குன்ஹா வும் ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து எதுவும் தெரிவிக்க வில்லை. எனவே சிறைத்துறை விதிமுறை களின் அடிப்படையில் அவருக்குஅனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா தங்கியிருக்கும் அறையில் கலர் டி.வி., மின்விசிறி, மெத்தையுடன் கூடிய கட்டில், மேஜை நாற்காலி ஆகிய வையும் இருக்கின்றன. அறையுடன் இணைந்த தனி கழிப்பறை வசதியும் இருக்கிறது. அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு வெளியிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது.
மேலும் ஜெயலலிதாவுக்கு கைதிகளுக் கான வெள்ளை சீருடையும் வழங்கப்பட வில்லை. வழக்கமான உடைகளை அணிந்து கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. எனவே அவருடைய உதவியா ளர்கள் இரண்டு சூட்கேஸ்களில் உடைகளை கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.
மருத்துவ வசதி
ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தினமும் காலை 9 மணிக்கும் மாலை 7.30 மணிக்கும் சிறை மருத்துவர் பரிசோதனை மேற்கோள்கிறார். தேவையான நேரத்தில் முதலுதவி செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரது குடும்ப மருத்துவர் திங்கள்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து சில பரிசோதனைகளை செய்தார். மேலும் அவருக்கு தேவையான மருந்து, மாத் திரைகளையும் வழங்கியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, இதயக்கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் எண்ணெய் தவிர்த்த உணவை சாப்பிடுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளார். எனவே அதிக அளவில் பச்சைக் காய்கறிகள், பால், மோர், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுகிறார். இது தவிர வெளியிலிருந்து கொண்டுவரப்படும் இட்லி, பிரட், சாண்ட்விச் மற்றும் வீட்டில் சமைத்து கொண்டுவரப்படும் உணவையும் சாப்பிடுகிறார். உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகளை வைத்துக் கொள் வதற்காக அவருக்கு குளிர்சாதன வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
நடை பயிற்சி மேற்கொள்கிறார்
கடந்த இரு தினங்களாக காலை 5.30 மணிக்கு எழுந்துகொள்ளும் ஜெய லலிதா, விஐபிகளுக்கான பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்கிறார். காலை 7.30, மதியம் 12.30, இரவில் 8 மணிக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. இடையில் சசிகலா, இளவரசி ஆகியோரை சந்தித்து பேசவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தன்னை பரிசோதிக்க வரும் மருத்துவர், சிறை காவலர்களிடம் சரளமாக கன்னடத்தில் பேசுகிறார். சில நேரங்களில் சசிகலா, இளவரசிக்கு தேவையான வசதிகளையும் சிறை அதிகாரிகளிடம் கன்னடத்தில் பேசி செய்து தருகிறார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க தினமும் காலையில் 3 தமிழ், 2 ஆங்கில செய்தித்தாள்க‌ள் வழங்கப்படுகின்றன.
ஜெயலலிதா நள்ளிரவு வரை விழித்துக்கொண்டிருக்கிறார். பெங்களூரில் தற் போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மின்விசிறி காற்றிலேயே நன்றாக தூங்க முடிகிறது என தன்னை பார்க்க வருப‌வர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல தன்னை யார் பார்க்க வர வேண்டும் என அவர் அனுமதி அளிக்கிறாரோ, அவர்கள் மட்டுமே சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தனர்.
சுதாகரனுக்கு சிகிச்சை
சிறையில் ஜெயலலிதா வசதியாக இருக்கும் அதேநேரத்தில் சசிகலாவும், இளவரசியும் மனம் உடைந்து போய் இருக் கிறார்கள். அவ்வப்போது அவர்களுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சுதாகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதாகரனுக்கு இதுவரை 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பா இருந்த அறை
நிலமோசடி புகாரில் சிறைக்கு சென்ற கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அடைக்கப்பட்டிருந்த அறையில்தான் ஜெய லலிதா அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரி நியமனம்
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக‌ சிறைத்துறை ஏடிஜிபி ககன் தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஐபி கைதிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளித்துவரும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. க‌கன் தீப்புக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்துக்கு வெளியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவை காணவரும் அனைவரும் சிறை வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்படுகின்றனர். ககன்தீப் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கிருஷ்ணய்ய ஷெட்டி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ கிளாஸ் வசதி... வீட்டு சாப்பாடு... வெள்ளை சீருடை இல்லை! - பரப்பன அக்ரஹாராவிலிருந்து லைவ் ரிப்போர்ட்

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் குறித்தும் பல்வேறு செய...

முதலில் பந்தா காட்டிவிட்டு, பிறகு கெஞ்சிய ராம் ஜெத்மலானி

ஜெயலலிதா ஜாமீன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரத்னகலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிருந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் மனு தொடர்பாக வாதாட தமக்கு அரசிடமிருந்து ஒப்புதல் அல்லது உத்தரவு வரவில்லை என்று சொன்னார்.
அப்போது ஜெயலலிதா தரப்பில் வாதாடிய ராம்ஜெத்மலானி, அரசு தரப்பு வாதாட முன்வரவில்லையென்றால் உடனே ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கவேண்டும் என்று கூறினார்.  ஆனால் நீதிபதி இதற்கு ஒத்திவைக்கவில்லை..
தான் ஒரு மூத்த வக்கீல் என்றும் இந்த வழக்கிற்காக லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும், உடனே அமெரிக்கா செல்லவண்டும் என்றும் ஜெத்மலானி கூறினார்.
ஆனால் நீதிபதி ரத்னகலா, யாராக இருந்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் ஒரு தரப்பு வாதத்தை வைத்து தாம் முடிவுக்கு வரமுடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
விசாரணையை பிற்பகல் இரண்டரை மணிக்காவது தள்ளிவைக்கவேண்டும் என்று ஜெத்மலானி  பத்து நிமிடங்களுக்கு மேலாக கெஞ்சிப்பார்த்தார்.. ஆனால் நீதிபதி சம்மதிக்கவேயில்லை.
வேண்டுமென்றால், தலைமை நீதிபதி வீட்டுக்கு சென்று முறையிட்டுக்கொள்ளுங்கள் அதற்கு உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டு மனு விசாரணையை அக்டோபர் ஆறாம் தேதி அதாவது வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்
வழக்கை தள்ளிவைப்பதோ, அல்லது தலைமை நீதிபதியை கலந்தாலோசிப்பதோ உங்கள் விருப்பம் என்று நீதிபதி ரத்னகலாவிடம் அவர் கூறினார். இதையடுத்து வழக்கை திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்
முதலில் பந்தா காட்டிவிட்டு, பிறகு கெஞ்சிய ராம் ஜெத்மலானி

முதலில் பந்தா காட்டிவிட்டு, பிறகு கெஞ்சிய ராம் ஜெத்மலானி ஜெயலலிதா ஜாமீன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரத்னகலா முன் விசாரணைக்கு வந்...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு வருத்தம் தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். அதன் புகைப்படத் தொகுப்பு

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்










ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்! - புகைப்படத் தொகுப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு வருத்தம் தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப்...

பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பிலும் தனித்தனியே ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவர்கள் சார்பில் வக்கீல்கள் வேணுகோபால், அம்ஜத் பாஷா, செந்தில், பன்னீர் செல்வம், சீனிவாசன், திவாகர், மூர்த்திராவ், அன்புக்கரசு, அசோகன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
செப்டம்பர் 29–ந்தேதி முதல் அக்டோபர் 5–ந்தேதி வரை கர்நாடக ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை கால அமர்வு முன் இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.
காலை 10.15 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே விடுமுறை கால அமர்வு செயல்படும். இதை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், அரவிந்த் குமார், ரத்னகலா ஆகியோரில் ஒருவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுக்களை விசாரிப்பார்.
இந்த மனுக்கள் இன்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜராகிறார்.
இதற்காக அவர் நேற்று பெங்களூர் வந்தார். அங்கு அவர் ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சசிகலாவுக்காக பிரபல மும்பை வக்கீல் அமீத்தேசாய் கர்நாடக கோர்ட்டில் ஆஜராகி வாதாடுகிறார்.
ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தவறானது, சட்டப்படிதான் அவர் சொத்துக்கள் வாங்கினார். எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை வலியுறுத்தி ராம் ஜெத்மலானி வாதாடுகிறார். ஜெயலலிதா தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கிறார்.
ஜாமீன் மனு விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் பவானி சிங்கும் ஆஜராகப் போவதாக தெரிவித்து இருந்தார். எனவே அவரும் இன்று ஆஜராகிறார். பதில் மனு தாக்கல் செய்ய அவர் கால அவகாசம் கோருவார் என்று தெரிகிறது.
எனவே ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்படலாம் என்றும் அதுவரை ஜெயலலிதாவுக்கு வேறு இடத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழக முதல்–அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், டாக்டர் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பி.வி.ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் சென்றனர்.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு போய்ச் சேர்ந்தனர். ஜெயிலில் இருப்பவர்களை மாலை 6 மணி வரைதான் பார்க்க முடியும் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.
இதையடுத்து பெங்களூர் ஓட்டலில் தங்கிய அவர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுக்கள் பற்றி வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்துக்கு சென்றனர்.
அங்கு ஜெயலலிதாவை சந்திப்பதற்கு சிறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்று சந்திக்கிறார்கள்.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த...

திமுக கூறிய குற்றச்சாட்டு என் மனதை பாதித்தது: வக்கீல் பவானிசிங் பேட்டி


சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது. அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே. காரணம் இந்த வழக்கில் தொடர்புடைய சொத்துகளின் இன்றைய மதிப்பு அதைவிட அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமாக படிப்பேன். 

ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே கோர்ட்டில் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். 

அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து எனக்கு அதிக நெருக்கடி இருந்தது. ஆனால் நான் அதற்கெல்லாம் பணியவில்லை. நான் எனது பணியை ஆற்றினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நேர்மையாக பணியாற்றினேன். ஆனால் என் மீது தி.மு.க. பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது. இது எனது மனதை பாதித்தது. ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்துவிடலாமா? என்று கூட ஆலோசித்தேன். 

ஆனால் இந்த வழக்கில் ஆஜராகி திறமையாக செயலாற்றி குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு தண்டனை பெற்று தந்துள்ளேன். என் மீது கூறப்படும் தவறான தகவல்களை நான் கண்டுகொள்வது இல்லை. என் மீது குற்றச்சாட்டுகளை கூறியவர்கள்(தி.மு.க.) இப்போதாவது என்னை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். 

எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை. 

இவ்வாறு அரசு சிறப்புவக்கீல் பவானிசிங் கூறினார்.
-malaimalar-
திமுக கூறிய குற்றச்சாட்டு என் மனதை பாதித்தது: வக்கீல் பவானிசிங் பேட்டி

திமுக கூறிய குற்றச்சாட்டு என் மனதை பாதித்தது: வக்கீல் பவானிசிங் பேட்டி சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசு சிறப...

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் 'ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்...

''66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.  இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர், பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். வருமானத்துக்கு
அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா),  மூன்றாவது ( சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி 'கூட்டுச்சதி (criminal conspiracy)’  செய்தல் குற்றமாகும்.
இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி 'குற்றத்துக்கு உடந்தை (aiding and abet)’  என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. ஒவ்வொருவருக்குமான தண்டனை விவரங்களைப் பிறகு அறிவிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்.''- நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இப்படி வாசித்து முடித்ததும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரோடு அவர்களுடைய வழக்கறிஞர்களின் முகமும் இருண்டு போனது. அப்போது நேரம் 11.30 மணி!
அப்போதே ஜெயலலிதாவின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. அந்த ஒரு நிகழ்வே நீதிமன்ற அறைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு நிலைமையை உணர்த்திவிட்டது. அனைவரும் சோகத்தில் மரத்தடியில் அமர்ந்துவிட்டனர்.
மீண்டும் வாதங்கள்!
மாலையில் நீதிபதி குன்ஹா தண்டனை விவரத்தை வாசித்தார். ''குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன். வழக்குத் தொடரப்பட்டபோது வழக்கில் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். அது அரசாங்க மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அபராதத் தொகை அதற்கேற்றவாறு கணக்கிடப்பட்டு நூறு கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி, இந்த அபராதத்தைக் கட்டாத நிலையில் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுபோல, மற்ற குற்றவாளிகள் தங்களது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்று முடித்தார்.
'பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை மிகச் சாதாரணமாகச் சாதித்துவிடும் எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம்’ என்று விதிக்கப்பட்டது இல்லை. இத்தனை பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்ட முதல் அரசியல்வாதி, முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
''இப்போது இந்த அபராதம் பற்றி தவறான தகவல்கள் வருகின்றன. அதாவது, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் சொத்துகள் போக, மீதம் 34 கோடி ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்று சொல்கின்றனர். ஆனால், தீர்ப்பில் நீதிபதி அப்படிச் சொல்லவில்லை. 100 கோடி ரூபாய் அபராதம் என்பது தனியானது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தினுடையவை. ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது அவருடைய வருமானத்தைத் தாண்டி அவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் வருவாய்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருந்த சொத்துகள் அனைத்தும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அது தவிர்த்து, தனியாக 100 கோடி ரூபாயை அபராதமாக ஜெயலலிதா கட்ட வேண்டும். அதுவும் முறையான கணக்கு வழக்கு காட்டப்பட்ட பணத்தில் கட்ட வேண்டும். அந்த அபராதத்தைச் செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர் மேல்முறையீட்டுக்கோ அல்லது ஜாமீன் கேட்டோ விண்ணப்பிக்க முடியும்'' என்று நீதித்துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
மேல் முறையீடும் அப்பீலும்!
இந்த வழக்கில் மேல்முறையீடும் (அப்பீல்) ஜாமீனும் தனித்தனியாகக் கிடையாது. மேல்முறையீடு செய்யும்போது, 'நான் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்கிறேன். எனக்கு ஜாமீனும் வழங்க வேண்டும்’ என்று மனுச்செய்ய வேண்டும். ஆனால், தீர்ப்பின் நகல் இவர்கள் கையில் கிடைக்கும் வரை அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும் மேல்முறையீடு செய்யும்போது அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி அதற்கான ரசீதை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனு விசாரணைக்கே ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தொகை அதிகம் என்றும் கட்டுவதில் சிரமம் என்றும் சொன்னால், அதற்காகத் தனியாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தீர்ப்பு வரும் வரை சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடுக்கும் ஜாமீனுக்கும் விண்ணப்பிக்க முடியாது.
வழக்குச் செலவை யார் கொடுப்பது?
சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அந்தச் செலவை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை தமிழக அரசு கட்டத் தவறினால், ஜெயலலிதா 1991-க்கு முன்பாக தனக்கு இருந்ததாகக் காட்டியுள்ள சொத்துகளை விற்று அந்த ஐந்து கோடியைக் கட்ட வேண்டும்.
போயஸ் கார்டன்!
போயஸ் கார்டன் வீட்டுக்கு ஏதாவது பிரச்னை வருமா? என்ற சந்தேகம் கிளப்பப்படுகிறது. ''அந்த வீடு ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராவதற்கு முன்பாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் அந்த வீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்ட பகுதிகள், செய்யப்பட்ட ஆடம்பர வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்கள் அரசுடைமையாகும்'' என்று சொல்லப்படுகிறது.
காவல் துறையிடம் ஜெயலலிதாவின் கார்!
ஜெயலலிதாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்தது. அதற்கான சிகிச்சை அளித்தனர். அரை மணி நேரத்தில் ரத்த அழுத்தம் சீரானது. அதன்பிறகு, நான்கு பேரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அவரை அவர்கள் பொறுப்பில் இருந்து தங்கள் கஸ்டடியில் எடுப்பதற்குள் கர்நாடக மாநில காவலர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டது.  இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையினர், 'எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால்தான், நாங்கள் அவரை அனுப்புவோம்’ என்றனர். இதில் டென்ஷனான கர்நாடக மாநில போலீஸார், 'நீதிமன்ற உத்தரவைக் கேட்டீர்கள் அல்லவா? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் அவர் பதவி உட்பட அவருக்குரிய சலுகைகள் அனைத்தையும் இழந்தவராகிறார். நாங்கள் எழுத்துப்பூர்வமாக கொடுப்பதற்கு எந்த அவசியமும் இல்லை’ என்றனர். அதன்பிறகு ஜெயலலிதாவை கர்நாடக காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு, ஜெயலலிதாவின் காரில் அவரை அழைத்துச் சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில், எண் 7402 அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மணி சரியாக இரவு 8.20.
ஜோ.ஸ்டாலின்
படம்: ரமேஷ் கந்தசாமி
-vikatan-
53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா! ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பி...