Ads (728x90)

2009 ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி, Ashley Parham தன்னுடைய 2001 ஹோண்டா அக்கார்டு காரை அவருடைய பள்ளி பார்க்கிங் பகுதியில் நகர்த்தும்போது, இன்னொரு காரின்மீது லேசாக மோத, அந்த இடத்திலேயே கழுத்து அறுபட்டு உயிரிழக்கிறார் ஆஷ்லி.

2012ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை காலம். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ஒரு மாலை நேரம், தன்னுடைய 3 குழந்தைகளுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு 2001 மாடல் ஹோண்டா அக்கார்டு காரை ஓட்ட ஆரம்பிக்கிறார்  Guddi Rathore. ஒருவளைவில், முன்னே வந்த டெலிவரி வேன் மீது லேசாக இடித்துவிட, அந்த இடத்திலேயே தன் 3 குழந்தைகளின் முன்னிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துவிடுகிறார்  Guddi Rathore.
இதுபோன்று ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் ஹோண்டா கார்களில் மேலும் 30 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள அனைத்து கார் நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 139 பேருக்கு இதேபோன்று பலத்த காயங்கள், பல்வேறு நிறுவனங்களின் கார்களில் பயணிக்கும்போதோ/ஓட்டும்போதோ ஏற்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நிஸான், ஹோண்டா என இரண்டு கார் நிறுவனங்கள் 11,338 கார்களை திரும்ப அழைத்திருக்கிறார்கள். ஆட்டோமொபைல் துறையில் இதை 'Recall' நடவடிக்கை என்று அழைப்பார்கள். இந்த நடவடிக்கைகளுக்கும் மேலே கூறப்பட்ட அந்த விபத்துகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த விபத்துகளில், காரின் காற்றுப் பை மிகவும் சக்திவாய்ந்த முறையில் வெடித்து, ஸ்டீயரிங் வீலுக்குள் உள்ள  உலோகப்பாகங்கள் முன்னே அமர்ந்திருப்பவர்களின்மீது வீசப்பட்டு, அவர்களின் கழுத்து நரம்புகள் அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

நிஸானும், ஹோண்டாவும் கார்களைத் திரும்ப அழைத்ததற்கு காரணமும் அதேதான். அது Airbag என்று அழைக்கப்படும் 'காற்றுப் பை'. வரும் நாட்களில் இந்தியாவில் இன்னும் சில கார் நிறுவனங்கள் தங்களுடைய கார்களை இதே காற்றுப் பைக்காக திரும்ப அழைக்க இருக்க வாய்ப்பிருக்கின்றன. ஏன்? வேலியே பயிரை மேய்ந்த கதை இது!
இன்றைய கார்களின் மிக அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக இருப்பவை இரண்டு தொழில்நுட்பங்கள். ஒன்று சீட் பெல்ட், மற்றொன்று Airbag என்று அழைக்கப்படும் காற்றுப் பை. வெளிநாடுகளில் காற்றுப் பைகள் அனைத்து கார்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. நம்நாட்டில், 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை கொண்டிருக்கும் கார்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால், அவற்றின் விலை உயர்ந்த மாடலில் மட்டும்தான் காற்றுப்பை இருக்கும். சொகுசு கார் என்றால் மட்டும், ஸ்டாண்டர்டாகவே காற்றுப் பை பொருத்தப்பட்டே வரும்.

கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த காற்றுப் பையையும் மற்ற பாகங்கள்போல் சப்ளையர்கள் செய்து கொடுப்பார்கள். அப்படி உலகம் முழுக்க உள்ள கார்களில் சுமார் 20 சதவிகிதம் கார்களின் காற்றுப் பைகள் Takata எனும் ஜப்பானிய நிறுவனத்தின் தயாரிப்பு. இவர்கள் தயாரித்த காற்றுப் பைகளில் 2001ஆம் ஆண்டு முதல் 2008 வரை தயாரிக்கப்பட்டவைகளுள் சில பைகள் தயாரிப்புக் குறைபாடு கொண்டவை. இவை மக்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, மக்களைக் கொன்று விடுமோ என்ற பயத்தில்தான் இந்த 'திரும்ப அழைக்கும்' நடவடிக்கை.

காற்றுப் பையில் என்ன பிரச்னை?

விபத்தின்போது விரிவடைந்து, ஓட்டுனரையோ, அல்லது பயணியையோ காக்கவேண்டும் என்பதுதான் காற்றுப் பைக்கான வேலை. ஆனால், Takata தயாரித்த கோளாறுள்ள காற்றுப் பைகள் வெடித்தால், அதன் கீழே இருக்கும் இன்ஃப்ளேட்டரின் உலோகப் பாகங்களையும் சேர்த்து முகத்திலும், உடலிலும் வீசிவிடும். இதனால், காற்றுப் பை முன்னே அமர்ந்திருப்பவருக்கு தீவிர காயங்கள் ஏற்படுத்திவிடும். உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவிடமுடியும்.

முதலில் Takata நிறுவனம், தன்னுடைய தொழிற்சாலைகளில் காற்றுப் பைகளில் பயன்படுத்தப்படும் propellant கெமிக்கல்களை முறையாகக் கையாளவில்லை என்பதால், காற்றுப் பைகளுக்குள் இருக்கும் இந்த கெமிக்கல்கள் அதிக அழுத்தத்தில் இருக்கும் என்றும், அவை வெடிக்கும்போது மிக உயர் அழுத்தத்தில் வெடிக்கும் என்றும் கூறியது. பிறகு திடீரென்று பல்டியடித்து காற்றில் ஈரப்பதம் குறைந்தால், இதுபோன்று வெடிக்கும் என்று கூறி பீதியைக் கிளப்பியது. 2002ல் மெக்ஸிகோவில் இருக்கும் Takata தொழிற்சாலையில், Defect rate எனப்படும் 'குறைபாடு விகிதம்' மிக அதிகமாக இருந்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அதாவது 10 லட்சம் காற்றுப் பைகளில் சுமாராக 70 காற்றுப் பைகளில் பிரச்னை இருந்ததாம்.
இப்போதுவரை, காற்றுப் பைகள் இப்படி மோசமான நிலையில் வெடித்ததற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

2001ஆம் ஆண்டில் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு கார் நிறுவனங்கள் இதே பிரச்னைக்காக கார்களை திரும்ப அழைத்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால், 2012ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்குபின் அமெரிக்க அரசின் NHTSA (National Highway Traffic Safety Administration) விழித்துக்கொள்ள, அனைத்து கார் தயாரிப்பாளர்களையும் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தது. அதிபர் ஒபாமாவின் நேரடிப்பார்வையின் கீழ் இந்த விஷயம் உள்ளது. இப்போது பிரச்னையுள்ள Takata காற்றுப் பைகளை வாங்கியுள்ள நிறுவனங்கள் எவை தெரியுமா? டொயோட்டா, ஹோண்டா, மாஸ்டா, பிஎம்டபிள்யூ, நிஸான், மிட்சுபிஷி, சுபாரு, கிரைஸ்லர், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள். இவற்றின் 78 லட்சம் கார்கள் அமெரிக்காவில் இப்போது திரும்ப அழைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலக அளவில் கோடிக்கணக்கான கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுவிட்டன. உலகிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளர்ந்து வருகிறது இந்த பிரச்னை.

இப்போது திரும்ப அழைக்கப்பட்ட கோடிக்கணக்கான கார்களில் மாற்றிப் பொருத்துவதற்கான காற்றுப் பைகள் Takata நிறுவனத்திடம் இருக்கிறதா? எப்படி இந்த பிரச்னையைக் கையாளப்போகிறது Takata?

இந்தியாவில் இப்போதுதான் நிஸான், ஹோண்டா என இரண்டு நிறுவனங்கள், பிரச்னையை சரி செய்வதற்காக கார்களை திரும்ப அழைத்திருக்கின்றன. இன்னும் இந்தியாவில் இருக்கும் எத்தனை கார் நிறுவனங்களுக்கு Takata காற்றுப்பைகளை சப்ளை செய்தது என்று தெரியவில்லை.

மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வாசகர், 'கார்களை திரும்ப அழைக்கலாம். உயிரை திரும்ப அழைக்க முடியுமா?' என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை, கார் நிறுவனங்களுக்கு இருக்கிறது!

ர. ராஜா ராமமூர்த்தி

2009 ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி, Ashley Parham தன்னுடைய 2001 ஹோண்டா அக்கார்டு காரை அவருடைய பள்ளி பார்க்கிங் பகுதியில் நகர்த்தும்போது, இன்ன...

கத்தி திரைப்பட நாயகன் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகளின் போது 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய வசனம் இடம்பெற்றிருந்தது. 2ஜி வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது ஊழல் நடந்ததாக வசனம் இடம்பெற்றது பற்றி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து ராமசுப்பிரமணியன் என்பவர் இன்று சென்னை நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில், “2ஜி அலைக்கற்றை வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது அதில் ஈடுபட்ட அனைவரும் ஊழல் செய்தவர்களே என்று எப்படி அந்தத் திரைப்படம் கருத்து கூற முடியும்?
அந்தக் குறிப்பிட்ட வசனம் அனைவரையும் மோசமாக சித்தரித்துள்ளது. அவர்களது மரியாதைக்குக் களங்கம் விளைவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பதிவு செய்த அனுமதித்த நீதிமன்றம், இதன் மீதான விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
2ஜி-யை விமர்சித்த 'கத்தி': விஜய், முருகதாஸ் மீது அவதூறு வழக்கு

கத்தி திரைப்பட நாயகன் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கத...

விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்கு வர உள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமா வதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.
இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத் தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம் இந்த விமானத் தில் பயணம் செய்யும் பயணிகள், இன்டர்நெட்டில் உலவிக் கொண்டே வான்வெளி யில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும் போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல் பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன்கள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்ப டுத்தப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஜன்னல் இல்லாத ஸ்மார்ட்ஸ்கிரீனை சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள்.
சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை ‘வெளிப் புறத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய ஜன்னல்கள் இல்லாத கேபின்’ என கூறுகிறார்கள். ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்
உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்: பயணிகள் வான்வெளியை ரசிக்க முடியும்

விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேந...

கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.

வடிவக் கணக்குகள்
பரப்பளவு எனும் தலைப்பில் சொடுக்கினால் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், நாற்கரம் எனப் பல வடிவங்களுக்கான எளிமையான கணக்கீட்டு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்வு செய்தால் அந்த வடிவத்திற்கான சில கணக்கீட்டு முறைகள் அதற்கான வழிமுறைகள் (Formula) உடன் கிடைக்கிறது.
புள்ளியியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் புள்ளியியல் தொடர்பான பல்வேறு கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் நமக்குத் தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து சொடுக்கினால் கிடைக்கும் கணக்கீட்டுக் கருவியின் கீழுள்ள காலிப்பெட்டியில் நம்மிடமுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையை உடனடியாகப் பெற முடியும்.
எண் கணிதம்
எண்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால் எண்கள் தொடர்பான கணக்குகளுக்கான பல கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. வர்க்கமூலம் (Square Root), சதவிகிதம் (Percentage), தசமப் பின்னம் (Decimal Fraction), மறுநிகழ்வுப் பின்னம் (Recurring Fraction), மடக்கைக் கணக்கீட்டு கருவி (Logarithmic Calculator), கூட்டு வட்டி (Compound Interest), ரோமானிய எண்கள் (Roman Numbers), தங்க விகிதக் கணக்கீட்டு கருவி (Golden Ratio Calculator) என்பது போன்று பல தலைப்புகளில் கணக்கீட்டு கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கீட்டு கருவிகளில் தேவையானதைத் தேர்வு செய்து அதற்குள் இருக்கும் காலிப்பெட்டிகளில் நம்மிடமுள்ள அளவுகளை உள்ளீடு செய்து அதற்கான விடையைப் பெறலாம்.
வேடிக்கைக் கணக்குகள்
நிற மாற்றிகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் வேடிக்கைக் கணக்குகள் எனும் தலைப்பில் விலங்குகளின் வேகம் (Animal Speed), பீர் இழப்பு (Beer Loss) எனும் இரு கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. இதில் விலங்குகளின் வேகம் எனும் கணக்கீட்டு கருவியில் சொடுக்கினால் தூரம் எனும் தலைப்பில் ஒரு காலிப்பெட்டி கிடைக்கிறது. இதனருகில் மைல், கிலோமீட்டர், மீட்டர் எனும் அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.
காலிப்பெட்டியில் தூரத்தினை உள்ளீடு செய்து அதற்குரிய அளவையும் தேர்வு செய்து கீழுள்ள முடிவு எனும் பொத்தானை அழுத்தினால் சிங்கம், சிறுத்தைப் புலி, டயனோசர், யானை, வரிக்குதிரை, முயல், கங்காரு, பூனை, நரி, அணில், பன்றி, ஆமை, நத்தை, எறும்பு ஆகியவைகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதன் வலப்புறம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலங்குகள் உள்ளீடு செய்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் மணி: நிமிடம்: வினாடி: மி.வினாடி எனும் அளவுகளில் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து ஒவ்வொரு விலங்கும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் கடக்க எடுத்துக் கொண்ட தொலைவும், அதற்கடுத்து விலங்குகள் ஓட்டத்தில் பெற்ற இடத்தின் மதிப்பும் தரப்பட்டுள்ளன. பீர் இழப்பு எனும் தலைப்பில் சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து முடிவுக்கான பொத்தானை அழுத்தினால் விலை வடிவிலான இழப்புகள், வாரம், மாதம் கால அளவுகளிலான இழப்புகள் மற்றும் மொத்த இழப்புகள் போன்றவை கிடைக்கின்றன.
இதுபோல முக்கோணவியல், பகுப்பாய்வு வடிவியல், அணிகள், இயற்கணிதம், மாற்றிகள் எனும் தலைப்புகளிலும் கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து அங்குள்ள காலிப்பெட்டிகளில் நம்மிடம் உள்ள அளவுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையைப் பெற முடியும்.
மொத்தத்தில் இந்த இணைய தளம் பல்வேறு கணக்கீட்டுக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் பயன் தருவதாக உள்ளது. இந்த இணையதளத்திற்குச் செல்லhttp://easycalculation.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.
- தேனி. மு. சுப்பிரமணி
கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!

கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்...

மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! நெல்லை மாவட்டம் அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் .

அத்ரி முனிவர் வழிபட்ட சிவாலய ஸ்தலமான அத்ரிமலையில் உள்ள பாலை மரம் என்கிற ஒரு அரிய வகை மரத்தில் பங்குனி மாதத்தின் கடைசி 5 நட்கள் சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் 2 நாட்கள் மட்டும் மரத்தின் நிறத்தை ஒத்த பல்லாயிரக்கணக்கான வண்டுகள்( நம் கண்களுக்கு தெரியாது) கிளைகளில் கூடி தங்கள் உடம்பிலிருந்து சுரபிகள் வழியாக நீரை போன்ற திரவங்களை தெரித்தடிக்கும் . நம் பார்வைக்கு , மரத்தடியில் மட்டும் மழை பெய்வது போலத் தோன்றும் , ஆகையால் இந்த மரத்திற்கு அமிர்தவர்ஷிணி என்ற மற்றொரு பெயரும் உண்டு .

மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! நெல்லை மாவட்டம் அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் .

மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! நெல்லை மாவட்டம் அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் . அத்ரி முனிவர் வழிபட்ட சிவாலய ஸ்தலமான அத்ரிமலையில் ...


வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்,,,,,,,,,,, என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால், மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர். உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும்.

 கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

உடற்பயிற்சி மய்யத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான். மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்
வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்,

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்,,,,,,,,,,, என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லத...

ந்தியச் சந்தையில், கவாஸாகியின் விலை குறைந்த பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. கவாஸாகியின் இந்த லேட்டஸ்ட் பைக்கின் விலை  2.99 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).


டியூப் டயமண்ட் ஸ்டீல் ஃப்ரேம் மூலம் கட்டமைக்கப்பட்ட Z250, பார்ப்பதற்கு Z800 பைக் மாடலைப்  போல இருக்கிறது. இதன் வீல்பேஸ் 1,400 மிமீ, எடை 168 கிலோ. 17 லிட்டர் பெட்ரோல் டேங்கைக் கொண்டிருக்கிறது. முன்பக்கம் டூயல் செமி-ஃப்ளோட்டிங் 300 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 220 மிமீ சிங்கிள் பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொண்டிருக்கிறது. 37 மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் முன்பக்கமும், Bottom-Link Uni-Trak சஸ்பென்ஷன் பின்பக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


கவாஸாகி  Z250 பைக்கில், 31 hp சக்தியை அளிக்கும் பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு, 4-ஸ்ட்ரோக், 249 சிசி இன்ஜின் உள்ளது. 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது இந்த பைக்.
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கவாஸாகி Z250!

இ ந்தியச் சந்தையில், கவாஸாகியின் விலை குறைந்த பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. கவாஸாகியின் இந்த லேட்டஸ்ட் பைக்கின் விலை  2.99 லட்ச...

ஆர்.ராஜா, தேனி
'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான். எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், ஒரே நாளில் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் ஒரு பாடம் படிக்க  நினைக்கிறேன். ஆனால் ஒரு பாடம் முடிக்கும்போது அடுத்த பாடம் மறந்து போகிறது. இந்த மறதியைப் போக்க வழி இருக்கிறதா?'
டாக்டர் அபிலாஷா, மனநல நிபுணர், சென்னை
'நல்ல மதிப்பெண்கள் பெற முயற்சி செய்யும் உங்களுக்கு, முதலில் வாழ்த்துகள். எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும்தான். அதற்காக, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் படித்துவிட முடியாது. நமது மூளையில் ஒரு விஷயம் நன்றாகப் பதிவதற்கு சில நொடிகள் எடுத்துக்கொள்ளும். அந்தக் கால அவகாசம்கூட கொடுக்காமல், வெவ்வேறு பாடங்களைப் படிக்க நினைத்தால் எதுவும் மனதில் நிற்காது. ஆரம்பத்தில் படிக்கும்போது, நன்றாக நினைவிருப்பது மாதிரிதான் இருக்கும். போகப் போக அது மறந்துவிடக்கூடும். ஆரம்பத்திலேயே, எதை, எப்படி, எப்போது படிக்க வேண்டும்  என  பட்டியல் போட்டுப் படிப்பது நல்லது. அப்போதுதான், மூளையில் தகவல்களைச் சரியாகச் சேமிக்க முடியும். ஒரே நாளிலோ அல்லது குறிப்பிட்ட நேரத்துக்
குள்ளாகவோ எல்லா பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்ற  நிர்பந்தம் வராத அளவுக்கு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பாடத்தைப் படிக்கிறோம் என்றால், முதலில் எளிமையான பகுதிகளைப் படியுங்கள். அப்புறம் கடினமாக இருக்கும் பகுதிகளைப் படியுங்கள். எளிமையாக இருக்கும் விஷயத்தை ஊன்றிப் படிக்கும் போது, அது நினைவுத்திறனில் இருந்து அவ்வளவு சீக்கிரம் அகலாது.
அடிக்கடி மறந்துவிடுவது ஒரு சாதாரணக்  குறைபாடுதான். அதை சுலபமாகத் தாண்டி வர முடியும். படிக்கும் சூழலில் நெருக்கடி வராமல் உங்களின் நேரத்தை சரியாகத் திட்ட மிட்டுப் படியுங்கள். படிப்பது என்பது மூளையில் பதிவாகி  இருக்கிறதா இல்லையா என்பது தான் முக்கியம். அதைக் கவனத்தில்கொண்டு படியுங்கள். வெற்றி நிச்சயம்!''
பு.கண்ணன், கோவை
'இரண்டு வருடங்களாக கடுமையான ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறேன். வலி மாத்திரைகளால் நிரந்தரமான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. ஒற்றைத் தலைவலி எதனால் ஏற்படுகிறது? இதை குணமாக்க என்னதான் வழி?'
டாக்டர் முருகன் நரம்பியல் நிபுணர், சென்னை
'பொதுவாக உடல் நலக் குறைபாடு, சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் என உடல் நலம் குறையும்போது தலைவலி ஏற்படும்.  இதுபோன்ற தலைவலி ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.  
ஒற்றைத் தலைவலி இதனால் தான் வருகிறதென குறிப்பாக எந்தக் காரணத்தையும் சுட்டிக் காட்ட முடியாது. இருந்தும், மரபியல் காரணங்கள், அதிக வெளிச்சம், இரைச்சல், மன அழுத்தம் என நம் சூழலாலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் ஏதேனும் யோசித்துக்கொண்டே இருப்பதும், அதிகம் வெயிலில் அலைவதும், தேவையற்ற பிரச்னைகளை மனதில் போட்டு உழட்டிக் கொள்வதும், மன அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலிக்கு காரணமாகலாம்.
சாக்லெட் ஐஸ்கிரீம், சாக்லெட் க்ரீம் பிஸ்கெட் என சாக்லெட் கலந்த பண்டங்களில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயனப் பொருட்களாலும் தலைவலி அதிகரிக்கும்.  இவற்றைத் தவிர்ப்பது நல்லது.  மேலும், சிட்ரஸ் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் காபி, டீ, குளிர்பானங்கள், சீஸ், பீட்ஸா, ஜங்க் ஃபுட் போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும். தினமும் தியானம் செய்யலாம். வாக்கிங், ஜாகிங் போவதும் பலனைக் கொடுக்கும். இவற்றுடன், நிம்மதியான தூக்கம் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வைத் தரும். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி நீடிக்குமானால் நரம்பியல் நிபுணரைக் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.'            
படித்த பாடம் மறந்து போகிறதா உங்கள் குழந்தைகளுக்கு? நியாபக மறதியைப் போக்க வழி!

ஆர்.ராஜா, தேனி 'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நான். எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று விரு...

சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !!
இந்திய அரசு தொடர்ந்து இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு எதிராக செயல்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதத்தை கட்டி எழுப்பிய ஒரு பௌத்த பிக்குக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த அளவிற்கு சிங்கள பாசத்தை காட்டும் என நாம் யாரும் அறிந்திருக்கவில்லை.

இந்திய குடியரசு தலைவரும், பாஜக தலைவரும் சேர்ந்து பௌத்த பேரினவாதியான அங்காரிகா தர்மபாலா என்னும் புத்த துறவிக்கு இந்தியாவின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளனர். இந்தியா இலங்கை உடனான உறவை பலப்படுத்தவும் பௌத்த பண்பாட்டை இந்திய அரசு ஊக்குவிக்கவும் இந்த அஞ்சல் தலையை வெளியிடுவதாக இந்திய அரசு கூறியுள்ளது.
சிங்கள பௌத்த தேசியத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட ஒரு புத்த பிக்குவிற்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் மதிக்காத இந்திய அரசு சிங்களத்திற்கு வரிந்து கட்டுக் கொண்டு அவர்களது அடையாளங்களை பரப்புவதற்கு எல்லா வேலைகளையும் செய்வது வெட்கக்கேடு. தமிழர்களை கொன்று குவிக்கத் தூண்டிய சிங்கள பேரினவாதத்தை இந்திய அரசு மேன்மேலும் வளர்த்தெடுக்க முயற்சி செய்வது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது. விரைவில் சு.சாமி கேட்டது போல கொலைகாரன் ராகபக்சேவிற்கு பாரத இரத்தினம் என்ற விருதை இந்திய அரசு வழங்கினாலும் வியப்பதற்கு இல்லை.
இந்த மனநிலையில் இந்திய அரசு இருக்கும் வரை இந்தியா தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நன்மையை செய்யாது என்பது மேலும் உறுதியாகி உள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !!

சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !! இந்திய அரசு தொடர்ந்து இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு எதிராக செயல்படு...

68 வயதிலும் அசத்தும் விவசாயி!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய்
மாத்தி யோசி
‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி வருகிறார். உற்பத்தி செய்யும் பாலை கேன் மற்றும் பாக்கெட்களில் அடைத்து, நேரடி விற்பனை செய்து வருகிறார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல ஏக்கரில் விரிந்து கிடக்கும் வேலி அடைத்த மேய்ச்சல் நிலங்கள், இடையிடையே சில தோட்டங்கள் எனக் காட்சி அளிக்கிறது, எல்லப்பாளையம்புதூர். வளைந்து வளைந்து செல்லும் தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கிறது, சுப்பிரமணியனின் தோட்டம். வேம்பு, கருவேல், பூவரசு என நிழல் பரப்பி நிற்கின்றன, வகைவகையான மரங்கள். அங்கிருந்த கொட்டகையில் தகுந்த இடைவெளியில் எதிரெதிர் வரிசையில் அசைபோட்டு படுத்திருந்தன, பசு மாடு கள். பசுந்தீவன வயல்கள், அவற்றை பொடிப்பொடியாய் நறுக்கும் இயந்திரம், அடுக்கி வைக்கப்பட்ட அடர்தீவன மூட்டைகள், காற்றோட்டமான இடத்தில் போடப்பட்டிருக்கும் சோளத்தட்டைப் போர்கள், நீண்டு கிடக்கும் மண்புழு உர உற்பத்திப் பந்தல்கள் என இருக்க... வேலையாட்கள் அவர்களுக்கான பணிகளில் மும்முரமாக இருந்தனர். சுப்பிரமணியனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு பணிகளைச் சொல்லி விட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.
விதைச்சவனுக்கு நஷ்டம்... விக்கிறவனுக்கு லாபம்!
‘‘பாட்டன் பூட்டன் காலந்தொட்டு பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். விவசாய நெலம், மேய்ச்சல் காடுனு இங்க 35 ஏக்கர் இருக்கு. 50 வருஷத்துக்கு முந்தியே மெட்ராஸ் அனுப்பி, படிக்க வைக்கிற அளவுக்கு செல்வாக்கான குடும்பம். பச்சையப்பன் காலேஜ்ல ஏம்.ஏ. எக்னாமிக்ஸ் படிச்சேன். அப்போலாம், அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும்னாலும், வேலைக்கு முயற்சி செய்யாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ, இந்தப்பகுதியில புகையிலை வெவசாயம்தான் பிரதானம். அதனால புகையிலை பதப்படுத்துற தொழிலையும் செஞ்சேன். பொருளாதாரம் படிச்சிருந்ததால, அப்பப்போ விவசாயிகளோட வருமானத்தைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பேன். வெதைச்சவன் நஷ்டப்படுறான். ஆனா, வாங்கி விக்கிறவன் நல்ல லாபம் பார்க்கிறான். மத்த பொருளை உற்பத்தி பண்றவங்களுக்கு இந்த நிலைமை கிடையாது. விவசாயத்துல மட்டும்தான் இந்த முரண்பாடு. இதை மாத்தி விவசாயியே லாபம் எடுக்க என்ன வழினு யோசிச்சுட்டே இருப்பேன்” என்ற சுப்பிரமணியன் சற்று இடைவெளிவிட்டு, தொடர்ந்தார்.
மதிப்புக்கூட்டினா, கூடும் மதிப்பு!
“இந்த நிலையில, விவசாயிகள் கூட்டம் ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, ‘விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்ல, 30 சதவிகிதத்தையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான், கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். பல வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து வந்தவன்ற முறையில் உங்ககிட்ட இதைச் சொல்றேன்’னு அந்தக் கூட்டத்துல பேசினார். அந்தப் பேச்சுதான் எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதுக்குப்பிறகு, புகையிலைத் தொழில்ல பல யுக்திகளைக் கொண்டு வந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்னு ஏற்றுமதி பண்ண ஆரம்பிசேன். இந்த நிலையில எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு ரங்கநாயகி. சட்டம் படிச்சவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புகையிலை சம்பந்தமான தொழில் செய்றது பிடிக்கல. அதனால, புகையிலை குடோனை மூடிட்டு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பவர்லூம்னு தொழில் களோட விவசாயத்தையும் பாக்க ஆரம்பிச் சோம்.
ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு வாரிசுங்க. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ‘இந்த வயசுல ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க.. சும்மா ஓய்வெடுங்க’னு அன்புக் கட்டளை போடுறாங்க பிள்ளைங்க. ஆனா, ‘யாரு சும்மா இருந்தாலும், தப்பில்லை. ஒரு விவசாயி சும்மா இருக்கக்கூடாது’ங்கிறதுல உறுதியா இருக்கிறவன் நான். அதனாலதான் இந்த 68 வயசிலும் மாட்டுப் பண்ணை வெச்சு பால் சப்ளை பண்ணிட்டு இருக்கேன்’’ என்ற சுப்பிரமணியன், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
மொத்தம் 35... கறவை 25!
“மொத்தம் 35 கலப்பினப் பசுக்கள் இருக்கு. இதுல 25 உருப்படி கறந்துட்டு இருக்குது. மீதி சினையா இருக்கு. கன்னுக்குட்டி குடிச்சது போக, சராசரியா ஒரு மாட்டுல இருந்து 10 லிட்டர் பால் கிடைக்கும்.
25 மாடுகள் மூலமா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது. ரெண்டு வருஷமா இந்தப் பகுதியில கடுமையான வறட்சி. மேய்ச்சல் நிலம் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. தண்ணீர் பற்றாக்குறையால பசுந்தீவன உற்பத்தியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பசுந்தீவனத்தையும், மக்காச்சோளத் தட்டையும் விலைக்கு வாங்கி் போட்டும் கட்டுபடியாகல. அதனால, பால் உற்பத்தி குறைவாதான் இருக்கு. இந்த வருஷம் பருவமழை பரவாயில்ல. அதனால, தீவனத்துக்குப் பஞ்சம் இருக்காதுனு நினைக்கிறேன். பாலை, திருப்பூருக்கு அனுப்பி, ஆட்கள் மூலமா நேரடியா விநியோகம் பண்றேன். கெட்டியாவும், சுவையாவும் இருக்குறதால, எங்க பண்ணை பாலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சில ஓட்டல்கள்லயும் ரெகுலரா வாங்குறாங்க.
இனிக்கும் இயற்கைப் பால்!
இப்போ இயற்கை அங்காடிகள் பெருகுறதால ‘இயற்கைப் பால்’ உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சு... பண்ணையில அஞ்சு மாடுகளை தனியா பிரிச்சோம். அந்த மாடுகளை பகல்ல மரத்தடி நிழல்ல கட்டி தீனி போட்டு, ராத்திரிக்கு மட்டும் தனி தொழுவத்துல அடைக்கிறோம். அந்த மாடுகளுக்கு மட்டும் எங்க தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச பசுந்தீவனம், மக்காச்சோளத்தட்டை, இயற்கை அரிசி உற்பத்தி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கின தவிடு, இயற்கையில விளைஞ்ச தேங்காய்் பிண்ணாக்குனு எல்லாமே இயற்கைப் பொருட்களா கொடுக்குறோம். அந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற 50 லிட்டர் பாலை ஒரு லிட்டர் அளவுல பாக்கெட்கள்ல அடைச்சு, திருப்பூர்ல பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்துற என்னோட மகன் குகனுக்கு அனுப்பிடுவேன். என், மருமகள் வித்யாவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்கதான் இந்த 50 லிட்டர் இயற்கைப் பாலை விற்பனை செய்றாங்க. வாங்கி பயன்படுத்தறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம்... இயற்கை பால்ங்கிறதுக்காக அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. நமக்கு விலை முக்கியமில்லை. விழிப்பு உணர்வு பெருகணுங்கிறதுதான் முக்கியம். அதனால, வழக்கமான பால் விலைக்குதான் கொடுக்குறோம்.
லாபம் குறைவு... மனம் நிறைவு!
நாளுக்கு நாள் பசுமாடு வளப்புக்கான உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. இன்னிக்கு நிலைமைக்கு ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு சராசரியா 205 ரூபாய் செலவாகுது. டெலிவரி செலவு, லிட்டருக்கு 3 ரூபாய். லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஆக, 10 லிட்டர் கறக்கிற ஒரு மாட்டுல இருந்து ஒரு நாள் லாபம் 65 ரூபாய் கிடைக்குது. 25 மாடுகள் மூலம் ஒரு நாளைக்கு எங்களுக்கு கிடைக்கிற வருமானம் 1,625 ரூபாய்தான். இதுல ஆரம்பகட்ட செலவுகள் தனி. பண்ணை ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆனதால, அதையெல்லாம் இப்போ கணக்குல கொண்டு வரல. அந்தச் செலவுகளை ஒன்றரை வருஷத்துலேயே எடுத்துட்டேன். பொருளாதாரம் படிச்ச எனக்கும், சட்டம் படிச்ச என் மனைவிக்கும் ஏற்ற வருமானம் இல்லைனாலும், பணநிறைவை விட மனநிறைவோட, சொந்த மண்ல இருக்குற மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடில்லை.
அதேசமயம், பால் பண்ணை வெச்சா லாபம் கிடைக்காதுனு நினைச்சுடாதீங்க. பால் பண்ணையை மட்டும் வெச்சு, தேமேனு இருந்தா குறைவான லாபம்தான் வரும். பால் பண்ணை தொடர்பான உபதொழில்களையும் செய்யணும். இதைத்தான் நான் செய்துட்டிருக் கேன். குறிப்பா மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 15 ஆயிரம் சதுர அடியில பெட் அமைச்சு நிழல்வலை போட்டு, சாணம் மூலமா... சுழற்சி முறையில, ஒரு நாளுக்கு ஒரு டன் மண்புழு உரம் உற்பத்தி செய்றோம். இது செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரங்கிறதால, கிலோ 7 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதன் மூலமா ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் உற்பத்திச் செலவு போக தினசரி லாபம் 3 ஆயிரத்து 500 ரூபாய்” என்ற சுப்பிரமணியன், நிறைவாக, பால் மட்டும் போதாது!
‘‘ஆக, வெறுமனே பால் மட்டும் உற்பத்திப் பண்ணினா, நிரந்தர வருமானமும் கிடைக்காது... லாபமும் இருக்காது. பால், சாணம், மூத்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி பலவகையான பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். நாங்க பாலை மட்டும் வித்தப்போ, மாசம் 45 ஆயிரம் ரூபாய்தான் லாபம் பார்த்தோம். ஆனா, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்ச பிறகு, மாசம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. அதனால, உப தொழில்களையும் சேர்த்து செஞ்சா நிச்சயம் லாபம் கிடைக்கும்’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, 
கே.பி. சுப்பிரமணியன், 
செல்போன்: 99944-49696.

செழிப்பு தரும் செரிவூட்டப்பட்ட மண்புழு உரம்!
தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது, செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை சுப்பிரமணியனுக்குச் சொல்லித் தந்தவர், பேராசிரியர் விவேகானந்தன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது, பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து, செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது. ஒரு டன் சாணத்தை மண்புழு ‘பெட்’டில் பரப்பி, அதன் மீது... தலா 200 மில்லி அசோஸ்பைரில்லம், அசிட்டோஃபேக்டர், சூடோமோனோபாஸ், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால், பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால்... மண்புழுக்களில் இருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயிரிகளில் இருந்து, மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும். இதனால் கிடைக்கும் மண்புழு உரம், நுண்ணுயிரிகளின் செரிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கிறது’’ என்றார்.
பால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000... “மதிப்பு கூடும் மாட்டுப் பண்ணை..!”

68 வயதிலும் அசத்தும் விவசாயி! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய் மாத்தி யோசி ‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... ச...


நடிகர் : ஷாருக்கான்நடிகை : தீபிகா படுகோனேஇயக்குனர் : ஃபரா கான்இசை : விஷால் தட்லானிஓளிப்பதிவு : மனுஷ் நந்தன் ஜாக்கி ஷெராப் ஒரு வைர வியாபாரி. இவர் வைத்திருக்கும் வைரத்தை எல்லாம் பாதுகாப்பாக வைப்பதற்காக சேப்டி லாக்கர் ஒன்று தேவைப்படுகிறது. இதற்காக ஷாருக்கானின் தந்தை அனுபம் கெரிடம் சேப்டி லாக்கர் செய்யும் படி சொல்கிறார். இவரும் தரமான சேப்டி லாக்கர் ஒன்றை செய்ய, அதில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை வைக்கிறார் ஜாக்கி ஷெராப்.

இந்த சேப்டி லாக்கரை அனுபம் கெர் தனது கை ரேகையை வைத்து மட்டுமே திறக்கும் வகையில் செய்திருந்தார். லாக்கரை ஜாக்கி ஷெராப்பிடம் ஒப்படைக்கும்போது, உங்களின் கை ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால் ஜாக்கி ஷெராப், அனுபம் கெருக்கு மயக்க மருந்து கொடுத்ததுடன், லாக்கரில் உள்ள 100 கோடி வைரத்தையும் திருடி விட்டதாக பழி சுமத்தி அவரை ஜெயில் அடைத்து விடுகிறார்.

அந்த வைரத்தை ஜாக்கி ஷெராப்பே எடுத்துக் கொண்டு வைரம் தொலைந்து விட்டதாக நாடகம் ஆடி வைரத்திற்கான இன்சூரன்ஸ் பணத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் பணக்காரராகிறார். இதை அறிந்த ஷாருக்கான் ஜாக்கி ஷெராப்பை பழி வாங்க நினைத்து லாக்கரில் இருக்கும் வைரத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். தற்போது வைரங்கள் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலின் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஓட்டலின் ஒரு அறை வழியாக அந்த பள்ளத்திற்கு செல்லலாம் என்பதையும் ஷாருக்கான் அறிகிறார்.

 இந்நிலையில் அந்த ஹோட்டலில் உலக அளவிலான நடனப்போட்டி நியூ இயர் அன்று நடந்தப்படவுள்ளதை தெரிந்துக் கொள்கிறார் ஷாருக்கான். இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு அந்த வைரத்தை கொள்ளையடிக்க ஷாருக்கான் நினைக்கிறார். இதற்காக அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா ஆகியோர் கொண்ட ஒரு நடன டீம் ஒன்றை உருவாக்குகிறார். இவர்களின் உதவியால் ஜாக்கி ஷெராப்பின் பாதுகாப்பில் இருக்கும் வைரத்தை கொள்ளையடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஷாருக்கான் திருடனாக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் மற்றப் படங்களில் இருந்து வேறுபடுகிறார். நடனம், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே அழகு பதுமை. இவரும் நடனம் கவர்ச்சி என ரசிகர்களை கவர்கிறார். அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா, அனுபம் கெர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

 விஷால் தட்லானி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல்களும் பிரம்மிக்க வைக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசிக்கும்படி இயக்கி அதில் இசை, நடனம், சண்டைக் காட்சிகள் என நல்லதொரு பொழுதுபோக்கு படமாக உருவாக்கிய இயக்குனர் ஃபரா கானை பாராட்டலாம். மொத்தத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ ரியலி ஹேப்பி.
ஹேப்பி நியூ இயர் விமர்சனம்

நடிகர் : ஷாருக்கான்நடிகை : தீபிகா படுகோனேஇயக்குனர் : ஃபரா கான்இசை : விஷால் தட்லானிஓளிப்பதிவு : மனுஷ் நந்தன் ஜாக்கி ஷெராப் ஒரு வைர வியாபார...

ஐபோன் 6 அறிமுகப் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள், ஆப்பிள் புதிய ஐபேட்ஏர் 2, ஐமேக் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.
ஐபேட்டின் மெலிதான தோற்றம், ஐமேக்கின் ரெட்டினா டிஸ்பிலே ஆகியவை பற்றிப் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதிகம் கவனிக்கப்படாத அம்சமாக இவற்றின் சிம்கார்டு வசதி இருப்பதாகத் தொழில்நுட்பத் தளமான டெக்கிரஞ்ச் தெரிவித்துள்ளது.

இந்த சிம்கார்டில் செல்போன் சேவை நிறுவனத்தைச் சாதனத்தில் இருந்தே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சிம்மை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளலாம். ஐபேட் ஏர் 2 இந்திய அறிமுகம் பற்றியும் பேசப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் இந்த சிம்கார்டு மாற்றும் வசதியைப் பயன்படுத்த முடியாது. நம் நாட்டில் அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டைப் பயன்படுத்த முடியாது.
இதனிடையே ஐபோன் 6 இந்திய அறிமுகத்தில் மும்பை போன்ற நகரங்களில் நள்ளிரவில் வரிசையில் நின்று புதிய போனை வாங்கியிருக்கின்றனர். அதுதான் ஐபோன் கலாச்சாரம்.
ஆப்பிளின் சிம்கார்டு

ஐபோன் 6 அறிமுகப் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள், ஆப்பிள் புதிய ஐபேட்ஏர் 2, ஐமேக் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட்டின் மெலித...

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்
 குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.
தடுப்பூசி

நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும்போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள்தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு, மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.
சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்!  இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது. முதன் முதலில் பெரியம்மைக்குத்தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள்
தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும்கால தலைமுறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.
ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன! குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள்தான் தற்காக்கின்றன.
தடுப்பூசி அட்டவணை
ஒரு காலத்தில் உலக அளவில் தட்டம்மை, ரண ஜன்னி, காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்சி போன்ற நோய்களால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 குழந்தைகள் இறந்தனர். ஆனால் இன்றோ, பிறந்த உடனேயே இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதனால், இந்த நோயால் குழந்தைகள் இறப்பு இல்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது!
இந்திய அரசு குழந்தைப் பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசி, சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.
 என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்...
குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன. குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.
பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)
பி.சி.ஜி.(BCG - Bacille Calmette-Guerin) - குழந்தைக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி. குழந்தையின் இடது கையில் தோள்பட்டைக்கு அருகில் (புஜத்தில்) போடப்படும். இது நோயை முற்றிலும் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே இது வேலை செய்யும்.
எச்சரிக்கை: தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் உண்டாகலாம். அது உடைந்து புண்ணாகி லேசான நீர்க்கசிவுகூட ஏற்படலாம். இதில் பயம் ஒன்றும் இல்லை. சில நாட்கள் வரை இருந்துவிட்டு பின்னர் அதுவாகவே சரியாகி அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தை நல மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புண் ஆற வேண்டும் என்று எந்த ஒரு மருந்தையும் அதன் மீது தடவக்கூடாது.
இளம்பிள்ளைவாதத்துக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோ கிருமி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கால்கள் சூம்பிப்போகச் செய்யக்கூடியது. இதனால் நிரந்தர ஊனம் ஏற்படும். இதைத் தவிர்க்க பல கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கிறது.
குழந்தைப் பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி. (OPV- oral polio vaccine)  மருந்து அளிக்கப்படும். இதை 'ஜீரோ டோஸ்’ என்பர். போலியோ நோய்த் தடுப்பில் சொட்டு மருந்து / ஊசி என்று இரண்டு இருக்கின்றன. பொதுவாக நம் ஊரில் போலியோ சொட்டு மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஹெபடைடிஸ் பி (எச்.பி.வி.) தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்)
உலக அளவில் பொதுவாகக் காணப்படும் நோய்த் தொற்று 'ஹெபடைடிஸ் பி’. இது கல்லீரலைப் பாதிக்கிறது. எதிர்காலத்தில் கல்லீரல் சுருக்கம் (லிவர் சிரோசிஸ்), கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க பிறந்ததும் 'ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால், இதைப் போட்டுக்கொள்வது நல்லது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆறு வாரங்களுக்குப் பிறகு...
டி.பி.டி. (DPT) எனப்படும் முத்தடுப்பு ஊசி, போலியோ தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து இரண்டாவது டோஸ், ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ், ரோட்டா வைரஸ், பி.சி.வி. முதல் டோஸ், எச்.ஐ.பி. முதல் டோஸ் அளிக்கப்படும்.
முத்தடுப்பு ஊசி (டி.பி.டி.) (கட்டாயம்)
'டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக்கு எதிரான மருந்து இது.
எச்சரிக்கை: டி.பி.டி. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், சில குழந்தைக்கு காய்ச்சல் வரலாம். அது சாதாரணமான காய்ச்சல்தான். பயப்படத் தேவையில்லை. ஒரே நாளில் குணமாகிவிடும். காய்ச்சல் ஒரு நாளுக்கும் மேலாகத் தொடர்ந்தால் உடனடியாக குழந்தையை டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது.
ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்)
போலியோவுக்கு அளிக்கப்படும் மருந்தின் இரண்டாவது டோஸ் இது. வாய் வழி சொட்டு மருந்தாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி  முதல் டோஸ்
(விருப்பத்தின்பேரில்)
வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும் கொடிய கிருமி ரோட்டா வைரஸ். ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் இந்தநோய் வராமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.
எச்.ஐ.பி (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
ஹிமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி நோய்த்தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும். அதைத் தடுக்கவே இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.
கவனம்: இந்த ஊசி போட்ட இடத்தில் சிவந்துபோதல், வீக்கம் அல்லது வலி இருக்கலாம். ஆனால், கவலைப்படத் தேவையில்லை.
பென்டாவேலன்ட் தடுப்பூசி
முத்தடுப்பு ஊசி என்பது மூன்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படுகிறது. தற்போது அதற்குப் பதிலாக ஐந்து நோய்களைத் தடுக்கும் 'பென்டாவேலன்ட்’ என்ற ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை... உள்ளிட்ட ஐந்து நோய்களுக்கான ஒரே தடுப்பூசிக்கு பென்டாவேலன்ட் என்று பெயர். இந்தத் தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, மஞ்சள் காமாலை பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஏற்கெனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக பென்டாவேலன்ட் என்ற ஒரே தடுப்பூசியே சிறப்பாகச் செயல்படுகிறது.
10வது வாரம்
முத்தடுப்பு ஊசி, போலியோ, எச்.ஐ.பி., ரோட்டா வைரஸ், பி.சி.வி. இரண்டாவது டோஸ்... ஆகியவை குழந்தை பிறந்த 10-வது வாரத்தில் அளிக்கப்படும். இதில், முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ மருந்தைத் தவிர மற்றவை விருப்பத்தின்பேரில் மட்டுமே போடப்படும்.
14வது வாரம் (மூன்றரை மாதம்)
இந்தக் கால கட்டத்தில் போலியோ, முத்தடுப்பு ஊசி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். இதுதவிர, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.பி. ரோட்டா வைரஸ், பி.சி.வி மூன்றாவது டோஸ் போன்றவைகளும் அளிக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு...
வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் இந்தக் கால கட்டத்தில் அளிக்க வேண்டும். இன்ஃபுளுவென்சாவுக்கான தடுப்பூசி இந்த மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். இதன்பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் இன்ஃபுளுவென்சாவுக்கு மருந்தும் கொடுக்க வேண்டும்.
ஒன்பதாவது மாதம்
போலியோ சொட்டு மருந்து, மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் அளிக்கப்பட வேண்டும்.
தட்டம்மைத் தடுப்பூசி (கட்டாயம்)
குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.
மேலும், 5 அல்லது 12 வயதிலும்கூட இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஒரு வயதுக்குப் பிறகு
இந்த காலகட்டத்தில் ஹெபடைடிஸ்- ஏ வைரஸுக்கான தடுப்பூசி முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இதுவும் விருப்பத்துக்கு உட்பட்டது. ஹெபடைடிஸ் ஏ-வில் கொல்லப்பட்டது, உயிரோடு இருக்கக்கூடியது என இரண்டு வகையான டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாவது (இறுதி) டோஸ், முதல் டோஸ் போட்டதில் இருந்து ஆறு முதல் 18 மாதங்களில் போடவேண்டும்.
காலரா தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)
ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு இந்த ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. காலரா என்பது 'விப்ரியோ காலரே’ என்ற கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடலில் உள்ள நீரை வெளியேற்றிவிடும். நீருடன் சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் வெளியேறிவிடுவதால் நீர் இழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால், இளநீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். அல்லது உப்பு- சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.
எச்சரிக்கை: குழந்தை வாந்தி எடுக்கிறது என்று தாய்ப்பால், இளநீர், உப்பு-சர்க்கரைக் கரைசல் கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது.
15வது மாதத்தில்
எம்.எம்.ஆர். தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி. பூஸ்டர் தடுப்பூசி இந்தக் காலக்கட்டத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன.  
எம்.எம்.ஆர். தடுப்பூசி (கட்டாயம்)
மீசல்ஸ், மம்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் தட்டம்மை, புட்டாலம்மை (பொன்னுக்கு வீங்கி) மற்றும் ஜெர்மன் அம்மையை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி இது.  
எச்சரிக்கை: இந்தத் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு காய்ச்சல்போல உடல் சூடாகும், மூட்டு வலி அல்லது உடலில் விரைப்புத்தன்மை ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
 வேரிசெல்லா தடுப்பூசி
(விருப்பத்தின்பேரில்)
வேரிசெல்லா சோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் சின்னம்மை ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காக வேரிசெல்லா தடுப்பூசி 15-வது மாதத்தில் போட்டுக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒருவரை ஒருவர் தொடுவதன்மூலமும், சுவாசம், இருமல், தும்மல் மூலமும் காற்றில் பரவக்கூடியது. சிலருக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், சில குழந்தைகளுக்கு இது வலிப்பு நோயை ஏற்படுத்தி உயிரிழப்பைக்கூட உண்டாக்கலாம். சின்னம்மை வந்து சென்றபிறகும்கூட இந்தக் கிருமி உடலிலேயே இருந்து எதிர்காலத்தில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. 12 முதல் 15 மாதக் குழந்தைகளுக்கு இது அளிக்கப்பட வேண்டும்.
16 முதல் 18வது மாதங்களில்
டி.டி.பி., ஐ.பி.வி., ஹெச்.ஐ.பி. முதலாவது பூஸ்டர் அளிக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு இந்த நோய்க் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டிருக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தக் கிருமிகளுக்குரிய நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில் மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'பூஸ்டர் தடுப்பூசி’ என்று பெயர்.
முத்தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி (கட்டாயம்)
'டிப்தீரியா’ எனப்படும் தொண்டை அடைப்பான், பெர்டூசிஸ் எனப்படும் கக்குவான் இருமல், டெட்டனஸ் எனப்படும் ரண ஜன்னி ஆகிய மூன்று தொற்று நோய்களுக் எதிரான பூஸ்டர் தடுப்பு மருந்து இது.
எச்சரிக்கை: குழந்தைக்கு சிறிய அளவில் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம் இருக்கலாம். கவலைப்படத் தேவையில்லை.  
போலியோ பூஸ்டர் மருந்து
போலியோ தடுப்பு மருந்து. வாய் வழியே எடுத்துக்கொள்ளக்கூடியது.
குறிப்பிட்ட காலத்தில் போட்டுவிட்டோமே என்று இருந்துவிட வேண்டாம். போலியோ ஒழிப்பு தினத்தன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. அந்தநேரத்திலும் குழந்தைக்கு இந்தச் சொட்டு மருந்தை அளிக்கலாம்.
எச்.ஐ.பி. பூஸ்டர் (விருப்பத்தின்பேரில்)
எச்.ஐ.பி. பூஸ்டர் தடுப்பூசி போடும்போது ஊசிபோடும் இடத்தில் வலி, சிவந்துபோதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்.
18வது மாதம்
ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி இரண்டாவது தவணை (விருப்பத்தின்பேரில்)
இதை அரசு பரிந்துரைப்பது இல்லை என்றாலும், இந்திய குழந்தைகள் மத்தியில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று பரவலாகக் காணப்படுவதால் 'இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு’ இதனைப் பரிந்துரைக்கிறது. முதல் தவணைபோலவே, வைரஸ் கிருமி உயிருடன் உள்ளது, இறந்தது என இரண்டு டோஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இரண்டு வயது
இந்த வயதில் டைஃபாய்ட் மற்றும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதில் டைஃபாய்டு தடுப்பூசி மட்டும் கட்டாயம் போடப்படவேண்டும்!
டைஃபாய்டு காய்ச்சல் தடுப்பூசி (கட்டாயம்)
டைஃபாய்டு பாசிலஸ் என்ற கிருமி மூலம் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்தக் கிருமியானது பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவும். பொதுவாக சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதிகளில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. வளர்ந்த நாடுகளில் டைஃபாய்டு மிகவும் அரிதான நோய். ஆனால், இன்னும் வளரும் நாடுகள் சுகாதாரச் சீர்கேடு காரணமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நான்கரை முதல் ஐந்து வயது வரை
இந்த வயதில் டி.டி.பி இரண்டாவது பூஸ்டர், ஓ.பி.வி. மூன்றாவது தவணை, எம்.எம்.ஆர். மற்றும் வேரிசெல்லா தடுப்பூசிகள் இரண்டாவது தவணை, டைஃபாய்டுக்கான தடுப்பூசி, மெனிங்கோக்கல் தடுப்பூசி போன்றவை அளிக்கப்பட வேண்டும்.
எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை (கட்டாயம்)
எம்.எம்.ஆர். இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது மீசல்ஸ், மம்ஸ், ரூபெல்லா நோய்க் கிருமிகளுக்கு எதிரானது.
எச்சரிக்கை: தடுப்பூசி கொடுத்ததும் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்படலாம்.
ஓ.பி.வி. பூஸ்டர் (கட்டாயம்)
இது போலியோவுக்காக அளிக்கப்படும் வாய்வழிச் சொட்டு மருந்து.
டி.டி.பி. பூஸ்டர் இரண்டாவது தவணை(கட்டாயம்)
இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சலும், ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.
தேவையெனில் போட வேண்டியது
ஷப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
குறிப்பிட்ட பகுதியில் ஜப்பான் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி பரவுகிறது என்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் 'ஜப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி’ போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும், எட்டு மாதங்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்பப்பைவாய் புற்று தடுப்பூசி
பெண்களுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தது ஒன்பது வயது முதல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மூன்று தவணைகளில் (0-2-6 மாதங்களில் அல்லது 0-1-6 மாதங்களில்) இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கானது என்றாலும் ஆண்களும் 11 அல்லது 12 வயதுக்கு மேல் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.
தேசியக் குடும்ப நலத்துறை மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் 43.5 சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே 12 மாதங்களுக்குட்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பெறுகின்றனர். அரசு பரிந்துரைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்.
இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைக்கும் மற்ற மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதைச் செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த முடியும்.
இயற்கை நோய்த் தடுப்பு
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. குழந்தைக்கு தாய்ப்பாலே முழு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பிறகு முதன்முதலில் சுரக்கும் சீம்பால் குறைவாகவே இருக்கும். ஆனால் இதில் அடங்கியுள்ள சத்துகளும், அது தரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியும் அளவிட முடியாதது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு சீம்பாலைப் புகட்டாமல் இருக்க வேண்டாம்!
குழந்தையின் எடை...
குழந்தைப் பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு எடை குறையும். பிறகு சரியானபடி பால் கொடுத்து, சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி விழித்தால் வாரத்துக்கு 200 கிராம் வீதம் எடை கூடும்.
கவனிக்கவேண்டிய முக்கியமான விஜயங்கள்
சில தடுப்பூசி தருணத்தில் குழந்தை எதிர்கொள்ளும் சங்கடம் இயல்பானதே. தடுப்பூசி போட்டதுமே குழந்தைக்கு காய்ச்சல் மாதிரியான சிறு உபத்திரவங்கள் தலைகாட்டலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், டாக்டர் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் போதும்.  
 தடுப்பூசி போடவேண்டிய காலகட்டத்தில் குழந்தைக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அல்லது வேறு எதாவது உடல் நலப் பிரச்னை இருந்தால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம். தடுப்பூசியைத் தள்ளிப்போடவும்வேண்டாம். குழந்தைக்கு உள்ள உடல் நலப்பிரச்னைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பதே நல்லது.
  குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து போடவேண்டாம். அதேபோல் கடுமையான காய்ச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டிருந்தால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கலாம்! டாக்டரின் ஆலோசனையைப் பெற்று, முதலில் அவற்றைச் சரிபடுத்திய பிறகு தடுப்பூசி அளிக்க வேண்டும்.
  மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இடைவெளி மிகவும் முக்கியமானது. அதிலும் நான்கு வார இடைவெளியில் டி.பி.டி. தடுப்பூசி மற்றும் ஓ.பி.வி. சொட்டு மருந்து போடவேண்டும் என்பது அவசியம்.
  எல்லா தடுப்பூசியும் முழுதாகப் போடப்பட்ட குழந்தைகளுக்கு சிறு சிறு காயங்களுக்கு டிடி (டெட்டனஸ் டாக்ஸாய்ட்) கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. டி.பி.டி. பூஸ்டர் மீதம் இருக்கும்போது குழந்தைக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே போடப்பட்ட பூஸ்டர் டோஸ் டெட்டனசில் இருந்து உங்கள் குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கும்.
  குழந்தைக்கு ஊசி போட புட்டத்தை விட தொடையே சிறந்த இடம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துதல் கூடாது. பெற்றோர்கள் இதை உறுதிப்படுத்துவது நல்லது. ஊசிப் போட்ட இடத்தில் சில குழந்தைகளுக்கு சிறு வீக்கம் தென்படும். இது பிரச்னையும் இல்லை. அதற்கு க்ரீம், மருந்து போடத்தேவையும் இல்லை.
உமா ஷக்தி, புகழ் திலீபன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்,
கு.கார்முகில் வண்ணன்
தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்  குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத...