சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்
பெங்களூர், செப்.30
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங், சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராக அரசு தன்னை சிறப்பு வக்கீலாக நியமித்து உள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாகவும், ஆனால் அந்த உத்தரவு நகல் தனக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார். அதனால் இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி தன்னால் வாதிட முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சார்பில் ஆஜராக சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். அதற்கான உத்தரவு நகல் பவானிசிங்கிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் நாளை (புதன்கிழமை) நடைபெறும் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராகிறார்.
சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்
சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம் பெங்களூர், செப்.30 ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்க...
Post a Comment