ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு!
பெங்களூரு: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
இதனையடுத்து, தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை நாளையே விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் தேசாய், இன்று ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனு விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் மனுக்களை விசாரிக்க மறுத்த நீதிபதி ரத்னகலா, மேல்முறையீட்டு மனுக்களை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை மாற்றுவதாக நீதிபதி அறிவித்தார்.
நீதிபதியின் இந்த அறிவிப்பால் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனு வரும் 7ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு!
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு! பெங்களூரு: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உ...
Post a Comment