காஞ்சிபுரம் தனியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி குளியலறையில் கேமரா
பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் புதன்கிழமை கல்லூரியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அவர்களில் 10 மாணவர்கள், 10 மாணவிகள் ஆட்சியரைச் சந்தித்து, குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து வட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் எலக்ட்ரீஷியனை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாலை 6.30 மணியளவில் தனியார் கல்லூரி வளாகத்தில் நின்றிருந்த பேருந்து, வேன், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாணவர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்துக்குச் சென்று பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாத்ரூமில் கேமரா – சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்
காஞ்சிபுரம் தனியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
Post a Comment