வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர்
தங்கள் பல, ஆனால் அவற்றைச் சுருக்கமாக ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்து வேதாந்த சித்தாந்த உபநிடதங்களாகத் தொகுத்து அளித்தவர் வேதவியாசர். உபநிடதங்கள் (நூற்றியெட்டு) 108 காணக் கிடைக்கிறது. ஸ்ரீமத்பாகவதம், ஸ்ரீமத் பகவத்கீதை, உத்தவகீதை, நாரத உபதேசம், யாக்ஞவல்கீயர், ஜனகர், வசிஷ்டர் ஆகியவர்களுடைய உபதேசங்களின் ஸாரம் அல்லது ரஸம் சுருக்கமாகவும், லோகஷேமத்திற்காகவும், சம்பிரதாயத்திற்காகவும், மிக எளிமையான பக்தி, ஞானம், வைராக்கியம், யோகம் ஆகியவற்றின் கண்கொண்டு நமக்கு ஆழ்வார்கள், பூர்வாசாரியார்கள் மற்றும் ஏனையவர்களின் மகிமையால் தெளிவாகக் காணக்கிடைக்கிறது. அத்தகைய வேத உபதேசங்களின் ஸாரமாவது பின்வருமாறு.-
வேதங்களின் அடிப்படைக் கருத்து 'சத்தியம் வத' 'தர்மம் சர' என்பதாகும். உண்மையுணர்வுடன் அந்த மெய்யான உண்மைப் பொருளை, சத்தியத்தை உலகிற்கு உரைத்து, கடைபிடிக்க, பலவகையான தர்மங்கள் உள்ளன. ஆனால் நம்மால் முடிந்தவற்றை விடாமுயற்சியுடன் செய்தல் நலம். ''வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், ஆனால் வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டாமா!'' என்று அந்த ஆறு கருத்துக்களையும் பாமரர்களும் புரிந்துகொள்ளும்படி எல்லா உபதேசங்களின் சாராம்சமாக சுருக்கி உரைத்தனர். அவையாவன.
-
1. கல்விக்கு ஈடான (சமமான) கண் இல்லை.
2. சத்தியத்திற்கு ஈடான (இணையான) தவம் இல்லை.
3. தியாகத்திற்கு ஈடான (சமமான) சுகம் இல்லை.
4. அகிம்சையே உயர்வான தர்மம்.
5. பொறுமையே உயர்வான பலம்.
6. தன்னைத்தானே அறிவது மேலான ஞானம்.
-
என ரத்தினச் சுருக்கமாக உரைத்து, ''கடமையைச் செய். பலனை நோக்காதே'' பலனை விரும்பிச் செயல்களைச் செய்வதாலேயே அதர்மத்தில் செல்கிறோம். அதாவது பலனில் கருத்தை விட்டால் அதர்மத்தை விடுவோம் எனக் கூறியதுடன், அகங்காரம், மமகாரம் இன்றி பக்தி, தர்மம், நாமசங்கீர்த்தனம், கைங்கர்யம் (பகவத், பாகவத, ஆசார்யர்), மற்றும் சரணாகதி என்ற பகவத்கீதையின் ஐந்து ரகசியங்களும் தெரிந்து, கடைப்பிடித்து, அவற்றை அந்த கோவிந்தன்தான் செய்கிறான் என்ற உண்மை உணர்வுடன், மன ஒருமைப்பாட்டுடன், சத்ஸங்கம், தியானம் துணை கொண்டு செய்தால் மேலான பிரம்ம ஞானத்தை அடைவோம். அவன் பாதம் பணிந்து அதாவது படிக்காத பாமரனனும்கூட கோவிந்தனின் பதம் பணிந்தால் மேற்கூறியயாவையும் தெரியவரும். உதாரணத்திற்கு அண்ணமாச்சாரியார், தியாகராசர், புரந்தரதாசர் மிக முக்கியமாக ஆழ்வார்கள் மற்றும் ஸ்வாமி ஸ்ரீதேசிகர் போன்று பலர், இவற்றை அனுபவித்து, உணர்த்தி திறம்படி உரைத்துள்ளனர். மற்றும் அவர்கள் உயரிய யோக ஸாஸ்திரம், மோட்ச ஸாஸ்திரம், சாங்கிய ஸாஸ்திரம் போன்றவற்றை தெளிந்து, தெரிந்து பரப்பிரம்ம ஞானம பெற்றார்கள்.
-
இப்படி உயர்வான ஞானத்துடன் தோன்றியவன் எவனோ, அல்லது கூறியவன் எவனோ அவன் ஜீவன் முக்தன் ஆவான். ஜீவனுடன் முக்தி அடைவது ஜீவன் முக்தன் ஆகாது. ஜீவன் முக்தனாய் தோன்றுபவர்கள், கருவிலேயே அல்லது பிறவியிலேயே பிரம்மஞானத்தைப் பெறுவார்கள். நாமும் இவற்றை விடாமுயற்சியுடன் பெறுவதற்கு மேற்கூறிய ஆறு வகைக் கருத்துக்களையும் பின்பற்றினால் வேத ஸாஸ்திர ஞானம் பெற்று ஆத்மானந்தம், சச்சிதானந்தம், பேரானந்தம் மற்றும் பிரம்மானந்தம் அடைவோம். இதற்கு நமது இசைவை, பிரேமை கலந்த பணிவன்புடன், நாயிகாபாவத்துடன் அந்த கோவிந்தனிடம் வேண்டுதலாக வைக்கவேண்டும். இப்படி படிப்பறிவில்லா பாமரர்கூட கோவிந்தனின் பாதம் பணிந்தால் அவர்களுக்கு அவன் அருளுடன் கிருபாகடாக்ஷத்துடன் அந்த வேதத்திற்கே பொருள் விளங்க வைப்பான் அந்த கோவிந்தன் என்ற உண்மை தெரிய வரும்.
-
''கோவிந்தன் திருவடிகளே சரணம்''
-
- நன்றி : ஸப்தகிரி சமய மாத இதழ்
வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர்
வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் தங்கள் பல, ஆனால் அவற்றைச் சுருக்கமாக ரிக், யஜுர், சாமம்...
Post a Comment