கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம்
சமீபகாலமாக ஆண் பெண் இருபாலருக்கும் வரும் முக்கிய நோய்களில் முதன்மையான நோய்கள் சிறு நீரகத்தில் கல் மற்றும் தீராத மூட்டுவலி. இரண்டுக்கும் காரணம் கால்சியம். கால்சியம் நம் உடலுக்கு தேவையான மிக முக்கியத் தாது உப்பு. நம் பற்களிலும் எலும்புகளிலும் ரத்தத்திலும் தசைகளின் செயல்பாட்டுக்கும் பயன்படுகிறது. கருவில் வளரும் குழந்தைக்கு மூன்றாவது மாதத்தில் இருந்தே தாய் உட்கொள்ளும் உணவில் இருந்து கால்சியம் கிடைக்கத் தொடங்குகிறது.உடல் எலும்புகளின் கட்டுமானத்துக்கும் உறுதிக்கும் பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது கால்சியம். தசைகள் சுருங்கி விரிவடையவும் ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் இன்சுலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரப்பதற்கும் நொதிப்பதற்கும் கால்சியம் உதவுகிறது. 30 வயதுக்கு மேல் கால்சியம் கிரகிக்கும் தன்மை குறையத்தொடங்கும். இதனால் எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உணவின் மூலம் அதிகமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பற்களும் எலும்புகளும் வலுவிழந்து உடல் சோர்வு ஏற்படும் உடலில் கால்சியம் சேருவதையும் சிறு நீரகம் மூலமாக வெளியேறுவதையும் உறுப்படுத்துவது பாராதைராய்டு ஹார்மோன். கால்சியம் அளவு குறையும்போது இந்த பாராதைராய்டு சுரப்பியானது எலும்பில் இருந்து கால்சியத்தை எடுத்து ரத்தத்தில் சேர்க்கிறது.
-
-
பால் பொருட்கள் கீரை வெண்டைக்காய் கொத்தமல்லி புதினா கறிவேப்பிலை வெற்றிலை மீன் கடல் உணவுகள் பாதாம் சூரிய காந்தி எண்ணெய் எள் விதைகள் ராகி கம்பு சோளம் சிறுதானியம் பட்டாணி சோயா பீன்ஸ் சுண்டல் ஆகிய உணவுப்பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றில் சிலவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெறலாம்.
உடம்பைக் குறைக்கிறேன் என்று சிலர் மேற்கொள்ளும் தீவிர உணவுக்கட்டுப்பாட்டால் உடலுக்கு அன்றாடம் தேவையான கால்சியத்தின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழந்து ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரத்தத்தில் கால்சியம் குறைவதால் ஹைபோகால்சிமியா என்ற நோய் வரலாம். விரல்களில் உணர்வின்மை தசைப்பிடிப்புகள் வலிப்பு சோர்வு பசியின்மை போன்ற அறிகுறிகள் ஹைபோகால்மியாவியால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும். மேலும் கால்சியம் குறைபாட்டால் இதயப் பாதிப்புகளும் வரக்கூடும். பெரும்பாலான பெண்கள் மூட்டுவலியால் அவதிப்படுவதற்கும் முக்கிய காரணம் கால்சியம் குறைபாடே.
-
-
ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் சேர்ந்தால் ஹைபர்கால்சிமியா எனும் நோய் வரும் இந்த நோய் சிறு நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி சிறு நீரகத்தில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமாகிவிடுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு புரதம் சர்க்கரை பாஸ்பரஸ் மக்னீஷியம் மற்றும் மன அழுத்தம் இதெல்லாம் தான் கால்சியம் சிறு நீரகத்தின் வழியே வெளியேறுவதில் தடை ஏற்படுத்துகின்றன. சிறு நீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் கால்சியம் நிறைந்த் உணவுகலை எடுத்துக்கொண்டால்தான் எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க முடியும்.
=================
நன்றி: சின்னு ஆதித்யா
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம்
கற்றுக்கொள்வோம் …………………. கால்சியம் சமீபகாலமாக ஆண் பெண் இருபாலருக்கும் வரும் முக்கிய நோய்களில் முதன்மையான நோய்கள் சிறு நீரகத்தில் கல் ...
Post a Comment