சீர்காழி: சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் பழக்கடை நடத்தி வருபவர்
ராகுல். இந்த கடைக்கு சனிக்கிழமை தோறும் ஒரு ஆண் குரங்கு வந்து, தனக்கு
வேண்டிய பழங்களை சாப்பிடுகிறது. இதை கடைக்காரரும் கண்டு கொள்வதில்லை.
நின்று நிதானமாக பழங்களை சாப்பிடும் அந்த குரங்கு பசி அடங்கியபின்
அங்கிருந்து சென்றுவிடுகிறது. கடையில் இருப்பவர்களையோ, கடைக்கு வரும்
வாடிக்கையாளர்களையோ எந்த தொந்தரவும் செய்வதில்லை. இதை அருகில் உள்ளவர்கள்
வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து கடைக்காரர் ராகுல்
கூறுகையில், சனிக்கிழமை தோறும் கடைக்கு வரும் குரங்கு அதற்கு தேவையான
பழங்களை சாப்பிட்டு செல்கிறது. குறிப்பாக சீட்லெஸ் திராட்சையை விரும்பி
சாப்பிடுகிறது.

அது இல்லாவிட்டால் என்னை முறைத்து பார்த்துவிட்டு வேறு பழங்களை சாப்பிடுகிறது. நாங்களும் அந்த குரங்கிற்கு எந்த தொந்தரவும் தருவதில்லை. அதே போல் குரங்கும் எங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் தராமல் செல்கிறது என்றார். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு உகந்த நாள் என்பதால் சனிக்கிழமை மட்டும் பழக்கடைக்கு வரும் குரங்கை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை மட்டும் பழக்கடைக்கு வரும் குரங்கு: சீர்காழியில் அதிசயம்
சீர்காழி: சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் பழக்கடை நடத்தி வருபவர் ராகுல். இந்த கடைக்கு சனிக்கிழமை தோறும் ஒரு ஆண் குரங்கு வந்து, ...
Post a Comment