லிங்குசாமி - சூர்யா இணைப்பில் உருவான 'அஞ்சான்' விரைவில் திரையிடப்படும் என்று சன் டி.வி நிறுவனம் அறிவித்துள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அஞ்சான்'. லிங்குசாமி இயக்கி, தயாரித்த இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டது. சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு இத்திரைப்படம் வெளியானது.
விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் 'அஞ்சான்' மிகவும் பாதகமான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் இயக்குநர் லிங்குசாமி கிண்டல் செய்து பதிவிட்டு வந்தார்கள்.
இந்நிலையில், விஜயதசமி அன்று சிறப்புத் திரைப்படமாக சன் டி.வியில் 'அஞ்சான்' திரையிடப்படும் என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால், இரண்டாம் நாளிலேயே அந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது. மாறாக, 'பிரம்மன்' திரையிடப்படும் என்று விளம்பரம் செய்தார்கள்.
ஏன் 'அஞ்சான்' திரையிடப்படவில்லை என்று காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில், "சூர்யா, சமந்தா ரசிகர்களே, 'அஞ்சான்' படம் விரைவில் சன் டி.வியில் ஒளிபரப்பப்படும்" என்று சன் டி.வியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
'அஞ்சான்' படத்தை தீபாவளிக்கு சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாக சன் டி.விக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.
'அஞ்சான்' டிவி ஒளிபரப்பு 'திடீர்' தள்ளிவைப்பு
லிங்குசாமி - சூர்யா இணைப்பில் உருவான 'அஞ்சான்' விரைவில் திரையிடப்படும் என்று சன் டி.வி நிறுவனம் அறிவித்துள்ளது. லிங்குசாமி இயக்க...
Post a Comment