அரசு பணிகளுக்கு யாஹூ மெயில், ஜிமெயில் சேவை நிறுத்தப்படும்
Posted Date : 17:09 (30/09/2014)Last updated : 17:09 (30/09/2014)
நடப்பு நிதி
ஆண்டுக்குள் இந்தியாவின் உள்ள அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும்
முக்கியமான தகவல்கள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை
செய்ய வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ மெயில், ஜிமெயில்
உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை
மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மத்திய அரசாங்கம் வழங்கி
இருக்கிறது.
நம் நாட்டில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், 2014-ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய நிலவரப்படி கூகுளிடமிருந்து 50 லட்சம் பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் இணைய ஹேக்கர்களால் வெளியாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனாலேயே நமது இந்திய அரசாங்கம் மிக முக்கிய தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. |
அரசு பணிகளுக்கு யாஹூ மெயில், ஜிமெயில் சேவை நிறுத்தப்படும்
அரசு பணிகளுக்கு யாஹூ மெயில், ஜிமெயில் சேவை நிறுத்தப்படும் Posted Date : 17:09 (30/09/2014) Last updated : 17:09 (30/09/2014) நடப்...
Post a Comment