சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் நோக்கியா ஆலை நவம்பர் 1-ம் தேதி மூடப்படுகிறது.
நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து
வாங்கியது. அதன் பின்னர் எழுந்த வரி பிரச்சினை காரணமாக சென்னை தொழிற்சாலை
மைக்ரோசாப்ட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், நவம்பர் 1 2014 முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா
நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மைக்ரோசாப்ட்
அறிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலைக்கு இனி புதிய ஆர்டர்கள் கிடைக்காது. இதன்
காரணமாக ஆலையை நவம்பர் 1-ல் மூடுவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ரூ.2,400 கோடி வரி பாக்கி தொடர்பாக
நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இன்னொரு வழக்கில் உச்ச
நீதிமன்றம் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பிணையை கொடுக்க வேண்டும் என்று
உத்தரவிட்டிருந்தது.
பின்லாந்து நாட்டை சேர்ந்த இந்த தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில்
2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 8,000 பேர்
நேரடியாகவும், 12,000 பேர் மறைமுகமாகவும் பணிபுரிகிறார்கள்.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் நோக்கியா ஆலை நவம்பர் 1-ம் தேதி மூடப்படுகிறது.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் நோக்கியா ஆலை நவம்பர் 1-ம் தேதி மூடப்படுகிறது. நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோட...
Post a Comment