ஆனா, தடவிப் பார்த்தார்னு அப்புறம் தான் புரிஞ்சது!
இதுவரை இந்திய கிரிக்கெட் டீமுக்கு செலக்ட் ஆனது மொத்தமே 14 பேர்;
ஆனா, எல்லாருமே உங்க ஆளுங்க!
உங்க ஆளுங்க திறமைசாலிகள்னா 19 ஆண்டுகளா ஏன் சார் தமிழ்நாடு டீம்மால ஜெயிக்க முடியல?"
என்பதான உண்மையை தைரியமாக போட்டு உடைக்கும் டயலாக்ஸ் வரும் இடங்களில் எல்லாம் திரையரங்கமே அதிரும் அளவுக்கு கைத்தட்டல்கள்!
பார்த்தசாரதி என்ற கதாபாத்திரமும், சேஷாத்ரி மற்றும் ஸ்ரீநிவாஸ் போன்ற பெயர்களும் இன பாகுபாட்டை இயல்பாக வெளிப்படுத்துகின்றன.
சார்லி என்ற திறமையான மூத்தக் கலைஞன் இதுநாள்வரை சரியாக பயன்படுத்தப்படவில்லை என்ற குறையை தீர்த்திருக்கிறார் சுசீந்திரன்.
கலையின் ஊடாகவே ஒரு சமூகத்தை மாற்றத்தை நோக்கி நகரச் செய்ய முடியும். கலையின் மூலமாகவே எத்தனை பெரிய புரட்சியும் நிகழ்த்தப்பட்டுள்ளது. பல்வேறு இயக்கங்களாக இருந்து நாம் பேசும் அரசியலை, ஒரு திரைப்படம் அனைத்து மக்களிடத்திலும் எளிமையாக கொண்டு சென்றுவிடும்.
அந்த வகையில், ஒரே சமயத்தில் வெளியாகியுள்ள #மெட்ராஸ் மற்றும் #ஜீவா ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடையே ஒருவித அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இதுபோன்ற சமூக நீதியினை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர்களையும் பாராட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது.
மொத்தத்தில், சமீபத்தில் வெளியான பெரிய செய்திகளை உணர்த்தும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களை பார்க்கும் போது, இச்சமூகம் ஒருநாள் சமத்துவத்தை வென்றே தீரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது!
"தட்டிக் கொடுத்தாரர்னு நினைச்சேன்; ஆனா, தடவிப் பார்த்தார்னு அப்புறம் தான் புரிஞ்சது! இதுவரை இந்திய கிரிக்கெட் டீமுக்கு செலக்ட் ஆனது...
Post a Comment