இந்திய ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான் பிளிப்கார்ட் நேற்று 'பிக் பில்லியன் டே
சேல்' ஆஃபரை அறிவித்திருந்தது. வரலாறு காணாத அதிரடி விலை குறைப்புடன்
முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஆஃபர் இருந்தது.
இதற்கு விளம்பரங்களும் அமோகமாக இருந்தது. இந்த அறிவிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டுபோன வாடிக்கையாளர்கள் அதிரடியாக பர்ச்சேஸில் இறங்க பிளிப்கார்ட்டே அசந்து போய்விட்டது.
ஒரு நாள் ஆஃபராக அறிவிக்கப்பட்ட நேற்றைய ஆஃபரில் மட்டும் 15 லட்சம் பேர் பொருட்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். அனைத்து பொருட்களும் வெறும் 10 மணிநேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் பிளிப்கார்ட்டில் விற்பனையான பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.600 கோடி என்றால் நம்ப முடிகிறதா?
ஒரே நேரத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் வெப்சைட்டை 'லாக் இன்' செய்த போது 'ஹெவி டிராபிக்' ஆகிவிட்டது. சிறிது நேரம் கழித்து வெப்சைட் முழுவதும் முடங்கிப் போய்விட்டது. இதனால், எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த ஆன்லைன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பணம் செலுத்தும் மெனுவிற்கு செல்லும் போது பல அட்டெம்டுகள் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.
இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த பிளிப்கார்ட் இணையதளம் முன்னெச்சரிக்கையாக 20 மடங்கு டிராபிக்-கை தாங்கக்கூடிய அளவில் 5000 சர்வர்களை நிறுவியிருந்தது. ஆனால், வரலாறு காணாத அளவில் அதையும் தாண்டி வாடிக்கையாளர்கள் கூட்டம் ஆன்லைனில் அலைமோதியது.
அதே நேரத்தில், அறிவிக்கப்பட்டிருந்த தள்ளுபடி விலையும் ஆஃபர் ஓப்பனான சில மணி நேரத்திலேயே மாறிவிட்டது. (அதாவது தள்ளுபடி இல்லாத பழைய விலைக்கு மாறிவிட்டது)
இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட பிளிப்கார்ட், இந்த அளவிற்கு விற்பனையாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த முறை நிச்சயமாக இந்த குறைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் ஆஃபர் அறிவிக்கப்படும் என அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்களுக்கு ஈ-மெயில் அனுப்பியிருக்கிறது.

மெகா விற்பனையின் போது வெப்சைட்டில் கோளாறு: மன்னிப்பு கேட்டது பிளிப்கார்ட்
இந்திய ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான் பிளிப்கார்ட் நேற்று 'பிக் பில்லியன் டே சேல்' ஆஃபரை அறிவித்திருந்தது. வரலாறு காணாத அதிரடி விலை க...
Post a Comment