ஜெயலலிதாவை சிறையில் நல்லபடியாக பார்த்துக்கொண்டாலும்,அவருடைய ஜாமீன் மனு விவகாரத்தில் கர்நாடக அரசு தரப்பில் வேண்டுமென்றே தாமதத்தை செய்கிறார்கள் என்கிற சர்ச்சை வெடித்துள்ளது.
இது பற்றி பெங்களுருவில் பல்வேறு தரப்பில் விதவிதமாக சொல்கின்றனர்.
‘’சனிக்கிழமை சாயந்திரம் ஜெயலலிதா ஜெயிலுக்கு போயிடறாரு. திங்கட்கிழமை ஜாமீன்மனு போடுவாங்கன்னு உலகத்துக்கே தெரியும். மனு லிஸ்ட்டாகி விசாரணைக்கு வர்றப்போ, பிராசிகியூசன் லாயரை ரெடி பண்ணி வெக்கனும்னு கர்நாடக அரசுக்கு தெரியாதா? ரெண்டு நாள் முழுசா இருந்தும் அக்கறையே காட்டலையே ஏன்?
முதன் முதலா ஜெயலலிதா ஜாமீன் மனு வந்தப்போ, இந்த விஷயத்துல வாதாட என்னை நியமிச்சிருக்கிறதா அரசுகிட்ட இருந்து எனக்கு லெட்டர் எதுவும் வரைலன்னு பவானிசிங் சொன்னாரு.
லெட்டர்தான் வரலையே, அப்புறம் ஏன் லீவு கோர்ட்டுக்கு அவரு வந்தாரு?”
ஆனால் எதிர்தரப்போ, ‘’பவானிசிங் கோர்ட்டுக்கு வந்ததில் ஒன்னும் ஆச்சரியமில்லை” என்கிறது.
“ஒரு முதல் அமைச்சருக்கு எதிராக கேசை நடத்தி தண்டனை வாங்கி கொடுத்திருப்பவர் பவானி சிங். அந்த வழக்கில் ஜாமின் கிடைக்கிறதா என்பதை அருகில் இருந்து பார்க்க அவருக்கு புல்ரைட்ஸ் இருக்கிறது’’ என்று அந்த தரப்பு சொல்கிறது
அடுத்து ஜட்ஜ் ரத்னகலா விவகாரம்.
‘’முதல் நாள் வந்த கேசை ஒரு வாரத்துக்கு ஜட்ஜ் ரத்னகலா ஒத்தி வெச்சாங்க. உடனே ஜெயலலிதா தரப்பு, பதிவாளர் கிட்ட அவசரமாக மனு குடுத்தாங்க. மறுநாள் ஸ்பெஷல் ஜட்ஜா அதே ரத்னகலாதான் விசாரிப்பாங்கன்னு முடிவாச்சி.
அப்புறம் என்ன நடந்துச்சி? இது மிகவும் முக்கியமான கேசு; அதனால நான் விசாரிக்க விரும்பலைன்னு, ஜட்ஜ் ரத்னகலா மறுநாள் கோர்ட்ல சொல்லிட்டு ஏழாந்தேதிக்கு ஒத்தி வெச்சிட்டு போயிட்டாரு..
முன்நாளே பதிவாளர் கிட்ட, முக்கியமானதா இருக்கறதால நான் இந்த கேசை விசாரிக்க விரும்பலைன்னு அந்த ஜட்ஜ் சொல்லியிருக்கலாம்ல? அப்படி சொல்லியிருந்தா, மத்த ரெண்டு லீவு ஜட்ஜுல ஒருத்தரை விசாரிக்க சொல்லிருப்பார்ல தலைமை நீதிபதி?
எல்லாமே கர்நாடகா தரப்புல நடக்கிற ஒரு டிராமா தானே?” என்று கேள்விக்கணைகளை வீசுகிறது அந்த தரப்பு
இன்னொரு தரப்போ, ”நீதிபதி ரத்னகலாவை அவர் காதில் விழுகிற மாதிரி சில விஷயங்களை ஜாடைமாடையாக சொல்லி சீனியர் கவுன்சல்கள் மிரட்டினாங்க, அதனல அவங்க பேஜார் ஆயிட்டாங்க ”என்று அணுகுண்டை போடுகிறது.
”நம்ம ஸ்டேட் சிஎம் எடியூரப்பாவுக்கே 23 நாள் கழிச்சிதான் பெயில் கெடச்சிது. அவரை விட இந்த அம்மா ரொம்ப பெரிய ஆளா? இப்படி கேட்ட உடனே ஜெயலலிதாவுக்கு பெயில் குடுத்தா, நாங்களும் இனிமே எல்லா கேஸ்லயும் இதே மாதிரி இதையே முன் உதாரணமா காட்டி இன்ஸ்டண்ட் பெயில் கேக்க ஆரம்பிப்போம்” னு ஜட்ஜ் ரத்னகலா தரப்பை அவுங்க மெரட்ட, அதனாலதான் நான் விசாரிக்க மாட்டேன்னு ஒதுங்கிபோயிட்டாரு” என்கிறது
கேட்கிற தகவல்களை வைத்து பார்த்தால் அக்டோபர் ஏழாந்தேதி இன்னும் ஹாட்டா இருக்கும்போல் தெரிகிறது
ஜெயலலிதா ஜாமீன் மனு விவகாரம்- தாமதம் செய்கிறதா கர்நாடகா ? பின்னணி தகவல்கள்
ஜெயலலிதாவை சிறையில் நல்லபடியாக பார்த்துக்கொண்டாலும்,அவருடைய ஜாமீன் மனு விவகாரத்தில் கர்நாடக அரசு தரப்பில் வேண்டுமென்றே தாமதத்தை செய்கிறார...

Post a Comment