Ads (728x90)

கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு, Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு, அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் வங்கிக்கு `அல்வா ` கொடுப்போரைக் கண்டறிந்து கொள்ள முடியும் என்பது வங்கிகளின் நம்பிக்கை.
அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை - பாஸ்போர்ட் - ஓட்டுனர் உரிமம் - ரேஷன் கார்டு - பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.
ஏற்கெனவே ஆதார் அடையாள அட்டை மூலம் ஒருவரின் தகவல்கள் பிறப்பு ,வசிக்கும் இடம், ரத்த வகை,தொழில்,கண் அடையாளம்,கை ரேகை என அனைத்தும் அரசாங்கத்திடம் கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. பிரைவசி என்ற தனிமனித சுதந்திரம் இல்லாத சூழல், தீவிரவாதிகளின் செயல்களுக்கு எளிதாக இந்த தகவல் உதவும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இப்போது, ` CIBL` எனப்படும்  க்ரெடிட் இன்ஃபர்மேஷன் பியூரோ லிமிடட் ஆன `கடன் தகவல் பணியகம் (இந்தியா) லிமிடெட்`  ஒரு புதிய கோரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்துள்ளது குறித்தும் நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிறுவனம், இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாங்கி உள்ள   கடன்களைக்  கவனிக்க ட்ராய் (Telecom Regulatory Authority of India -TRAI) மற்றும் இர்டா ( Insurance Regulatory and Development Authority -IRDA) ஆகிய நிறுவனங்கள் உதவ வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.
`ட்ராய்` மற்றும் `இர்டா`இந்த கோரிக்கையை நிறைவேற்றி   உதவும்  பட்சத்தில் வாடிக்கையாளர்களின்  டிஜிட்டல் டேட்டாக்கள், இமெயில்கள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸப், ஃபேஸ்புக், கணினித் தகவல்கள்  என்று அனைத்துமே கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளது. சுத்தமாக பிரைவசி என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்பதே யதார்த்தம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு எட்வர்ட் ஸ்னோடன் என்ற கணிணி வல்லுநர், அமெரிக்க நாடானது உலகின்  அனைத்து  நாடுகளின்  மீதும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கிறது என்று கூறி இருந்தார்.
மேலும் அவர்,  இந்தியாவில் இருந்து அமெரிக்கா,  சேகரித்த  செய்திகள், உளவுத் தகவல்கள் , ஆவணங்கள், ரகசியங்கள் தோராயமாக  எண்ணிகையில் 6.3 பில்லியன்கள் என்றும், உலக அளவில் அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா 5 ஆம் இடத்தில் உள்ளதையும் அம்பலப்படுத்தினார்.
 இதற்கு உடந்தையாக இருந்தது டெல் என்ற கணினி நிறுவனம். டெல் நிறுவனம்தான் இந்த கண்காணிப்பு சாப்ட்வேர்கள், ப்ரோகிராம்கள், கணினி வல்லுநர்களுக்கு பயிற்சி என்று சகலமும் அளித்தது. இத்தனைக்கும் அமெரிக்காவின் பல அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனகளின் வெப்சைட்கள் டெல் நிறுவனத்தால்தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்பது கவனிக்கத் தக்கது.

இந்நிலையில் இந்த சிபில் நிறுவனம் சேவை மனப்பான்மையிலேயே செய்வதாகக் கூறினாலும்,  இதை வேறு ஒரு தனியார் நிறுவனமோ அல்லது  தீவிரவாத இயக்கமோ பயன்படுத்திக் கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த 26-11-2008 ல்   நடந்த மும்பை தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியோடுதான் நிறைவேற்றப் பட்டது  என்று இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. அந்த சம்பவத்திற்குக்  காரணம் டிஜிட்டல் டேட்டா என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். பாகிஸ்தானின்   ஐஎஸ்ஐ அமைப்பு   ஒரு கத்துக்குட்டி அமைப்பு அல்ல. பல நேரங்களில் அமெரிக்கா  உதவும் , அமெரிக்கா  பயிற்சியும் கொடுத்து வளர்க்கும்   அமைப்பு என்பது பல முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் நிரூபணம் செய்கின்றன.

இந்நிலையில், சிபில், ட்ராய் மற்றும்  இர்டா உதவியை பெற்றால் இந்தியாவின்  உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய சிக்கல் வரும் ஆபத்து உள்ளது. பாதுகாப்பிற்கென  பிரத்யேகமாக வேலைபார்க்கும் `ஐ பி`க்கும், வெளி நாட்டு விவகாரங்களின் பாதுகாப்பு பணியில்  இருக்கும் `ரா` விற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.

இப்போதே நம் தொலைபேசி எண்ணிற்கு ஏதேதோ நிறுவனங்களில் இருந்து பல குறுஞ்செய்திகள், அழைப்புகள் வருகின்றன. இதனை யாரும்  மறுத்திட முடியாது.  இந்நிலையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தனி மனிதர்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் முடியும் என்பதை நிரூபணம் செய்கின்றன.

இந்நிலையில்  CBIL என்ற தனியார் நிறுவனம் ஒன்றிடம் மக்களை, வங்கிகளின் வாடிக்கையாளர்களைக்    கண்காணிக்கும் அனுமதியை மத்திய அரசு தருவதை மறுபரிசீலனை செய்வது நல்லது.
-  மு.சா.கெளதமன்
வாடிக்கையாளர்களின் பிரைவசியில் நுழையும் 'சிபில்'!

கி ரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு, Credit Information Bure...

டிமாடுகளாக விற்கப்படுகின்ற நாட்டு மாடுகளை தடுத்து, அவர்கள் கேட்கும் விலைகொடுத்து வாங்கிவந்து, தனது கோசாலையில் பராமரித்து வருகிறார் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் வி.சிவக்குமார்.

"எம்.பி.ஏ.படிக்க அமெரிக்கா போனவன். படிச்சு முடிச்சு பட்டத்தை வாங்கியதும் அங்கேயே ஒரு வேலையில சேர்ந்து செட்டில் ஆயிட்டேன். 18 வருஷம் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு இருக்கிற போது, கூட வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் கிளைமேட் சேன்ச், குடிநீர் மாற்றம் போன்றவைகளினால் ஏதாவது உடல் நல பிரச்னை வந்து போயிட்டிருக்கும். ஆனா, எனக்கு மட்டும் சிறு ஜலதோஷம் கூட வந்தது கிடையாது. இது ஏன்? என்று யோசித்தபோதுதான் அதற்கான விடை கிடைத்தது. அதுதான் நாட்டு மாடு.
நான் பிறந்தது முதல், அமெரிக்கா போகும்வரை தினம் தோறும் நான் குடித்து வந்தது நாட்டு மாட்டுப்பால், உணவில் சேர்த்து நாட்டு மாட்டு மோர், பருப்பு சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டது நாட்டு மாட்டு நெய். வேறு மாடுப்பாலை என் கண்ணுல கூட காட்டியதில்லை என் குடும்பத்தினர்.  பல வருஷமா நான்குடிச்சு வளர்ந்த நாட்டு மாட்டுப்பால்தான் நான் நோய் எதிர்ப்பு சக்தியுடன் விளங்கியதுக்கு காரணம் என்பதை என் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் உணர்த்திச்சு.


அதே சமயம், எனக்கு திருமணம் முடிஞ்சு குழந்தையும் பிறந்தது. நம்மளப்போலவே நம்ம குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கணும். அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலம் முக்கியம். அதுக்கு நாட்டு பசும்பால் அவசியம். ஆனா, அதற்கான வாய்ப்பு அமெரிக்காவில் இல்லை. அதுக்கு ஒரே வழி சொந்த மண்ணுக்கு திரும்புவதுதான். அதை என் மனைவி திவ்யாவிடம் சொன்னேன். அவரும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டார். 
18 வருஷ அமெரிக்கா வாழ்க்கையை விட்டுட்டு, சொந்தமண்ணுக்கு வந்தோம். சிறுவயது முதல் நாட்டு மாட்டுப்பால் குடித்து வளர்ந்த என்னைபோலவே எனது இரண்டரை வயது மகன் தியான் நமச்சிவாயாவும் காங்கேயம் நாட்டுப்பசும்பால் தினமும் குடிக்கிறான். இப்ப எங்க குடும்ப பால் தேவைக்காக 7 நாட்டுப்பசு வெச்சு கறக்கிறோம்.  சரி..நமக்கு மட்டுமே நாடுப்பசும்பால் கிடைச்சா போதுமா? மற்றவங்களும் அதை பயன்படுத்தணும் என்கிற எண்ணத்தில் கோசாலை ஒண்ணை காங்கேயம் பக்கமுள்ள காடையூரில் ஆரம்பிச்சேன்.
லாரி ஏறி போக இருந்த நாட்டுமாடுகளையும், கப்பலேறிப்போக இருந்த கன்னுக்குட்டிகளையும் விலைகொடுத்து மீட்டு கொண்டுவந்து கோசாலையில்வைத்து பராமரித்து, அவைகளை நல்ல முறையில் வளர்த்த விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கும், நாட்டு மாட்டின் மகிமை தெரிந்த ‘ஜீரோபட்ஜெட்’ விவசாயிகளுக்கும் அசல் விலைக்கே கொடுத்து வர்றேன். இதுவரைக்கும் மீட்டுவந்த நாட்டுமாடுகளை 137 பேருக்கு கொடுத்துள்ளேன். இப்ப கோசாலையில 34 மாடுகள் இருக்கு.

இதுபோக, கல்லூரிகள், ரோட்டரி மற்றும் ல்யன்ஸ் கிளப்புகள், தொழில் வர்த்தக சபைகள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நாட்டுமாட்டின் மகிமை குறித்த கருத்தரங்குகளில் பேசிவருகிறேன். அவைகளின் பெருமை சொல்லும் 1000க்கும் மேற்பட்ட விளக்கப்படங்களையும் (பவர் பாயின்ட்) திரையிட்டு விளக்கிபேசியும் வருகிறேன்.

‘வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு.......வியாதிக்கு பூட்டுப்போடு’’ என்கிற கொள்கையுடன் நாட்டுமாடு குறித்த பிரசாரத்தை நாடு முழுதும் எடுத்து செல்ல இருக்கிறேன் என்ற சிவக்குமார்‘ ஆயுர்‘ என்கிற பெயரில் மருத்துவம் சம்பத்தப்பட்ட நிறுவனம் ஒன்றை அங்குள்ள சில நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டுமாடுகளின் மகிமை குறித்து அறிந்த  டாக்டர் ராவ் மற்றும் அவரது மனைவி உமா ஆகிய அமெரிக்க வாழ் இந்தியத்தம்பதியர் வர்ஷா, விருஷா என்ற பெயரிட்டு இரண்டு நாட்டுமாடுகளை இவர் கோசாலையில் வளர்த்து வருகிறார்கள்.
அந்த மாடுகளை படம் எடுத்து அவ்வப்போது அவர்கள் பார்வைக்கு அனுப்பிவரும் சிவக்குமார், நாட்டு மாடுகளிலிருந்து அர்க், சோப், பல்பொடி, ஊதுவர்த்தி ஆகிய மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியையும் விவசாயிகளுக்கு கொடுத்துவருகிறார்.

-;ஜி.பழனிச்சாமி 
-விகடன்-
அடிமாடுகளை மீட்கும் 'அமெரிக்க' இளைஞர்!

அ டிமாடுகளாக விற்கப்படுகின்ற நாட்டு மாடுகளை தடுத்து, அவர்கள் கேட்கும் விலைகொடுத்து வாங்கிவந்து, தனது கோசாலையில் பராமரித்து வருகிறார் தி...

மகிந்த – மோடி நேபாளத்தில் முக்கிய சந்திப்பு

இன்று நேபாளம் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அங்கு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுடில்லியில் இருந்து இன்று சிறப்பு விமானம் மூலம் காத்மாண்டு புறப்பட்டுச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அண்டை நாடுகளுடனான நல்லுறவு பலப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று இன்று தனது நேபாள பயணத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை 9.30 மணியளவில் காத்மண்டு வந்தடைவார் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் காத்மண்டுவில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரும், இந்தச் சந்திப்பில் பங்கேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் தெற்காசிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். இரு தரப்பு நல்லுறவை பலப்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.
மகிந்த – மோடி நேபாளத்தில் முக்கிய சந்திப்பு

மகிந்த – மோடி நேபாளத்தில் முக்கிய சந்திப்பு இன்று நேபாளம் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர ம...


* குடி,பீடி,லேடி என 3டி உடன் பொழுதை கழிக்கும் ஒரு சுகபோகவாசிக்கு .....
* 5000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு .....
* போராட்ட களத்தில் தைரியமாக நின்று களமாட துணிவில்லாமல் 'சுரிதார்' அணிந்து மாறுவேடத்தில் இரவோடு இரவாக ஓடி ஒளிந்து கொண்ட ஒரு பேடிக்கு .....

இசட் பிரிவு பாதுகாப்பு -
பாதுகாப்பான களியாட்டம் :
பாபா இராம்தேவ் -
இசட் பிரிவு பாதுகாப்பு , ஆயுதம் தாங்கிய போலிசார் , பாதுகாப்பான கார்..
தேசத்தலைவர்களை அவமரியாதை செய்வதும் , வேசதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதும் தான் மோடி அரசின் சாதனைகள்.
இசட் பாதுகாப்பு - பாதுகாப்பான களியாட்டம்
இசட் பிரிவு பாதுகாப்பு - பாதுகாப்பான களியாட்டம் : பாபா இராம்தேவ் -

* குடி,பீடி,லேடி என 3டி உடன் பொழுதை கழிக்கும் ஒரு சுகபோகவாசிக்கு ..... * 5000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு...

சிம்பு , யுவன் கூட்டணி என்றாலே எப்போதும் அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்படையும். 'மன்மதன்’, ‘வல்லவன்’, ‘ சிலம்பாட்டம்’ என இவர்கள் இருவரின் கூட்டணி அமைந்த பாடல்கள் மெகா ஹிட்டானது நாமறிந்ததே.
தற்போது ’இது நம்ம ஆளு’ படத்தில் இந்த கூட்டணியின் மேஜிக்கை மீண்டும் கொண்டுவந்துள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தில் புதிதாக யுவன் குரலில் ஒரு பாடலை நேற்று இரவு பதிவு செய்துள்ளார் குறளரசன்.
இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் மிகவும் முக்கியமான நபர் ’இது நம்ம ஆளு’ படத்திற்காக பாடியுள்ளார். நெருங்கிய நண்பர், சிறந்த மனிதர், மேலும் எங்களது கூட்டணி எப்போதும் தோல்வியடையாது . அவருதான் நம்ம யுவன் . என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் பதிவில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குறளரசன் இசையில் யுவன் பாடல்!

சிம்பு , யுவன் கூட்டணி என்றாலே எப்போதும் அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்படையும். 'மன்மதன்’, ‘வல்லவன்’, ‘ சிலம்பாட்...

வாயுப் பிரச்சினை. இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.
வாயுத் தொல்லை எது?
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.
நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டி ருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.
வாயு எப்படி வருகிறது?
நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.
கெட்ட வாடை ஏன்?
சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.
சத்தம் ஏன் கேட்கிறது?
பலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன? பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.
வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?
நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.
அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.
என்ன சிகிச்சை?
வாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.
வாயுக்கு எதிரிகள்!
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
வாயுவைக் கட்டுப்படுத்த
எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.
கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
வாயு ஏற்படுவது ஏன்?

வாயுப் பிரச்சினை. இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப...

  குளிர் காலத்தில் சாப்பிட, சாப்பிட கூடாத உணவுகள்


குளிர் காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

சாப்பிட கூடிய உணவுகள் :

டயட்டில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவும். அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்தது. மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது நல்லது. 

சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது நல்லது. குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

குளிர் காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.

குளிர் காலத்தில் பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும். இஞ்சி, குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும்.

இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மோர் சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

ஜலதோஷம் தொடர்பான பிரச்சனைகள் வராது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவிலேயே சாப்பிடலாம். மழைக்காலங்களில், அசைவ உணவுகளான மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம். குளிர்காலத்தில் உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும்.

அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு உதவுவது ஆரஞ்சு பழமும், தேனும் தான்.வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி‘ சத்துக்கள் அதிகம் நிறைந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். அதிகளவில் தண்ணீர் குடித்து வருவதும் நல்லது.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம்.

சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. அவர்கள் இவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது.
குளிர் காலத்தில் சாப்பிட, சாப்பிட கூடாத உணவுகள் In winter, eat, eat the wrong foods

  குளிர் காலத்தில் சாப்பிட, சாப்பிட கூடாத உணவுகள் குளிர் காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்...

தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம். தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது.  உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை அறிய வேண்டும்.

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு  நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும்.  சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது. அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும். சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.
தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்-Thyroid problem solving greens

தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங...

மதுரை: கனிம வளக் கொள்ளையை விசாரிக்க நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயத்தை உடனே பணியில் அமர்த்தி,  கனிமக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி மதுரையில் இன்று கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.

மதுரையில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. இந்த விசாரணைக் குழுவுக்கு அரசு சார்பில் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் விசாரணை பணிகள் தாமதமாகிவருகின்றன.

அதேசமயம் விசாரணை எல்லை குறித்து சகாயம் நீதிமன்றத்திடம் மனு செய்துள்ளார். இந்நிலையில் மதுரையில் செயல்படும் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அரசு நடந்துகொள்ள வேண்டும் எனக் கோரி, இன்று பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை மதுரையில் தொடங்கியது.
கலெக்டர் அலுவலகத்தில் கையெழுத்துப் பெற காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இருப்பினும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. 
நம்மிடம் பேசிய இந்த இயக்கத்தின் தலைவர் சோமசுந்தரம், “தென் தமிழகத்தில் நடைபெற்ற நடைபெற்று வருகிற கிராணைட் கொள்ளை, கனிமவள கொள்ளை, மணற்கொள்ளைகளுக்கு முடிவு கட்ட உயர் நிதிமன்றம் அறிவித்தது போல அவர் விசாரணையை துவக்க வேண்டும்.
இதற்கு அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்பதால் இந்த இயக்கத்தை நடத்துகிறோம்” என்றார்.

-செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
சகாயத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்!

மதுரை: கனிம வளக் கொள்ளையை விசாரிக்க நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயத்தை உடனே பணியில் அமர்த்தி,  கனிமக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எ...

மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.
முல்லை பெரியாற்றில் தண்ணீர் 142 அடியை எட்டியதற்கு ஐந்து மாவட்ட மக்கள் பென்னி குயிக்கிற்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகர அ.தி.மு.க.வினர், முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நேற்று மதுரையில் பொது கூட்டம் நடத்தினர்.

அந்த கூட்டத்தில், அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும்போது, ''இன்று தென்மாவட்ட மக்கள் மகிழும் வகையில் முல்லைப்பெரியாற்றின் நீர் வைகையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் ஜெயலலிதாதான். கருணாநிதி இந்தப் பிரச்னைக்காக துரும்பைகூட எடுத்து போடவில்லை. ஆனால், இப்போதோ கேரளாவுக்கு நன்மை செய்வது போல அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்.
மக்களின் முதல்வர் என்று ஜெயலலிதாவை நாங்கள் குறிப்பிடுவதை சில ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன. மக்கள்தான் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்தவர்கள். ஜெயலலிதா  5 ஆண்டுகள் ஆட்சி செய்ய  வேண்டுமென்றுதான் மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். இப்போது ஜெயலலிதாவை பதவியிலிருந்து இறக்கியது மக்களா? மக்கள் கொடுத்த அதிகாரம் இன்னும் ஒன்றரை வருடத்திற்கு உள்ளது.

அப்படி என்றால், ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று சொல்வதில் என்ன தவறு? நான் சட்டத்திற்குள் செல்லவில்லை. மக்களின் முதல்வர் என்று சொல்வதை, கிண்டல் செய்ததற்காக இதை சொல்கிறேன்" என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, ''ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் மாபெரும் கூட்டத்தை நடத்தினார்கள். இது நாம் நடத்தும் நன்றி கூட்டம். தாய்க்கு பிள்ளைகள் எடுக்கும் விழா" என்றார்.

செ.சல்மான்

படங்கள்: நிவேதன்
(மாணவப் பத்திரிகையாளர்)
மக்களின் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம்!

மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார். ம...

சிறுநீர் பரிசோதனை அவசியமா.
சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது.
அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை.
உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி’’ என்று சிறுநீர் பற்றி அறிமுகம் கொடுக்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான சௌந்தர்ராஜன்.
சிறுநீர் பற்றியும் அதன் பரிசோதனைகள் பற்றியும் நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து...
மூன்று அடையாளங்கள்
மருத்துவத்தில் இருக்கும் மற்ற பரிசோதனை களைவிட மிகவும் எளிமையானது சிறுநீர் பரிசோதனை.
குறைந்தபட்சம் 40 ரூபாயில் செய்துவிட முடியும்.
சோதனை முடிவுகளையும் உடனே சொல்லிவிடுவார்கள்.
வெளியேறும் அளவு, நிறம், மணம் ஆகிய மூன்றின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எளிதில் எடுத்துச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது சிறுநீர்.
ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீர் வெளியேற வேண்டும்.
இதில் 400 மி.லி.க்குக் குறைந்தாலோ, 2,500 மி.லி.க்கு அதிகமானாலோ, நோயின் வெளிப்பாடாகவே இருக்கும்.
பிறந்த குழந்தைக்கு இந்த சிறுநீரின் அளவு 200 மி.லி.யில் ஆரம்பிக்கும்.
இதுதான் பெரியவர்களானதும் ஒன்றரை லிட்டராக மாறுகிறது.
பிறந்த குழந்தை 24 மணிநேரத்துக்குள் சிறுநீர் கழிக்காவிட்டாலும் பிறவிக் கோளாறுகள் இருக்க வாய்ப்பு உண்டு.
சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி.
நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான்.
ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறி.
காச நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு காவி நிறத்தில் வெளியேறும்.
பால் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது யானைக்கால் நோயின் அடையாளமாக இருக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சுண்ணாம்பு நீர் போல வெளியேறும்.
மரபியல்ரீதியான குறைபாடுகள் இருப்பவர்களின் சிறுநீரை வெயிலில் வைத்தால் பழுப்பு நிறமாகிவிடும்.
சிறுநீர் துர்நாற்றத்துடன் இருப்பது நீரிழிவு, சிறுநீரகத்தில் நோய்த்தொற்று போன்ற குறைபாடுகளின் அடையாளமே.
சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வெளியேறு வது ஆபத்தானது என்பதை விளக்க வேண்டியதில்லை.
இவர்கள் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
தண்ணீர் சேகரிக்கும் சிறுநீரகங்கள்சிறுநீர் தயாரிப்பதுதான் சிறுநீரகங்களின் முக்கிய வேலை என்று நினைத்துக் கொள்கிறோம்.
உண்மையில், உடலுக்குத் தேவையான தண்ணீரை சேகரித்து வைப்பதும் சிறுநீரகங்கள்தான்.
நம் உடலில் ஓடும் 5 லிட்டர் ரத்தத்தையும் சுத்திகரித்துக் கொண்டே இருக்கின்றன சிறுநீரகங்கள்.
ரத்தத்தில் கலக்கும் தண்ணீர் உள்பட பல உணவுகளை தேவையான சத்துகள், தேவையற்ற கழிவுப் பொருட்கள் என இரண்டாகப் பிரிக்கின்றன.
இதை ஆரம்பகால சிறுநீர் என்கிறோம்.
இப்படி ரத்தத்தில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் 125 மி.லி. கழிவுப் பொருட்கள் வீதம், நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் சிறுநீர் பிரிக்கப்படுகிறது.
இதில் 95 சதவிகித நீரை உடலின் நீர் தேவைக்காக சிறுநீரகங்களே மீண்டும் எடுத்துக் கொள்ளும்.
மீதி இருக்கும் சிறுநீரே வெளியேறுகிறது.
தண்ணீரோடு நம் உடலில் இருக்கும் யூரியா, கிரியாட்டினின் போன்ற புரதக் கழிவுகளை வெளியேற்றுவதும் சிறுநீர்தான்.
மருத்துவ அறிக்கை சிறுநீர் பரிசோதனையில் முக்கியமானது அல்புமின் பரிசோதனை.
இந்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் உடலின் புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம்.
இது சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பம். சிறுநீரில் சர்க்கரை இருந்தால், அது நீரிழிவு என்பது பலருக்கும் தெரியும்.
சிறுநீரகத்தில் படியும் பொருட்களை வைத்து கிருமிகள் இருக்கிறதா, சிறுநீரக அழற்சிகள் இருக்கின்றனவா, நோய்த் தொற்றுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
இதன்மூலம் சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு இருப்பதையும் சிறுநீரகத்தில் கல் உருவாக இருப்பதையும் கண்டுபிடித்துவிட முடியும்.
சிறுநீர் பரிசோதனை எளிமையானது என்பதால், பெரிய மருத்துவமனைகளில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.
சாதாரண பரிசோதனை நிலையங்களிலேயே செய்து கொள்ளலாம்.
எல்லோரும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா?
சிறுநீர் பரிசோதனையை எல்லோரும் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை.
குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகப் பாதிப்புகள், ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கை, கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தாலோ, நிறம் மாறினாலோ, அளவுகள் கூடினாலோ, குறைந்தாலோ பரிசோதனை அவசியம்.
சிறுவயதில் சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்தக் காரணங்களோடு, 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு வருடமும் இந்த முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்போது சிறுநீர் பரிசோதனையும் அடங்கிவிடும்.
கர்ப்பிணிகள் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது தாய், சேய் இருவருக்கும் நல்லது.
நோய்க் குறைபாடுகள் இருப்பவர்கள் மட்டும் மாதம் ஒருமுறை
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உடல் சொல்வதைக் கேளுங்கள்
நம் உடலில் ‘பயாலஜிகல் கிளாக்’ என்ற உயிர்க்கடிகாரம் செயல்படுகிறது.
அந்தக் கடிகாரம்தான் நம் உடல் தேவைகளை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
எனக்கு உணவு வேண்டும், தூக்கம் வேண்டும் என்று கேட்பது அந்த கடிகாரம்தான்.
இதேபோலத்தான் தனக்குத் தண்ணீர் தேவை என்றாலும் தாகத்தின் மூலம் உடல் அதை உணர்த்தும்.
அந்த தாகம் தீரும் அளவுக்குத் தண்ணீர் குடிப்பதே போதுமானது.
குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால்கள் வீக்கம் உள்ளவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது.
மற்றவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்தாலே போதுமானது.
ஏற்கெனவே நாம் சாப்பிடும் சாதம், காய்கறிகள், பழங்கள், தேநீர், பழரசங்கள், சாம்பார், ரசம், தயிர் என்ற எல்லா உணவுப் பொருட்களிலும் தண்ணீர் கலந்திருப்பதை மறக்க வேண்டாம்.
இதில் சின்ன விதிவிலக்கு,
சிறுநீரகக் கல் இருப்பவர்கள், சிறுநீரகத் தொற்று இருப்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதில் தவறில்லை.
சிறுநீரகத் தொற்று
சிறுநீரகத் தொற்று (Urinary infection) நம் ஊரில் பரவலாக எல்லோரிடமும் காணப்படும் ஒரு பிரச்னை.
சுகாதாரக் குறைவால் சிறுநீரகப் பாதையில் நுண்கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதையே சிறுநீரகத் தொற்று என்கிறோம்.
சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். என்றாலும், தனிமனித சுகாதாரம் காரணமாகவே சிறுநீரகத் தொற்று அதிக அளவில் ஏற்படுகிறது.
இது ஆண்களைவிட பெண்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.
மலத்துவாரமும் சிறுநீர்ப் பாதையும் அருகருகில் இருப்பதால் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று அதிகமாகிறது.
மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத காரணத்தாலும் ஏற்படுகிறது (மாதவிலக்கு நின்ற பெண்களுக்கும் ஏற்பட லாம்).
வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் போதுமான கழிவறை வசதிகள் இல்லாதபோது சிறுநீரை அடக்கி வைத்திருப்பதும் காரணமாகிவிடுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று குழந்தையையும் பாதிக்கும் என்பதால் அலட்சியம் காட்டக் கூடாது.
குழந்தைகளுக்கு சிறுநீரகத் தொற்று அதிகமாக இருந்தால் பிறவிக் குறைபாடு கள் ஏதேனும் இருக்க வாய்ப்பு அதிகம்.
இது பெண்களின் நோயாக இருந்தாலும், ஆண்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் ஆபத்து அதிகம்.
அதனால், சுத்தம் பேண வேண்டும், சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது என்ற காரணங்கள் ஆண்களுக்கும் பொருந்தும்.
நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர்களுக்கு Silent urinary infection என்று அழைக்கப்படும் அளவுக்கு, அறிகுறியே இல்லாமல் இந்தத் தொற்று ஏற்படும்.
இது சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் தெரியும் என்பதால் கவனம் தேவை.
தம்பதியர் கவனத்துக்கு...
சிறுநீரகத் தொற்று பாலியல் காரணங்களாலும் அதிகம் ஏற்படுகிறது.
இதற்கு ‘ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்’ என்று பெயர்.
உறவுக்குப் பின்னர் ஆண், பெண் இருவருமே தங்களை சுத்தம் செய்து கொள்வது அவசியம்.
தம்பதியில் ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் மற்றவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சிறுநீரகச் செயலிழப்புக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அதில் இந்த சிறுநீரகத் தொற்றும் முக்கியக் காரணம் என்பதால் அலட்சியம் கூடாது.
சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீருடன் ரத்தம் வருவது, அடிவயிற்றில் வலி, காய்ச்சல், சிறுநீர் நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் எச்சரிக்கையாகி விடுங்கள்.
சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரகங்கள் செயலிழப்பதில் தற்காலிகச் செயலிழப்பு, நிரந்தரச் செயலிழப்பு என்று இரு வகைகள் இருக்கின்றன.
தற்காலிகச் செயலிழப்பு வருகிறவர்களுக்கு உடனடியாக சிறுநீர் நின்றுவிடும்.
இதற்கு ‘கிட்னி ஷட்டவுன்’ என்று பெயர். வயிற்றுப்போக்கு, வாந்தி, பாம்பு கடித்தவர்கள், மருந்து அலர்ஜி போன்ற காரணங்களால் திடீரென சிறுநீர் நின்றுவிடும். சிகிச்சைக்குப் பின்னர் சரியாகிவிடும்.
நிரந்தரச் செயலிழப்பு ஏற்படுவதாக இருந்தால், அதன் அறிகுறியாக அதிகமான சிறுநீர் வெளியேறும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த நிரந்தரச் செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீர் அதிகமாக வெளியேறுவதால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமில்லை.
வயதானவர்களுக்கும் நீரிழிவு உள்ளவர் களுக்கும் சிறுநீர் அடிக்கடி வருவது சாதாரணமானதுதான்.
சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது சிறுநீர் பரிசோதனை.
நீரிழிவு நோயை சிறுநீர் பரிசோதனையின் மூலமே முதன்முதலில் கண்டுபிடித்தார்கள்.
சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் சிறுநீரை சேகரிக்க வேண்டும்.
அதற்கு முன்னரே சேகரிக்கக் கூடாது.
சிறுநீர் சேகரிக்கும் முன்னர் ஓடும் தண்ணீரில் உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சோப், டிஸ்இன்ஃபெக்டன்ட் போன்றவற்றால் சுத்தம் செய்யக் கூடாது.
இதனால், சோதனை முடிவுகள் தவறாகக்கூடும்.
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் பரிசோதனை செய்யக் கூடாது.
பரிசோதனைக்காக இரண்டு குப்பிகள் கொடுப்பார்கள்.
ஒன்று சாதாரண பரிசோதனைக்காக...
மற்றொன்று நோய்த்தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக. கர்ப்பமடைந்திருப்பதை சாதாரண பரிசோதனையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.
நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க சிறுநீரை பரிசோதனைக் கூடத்தில் வைத்து பாக்டீரியா, வைரஸ் போன்ற செல்கள் வளர்கின்றனவா என்று பார்ப்பார்கள்.
சாதாரண பரிசோதனைக்கு முதலில் வரும் சிறுநீரையும் இரண்டாவது பரிசோதனைக்கு நடுவில் வரும் சிறுநீரையும் சேகரிக்க வேண்டும்.
மிகவும் சுத்தமாக, கைகள், பஞ்சு போன்றவை படாமல் கவனமாக சேகரிக்க வேண்டும்.
இதற்கு ஆரம்பத்தில் வருவதையோ, கடைசியில் வருவதையோ சேகரிக்கக் கூடாது.
சிறுநீரை குப்பி நிறைய பிடிக்க வேண்டிய தில்லை. பாதிக் குப்பி போதுமானது.
காலை வேளையில் சிறுநீர் பரிசோதனை செய்வதே நல்லது.
இதில்தான் நிறைய தகவல்கள் கிடைக்கும்.
வயிற்றுக்குள் கரு வளரத் தொடங்கிவிட்ட பிறகு பெண்ணின் உடலுக்குள் நடைபெறும் ஹார்மோன் மாற்றங்கள் சிறுநீரில் பிரதிபலிக்கும். கர்ப்பமடைந்திருப்பதை இதன் மூலமே உறுதிப்படுத்துகிறார்கள்.
சிறுநீர் பரிசோதனையின் மூலம் அதன் அளவு, அல்புமின் புரதம், சர்க்கரை, சிறுநீரகத்தில் ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதையும் நோய்த் தொற்றையும் கண்டுபிடிப்பார்கள்.
புற்று, காசம் போன்ற நோய்களையும் சிகிச்சை நடந்து வருவதன் முன்னேற்றத்தையும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு உடல் ஏற்றுக் கொள்ளாததையும் சிறுநீர் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிப்பார்கள்
Urine testing necessary-சிறுநீர் பரிசோதனை அவசியமா.

சிறுநீர் பரிசோதனை அவசியமா. சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்ந...


கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை தன்னகத்தே கொண்ட தருமபுரி மாவட்டத்தின் மலைகிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. வேலுவும்(விதார்த்) அவனது கிராமத்தின் சாகாக்களும் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வரும் ஒரு மரக் கடத்தல் மாஃபியா தலைவன் வேலுவை அழைத்து, “நான் சொல்றபடி செஞ்சா... இந்தக் காட்டுல வாழ்ந்து கஷ்டப்படாம கார், பங்களான்னு சொகுசா வாழலாம்” எனத் தூண்டில் போடுகிறான்.

 வெகுண்டெழும் வேலு, “உயிர் வாழ்றதுக்காக காட்டுலேர்ந்து எதை வேணும்னாலும் எடுத்துக்குவோம். ஆனால் வசதியா வாழறதுக்காக ஒரு செடியைக் கூட பிடுங்க மாட்டோம். போய்யா.. நீயும் உன் பணமும்” என்று முகத்தில் அறைந்தார்போல பேசிவிட்டு விறுவிறுவென்று நடக்கிறான்.
இந்தக் காட்சி சொல்லும் செய்திதான் படத்தின் மையம். கதையின் நாயகன் வேலுவுக்கு கல்வி அறிவு இல்லாவிட்டாலும், அனுபவ அறிவு காரணமாக தான் பிறந்து வளர்ந்த காட்டையும், அதனோடு இணைந்த தன் வாழ்வையும் நேசிக்கிறான். வேலுவின் நண்பனான கருணாவோ (முத்துக்குமார்) நன்கு படித்தவன். வாழ்வாதாரம் இல்லாத மலைகிராமத்து வாழ்வை வெறுப்பவன். எப்படியாவது வனத்துறையில் ‘ஃபாரஸ்ட் கார்டாக’ வேலைக்குச் சேர்ந்து, அரசு ஊழியன் ஆகி வசதியாக வாழ வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால் வேலையில் சேர இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், அதைத் திரட்ட சந்தன மரங்களைக் கடத்தி பிடிபடுகிறான்.
தன் மீது வழக்கு பதிவானால் அரசு வேலை பெறமுடியாது என்று தனது நண்பன் வேலுவைக் கட்டாயப்படுத்தி தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைக் கிறான். நண்பனுக்காக பழியை ஏற்று வேலு சிறை சென்ற பிறகு கருணாவுக்கு வனக்காவலர் வேலை கிடைக்கிறது. அவனது சுயநலம் மற்றும் பணவெறியால் மரக் கொள்ளையர்களுக்கு துணைபோகி றான். நண்பனையும் சிறையிலிருந்து வெளியே வரமுடியாதவாறு பார்த்துக் கொள்கிறான். மரக் கடத்தலுக்கு கிரா மத்து மக்களால் பிரச்சினை வரக்கூடாது என்று அவர்களை மலையிலிருந்து துரத்தியடிக்கும் திட்டத்தைச் செயல் படுத்துகிறான்.
கருணா நண்பன் அல்ல துரோகி என்பதைத் தெரிந்துகொள்ளும் வேலுவுக்கு சிறையில் உத்வேகம் கொடுக்கிறார் புரட்சிகர எழுத்தாளரான நந்தா (சமுத்திரகனி). “காடு உன் வீடு மட்டுமில்ல அது உன் ஆன்மா, அதை வெட்டுபவனை திரும்ப வெட்டு” என வன்முறை வழியை போதிக்கிறார் நந்தா. சிறையிலிருந்து விடுதலையாகும் வேலு என்ன செய்தான்? தங்கள் பூர்வீக வாழ்விடத்தை விட்டு வெளியேறும் தனது கிராம மக்களை அவனால் தடுத்து நிறுத்த முடிந்ததா? துரோகியான நண்பன் கருணாவையும், மரக் கடத்தல் மாஃபியா கும்பலையும் என்ன செய்தான் என்பதுதான் மீதிக் கதை.
சமூக விரோதிகளால் காடு அழிவ தையும், காலம் காலமாக அங்கே வாழும் மக்களை துரத்தியடிக்கத் துடிக்கும் அரசு இயந்திரத்தையும் காய்ச்சி எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்டாலின் ராஜாங்கம். ஆனால், திரைக்கதை அதற்கு ஒத்துழைக்கவில்லை.
பள்ளிக்கூட மாணவியை காதலிப்பதற் கும், அவளை மிதிவண்டியில் அமர வைத்து ஓட்டிக்கொண்டே சலிக்கச் சலிக்க முத்தமிடுவதற்கும், டூயட் பாடுவதற்குமே கதாநாயகனுக்கு நேரம் போதுமானதாக இருக்கிறது. அவர்களின் காதல் ஈர்க்கும்படியாக சொல்லப்படவில்லை.அதேபோல ஒரு தனி டிராக்காக இணைக்கப்பட்டிருக்கும் தம்பி ராமையா – சிங்கம்புலி நகைச்சுவை பார்த்துச் சலித்த அபத்தக் களஞ்சியம். இரண்டாம் பாதியில் பிரச்சினையை பேசவரும் இயக்குநர் இதற்காக வசனங்களையே அதிகம் சார்ந்திருக்கிறார்.
புரட்சிகர எழுத்தாளராக வரும் நந்தாவின் (சமுத்திரக்கனி) கதாபாத்திரம் சமூக அரசியலைச் சாட்டை அடி வசனங்கள் மூலம் குறுக்கு விசாரணை செய்கிறது. கனமான குரலும், நிலைகுத்தி நிற்கும் பார்வையுமாக அலட்டிக் கொள்ளாத நடிப்புடன் நந்தாவை நம் மனதில் நிற்க செய்கிறார் சமுத்திரக்கனி.
‘ஜன்னலோரம்’ படத்தில் கதாபாத்திர மாக நடிக்கத் தெரிந்த விதார்த் இந்தப் படத்தில் வேலுவாக உருமாறாமல் ‘மைனா’வை நினைவுபடுத்தும் தனது டெம்பிளேட் நடிப்பால் நம்மை கவர தவறிவிடுகிறார். நீண்ட வசனங்களைப் பேச அவரது குரல் பெரும் தடை யாக இருக்கிறது. வேலுவின் நண்பன் கருணாவாக நடித்திருக்கும் முத்துக்குமாரின் நடிப்பும் அந்தக் கதா பாத்திரத்துக்கு அவரது தோற்றமும் கச்சிதமாக பொருந்திவிடுகிறது. புது முக நாயகி சமஸ்கிருதி அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். அவருக்கு காதலிப்பதைத் தவிர கதையில் வேறு எந்த வேலையும் இல்லை.
இயக்குநர் கட்டுப்படுத்திய எல்லைக் குள்ளேயே சுழன்றாலும் மகேந்திரன் ஜயராஜூவின் ஒளிப்பதிவும், கேயின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்ப்பவை. ‘உன்னை பத்தி நினைச்சாலே’ பாடலும், படத்தின் முடிவுப் பகுதியில் வரும் புரட்சி பாடலும் கவர்கின்றன.
படத்தில் சறுக்கல்களும் ஓட்டைகளும் இருந்தாலும், ‘காட்டிலும் மலையிலும் வாழும் மக்களால் மட்டுமே காட்டை பாதுகாக்க முடியும், அதனால் காட்டை பாதுகாக்கும் பணியை எங்களிடமே அரசு கொடுக்க வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தமைக்காக காட்டுக்கும் ஒருமுறை வனநடை சென்று வரலாம்.
காடு - திரை விமர்சனம்

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை தன்னகத்தே கொண்ட தருமபுரி மாவட்டத்தின் மலைகிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. வேலுவும்(விதார்த்) அவனத...

சென்னை: மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகை சேர்க்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏழை, பாழைகள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுதானியங்கள் இன்று பணக்காரர்கள் மத்தியிலும் உலாவர ஆரம்பித்து விட்டன. அரிசி சோறு சாப்பிடுவதுதான் கௌரவம் என்றிருந்த நிலை மாறி, இன்று சிறுதானியங்கள் எங்கு கிடைக்கும் என்று தேடும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இயற்கை அங்காடிகள், சிறு விவசாய குழுக்கள் மூலமே நகரப் பகுதிகளில் எட்டிப் பார்த்திருந்த சிறுதானியங்களை இன்று கார்ப்பரேட் கம்பெனிகளே கையில் எடுத்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கேழ்வரகில் செய்யப்பட்ட ராகி பைட்ஸ், ராகி செரல்ஸ் என்ற மேற்கத்திய உணவு பொருட்களை கேழ்வரகில் செய்து அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், "10 ஆயிரம் வருட வரலாறு கொண்டது சிறுதானியங்கள். நம் நாட்டின் மலைப் பகுதிகளில் முதலில் பயிர் செய்யப்பட்டதே சிறுதானியங்கள்தான். இதன் தேவையை உணர்ந்து உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி பொது விநியோக திட்டத்தில் கேழ்வரகு, தினை, சாமை, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறித்தான அறிவு நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களும் சிறுதானியங்களின் அவசியத்தை தற்போது உணரத் துவங்கியுள்ளனர்.

சிறுதானியங்களை சாப்பிடுவது நாம் அனைவரும் பாதுகாப்பான உணவு மற்றும் ஊட்டச்சத்தை நோக்கிய பயணமாக இருக்கும். இதுவே இந்த சமூகத்தை பட்டினியில்லா உலகம் என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும். கேழ்வரகில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் சொல்கின்றன. சாகுபடி முறையிலும் 15% வரையில் செலவை குறைக்கக்கூடியது. அனைத்து தட்பவெப்பநிலையிலும் வளரக்கூடியது. இப்போது இந்தியளவில் அதிகமாக பயிர் செய்யப்பட்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தில் கூட பள்ளி மாணவர்களுக்கு கேழ்வரகை சேர்த்து வழங்கலாம்" என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் பரிதா, "சிறுதானியங்களை வைத்து உணவுச் சந்தையில் நுழைவது வரவேற்கக்கூடிய ஒரு முயற்சி. இன்று நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காய்கறிகள், அரிசி எல்லாம் அதிக தண்ணீர் செலவிட்டு பயிர் செய்யக்கூடியவை. தொடர்ந்து ஒரே மாதிரியான பயிர்களை பயிரிட்டு வருவதால் மண்வளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு சிறுதானியங்கள்தான். வரும் காலங்களில் சிறுதானியங்கள்தான் பயிர் செய்வதில் முக்கிய இடத்தை பிடிக்கும். ஊட்டச் சத்துக்கள் வரிசையிலும் சிறுதானியங்கள் முன்னணியில் இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய கோட்டாரம் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாந்த், "வீட்டிலிருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்ற உணவு சிறுதானியங்கள்தான். அதிலும் கேழ்வரகில் அதிகச் சத்துக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தார்கள். அதனால்தான் கேழ்வரகில் நிறைய பொருட்களை தயார் செய்கிறோம். அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் விதத்தில் ராகி பைட்ஸ், செரல்ஸ், தோசை மாவு மிக்ஸ், இட்லி மிக்ஸ் என்று மக்கள் எளிதில் பயன்படுத்தும் விதங்களில் தயாரித்து வருகிறோம்.

கேழ்வரகின் சிறப்பே நார்ச்சத்து, சர்க்கரை கட்டுப்பாடு, கால்சியம், குறைந்த கொழுப்புச்சத்து ஆகிய தன்மையாகும். கோதுமையைவிட 10 மடங்கு கூடுதல் சத்து கொண்டது. அதனால் கேழ்வரகை முக்கிய பொருளாக எடுத்து சந்தைப்படுத்தி வருகிறோம்" என்றார்.

-த. ஜெயகுமார்


படங்கள்: ஆர். வருண்பிரசாத்
மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகு: வேளாண் விஞ்ஞானி கோரிக்கை!

சென்னை: மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகை சேர்க்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழை, பாழைகள்...

தெல்லாம் சாதனை ஆகும்? ஒரு காபி மெஷினை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் சென்றால் அது சாதனையா? பூமியில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் சென்றால் அது சாதாரண விஷயம். பூமியில் இருந்து 260 கிலோமீட்டர் உயரத்திற்கு  சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச் சென்றால் அது சாதனைதானே? அந்தப் பெருமையைப் பெறப்போகிறார் ஒரு பெண் விண்வெளி வீராங்கனை. அவர் பெயர் சமாந்தா கிரிஸ்டோஃபொ ரெடி.
 
'எஸ்பிரஸ்ஸோ' என்பது இத்தாலியின் புகழ்பெற்ற காஃபி தயாரிக்கும் நிறுவனம். 1884-ம் வருடத்தில் இருந்து காபி மெஷின்களை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்படி செல்லும்போது உணவுகள், வீட்டில் உள்ளவர்கள் கொடுக்கும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை ராக்கெட் மூலம் எடுத்துச் செல்வார்கள். அங்கே காபி குடிக்க முடியாது என்பது விண்வெளி வீரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த மனக்குறை. ஏனெனில் அங்கே நிலவும் ஜீரோ கிராவிட்டியில், மெஷினில் இருந்து காபித்துளிகள் வெளியே வந்ததுமே மிதக்க தொடங்கி விடும். (தண்ணீரை பைப்பில் உறிஞ்சிக் குடிப்பார்கள்.)

இரண்டாவது, அந்த அழுத்தத்திற்கு தாங்கும் வண்ணம் காபி மெஷின் இருக்க வேண்டும். இல்லை என்றால் துண்டு துண்டாக சிதறிவிடும். இதனால் விண்வெளியில் காபி என்பது கனவாகவே இருந்தது. இந்நிலையில்தான் விண்வெளி வீரர்களுக்கு கைகொடுக்க முன் வந்தது எஸ்பிரஸ்ஸோ.

அமெரிக்க விண்வெளி வீரர் டொனால்ட் பெடிட் என்பவர் ஒரு காபி காதலர். ‘விண்வெளி நிலையத்தில் காபி மெஷின்’ என்று கேள்விப்பட்டதும் அவரே அதை எப்படி எல்லாம் தயாரிக்கலாம் என்று அறிவியல் ஐடியாக்கள் கொடுத்துவிட்டார். 20 கிலோகிராம் எடையில் உயர் அழுத்தங்களைத் தாங்கும் எஃகு கொண்டு காபி மெஷினை தயாரித்தது எஸ்பிரஸ்ஸோ.

ஜீரோ கிராவிட்டியிலும் குழாயில் இருந்து காபி பிடிப்பது மாதிரி ஸ்பெஷலாக டிசைன் செய்தார்கள். நாசா பரிசோதனை செய்து ஓகே சொல்லிவிட, இத்தாலியின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையோடும், விண்வெளிக்கு காபி மெஷின் எடுத்துச் சென்ற முதல் விண்வெளி வீரர் என்கிற வரலாற்று சாதனையோடும் பயணிக்க இருக்கிறார் சமந்தா கிரிஸ்டோஃபொரெடி.
 
-கலீல்
-vikatan-
பூமியைப் பார்த்துக் கொண்டே சுடச்சுட காபி!

எ தெல்லாம் சாதனை ஆகும்? ஒரு காபி மெஷினை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் சென்றால் அது சாதனையா? பூமியில் ஓர் இடத்தில்...

சண்டிகர்: ஹரியானா  சாமியார் ராம்பால் கைதுக்குப் பிறகு வெளிவந்துகொண்டு இருக்கும் அவரின் ஆஸ்ரம ரகசியங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையாக அதிர்ச்சியூட்டுகின்றன.
வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்து, மனிதர்களை நெறிப்படுத்தி 'மனிதமே நம் மதம்!' என்று கூறி, மக்களிடையே ஆதரவைத் திரட்டி வைத்திருந்த சாமியார் ராம்பால், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது உண்மையான ஆன்மீகவாதிகளிடமும் பக்தர்களிடமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் கைது செய்யப்பட்ட சாமியார்களின் நடவடிக்கைகளுக்குக் கொஞ்சமும் ராம்பால் சளைத்தவர் இல்லை என்று  காட்டுகிறது அவரின் ஆஸ்ரமம் குறித்து காவல்துறையினர் வெளியிட்டு வரும் தகவல்கள்.
ஹரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் தங்கி தீவிர ஆன்மீக பிரசாரம் செய்து வந்தார்.
இந்து,முஸ்லீம்,சீக்கியம்,கிறிஸ்துவம் என அனைத்து  மதத்தையும் தாண்டி மனிதம் மட்டுமே நமது மதம் என்ற இவரின் ஆன்மீக பிரசாரத்திற்கு ஆதரவாளர்கள் நாள்தோறும் அதிகரிக்கத் தொடங்கினர். இதனால் தனது 12 ஏக்கர் பிரமாண்ட ஆஸ்ரமத்தையும்    தன்னையும் பாதுகாக்க தனியாக பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.
இங்கு ஏராளமான முறைகேடுகளும், சட்ட மீறல்களும் நடந்தன. இறுதியாக 2006ஆம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை கொலை தொடர்பாக ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையிலும்  உள்ளன.

நீதிமன்றம்  பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகததால் போலீசார் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும்  மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.  இதில் 6 பேர் பலியானார்கள். பின்னர் கைதான சாமியார் ராம்பால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராம்பால் கைது செய்யப்பட்டதைத்  தொடர்ந்து அவரது சத்வோக் ஆசிரமத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

அப்போது ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 3 ரிவால்வர்கள், 19 ஏர்கன் துப்பாக்கிகள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும், ஆயுதங்களும்,பெட்ரோல் குண்டுகளும்  சிக்கின.

இது தவிர மிளகாய் தூள் நிரப்பிய குண்டுகள், அமிலம் நிரப்பட்ட சிரஞ்சிகள், ஹெல்மெட்டுகள், கைத்தடிகள், 20 ஜோடி கறுப்பு உடைகள், 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டீசல் டேங்க் ஆகியவையும் இருந்தன.

மேலும் ராம்பாலின் படுக்கை அறையையொட்டியுள்ள அறையில் சோதனையிட்ட போது கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மிளகாய் பொடி, பல்வேறு வகையான மாத்திரைகள், குஷன் மெத்தைகள், ராட்சத மெத்தைகள் போன்றவைகளும் இருந்தன.

மூடப்பட்டிருந்த ஒரு குளியல் அறையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு மருத்துவ மனையில்  சேர்த்தனர். இவர் மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகரை சேர்ந்த பிஜ்லேஷ் என்பது  தெரியவந்தது.

மேலும்  ராம்பாலுடன் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரும் தங்கி இருந்தார். அவரும் ராம்பாலுடன் கைது செய்யப்பட்டார். எனவே ராம்பாலுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான தொடர்பு பற்றி விசாரணை நடத்துவதற்காக சத்தீஷ்கர் மாநில போலீஸ் உதவியை ஹரியானா மாநில போலீசார் நாடியுள்ளனர்.இதனால் ராம்பால் விவகாரத்தில்  இன்னும் பரபரப்பு கூடியுள்ளது.
தொடர்ந்து அம்பலமாகும் சாமியார் ராம்பால் ஆஸ்ரம ரகசியங்கள்!

சண்டிகர்: ஹரியானா  சாமியார் ராம்பால் கைதுக்குப் பிறகு வெளிவந்துகொண்டு இருக்கும் அவரின் ஆஸ்ரம ரகசியங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையாக அதிர்...

பீட்ஸா, பர்கர் டே... கொண்டாடும் இந்த காலத்தில், பெங்களூரில் நிலக்கடலை திருவிழா கொண்டாடுகிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே. அதுவும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் பெங்களூருவில், நிலக்கடலை திருவிழா கொண்டாடி வருவது அனைவரையும் பழமையை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
பெங்களூரு பசவனகுடியில் கவிகங்காதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நவம்பர் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் நிலக்கடலை திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

திருவிழாவிற்கென ஒரு வரலாறு உண்டு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகீசியர்கள் நம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது, முதன் முதலாக அவர்கள் இந்த கவிகங்காதேஸ்வர சுவாமி கோயில் வளாகத்தில் நிலக்கடலையை அறிமுகப்படுத்தி இவ்விழாவை தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது.
அன்றிலிருந்து இன்று வரை 500 ஆண்டுகளாக பழைமை மாறாமல் இத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெங்களூருவை சுற்றியுள்ள ராம் நகர், மண்டியா, மைசூர், பிடுதி, சாம்ராஜ் நகர் மற்றும் தமிழகத்தில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்தும் நிலக்கடலைகள் கொண்டு வரப்படுகிறது. விதவிதமான நிலக்கடலை வகைகளை நிலத்தில் கொட்டி குவியலாக விற்பனை செய்யப்படும்.
பெங்களுரு சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள், குடும்பத்தோடு இந்த திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது உபயோகத்திற்காக நிலக்கடலை வாங்கி செல்கிறார்கள். மற்ற இடங்களில் நிலக்கடலை வாங்குவதற்கும், இங்கு நிலக்கடலை வாங்குவதற்கும் நிறைய சிறப்புகள் இருக்கிறது. விவசாயிகள் நேரடியாக இத்திருவிழாவில் நிலக்கடலை விற்பனை செய்ய வருவர். அதனால் நிலக்கடலை குறைந்த விலையில் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி பல தரப்பட்ட நிலக்கடலைகள் வருவதால் அதில் பிடித்தவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இந்த நிலக்கடலை திருவிழாவை பார்ப்பது மனதுக்கு சந்தோஷமாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இங்கு பலர் வேண்டுதலுக்காக, பல ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

திருவிழாவில் நிலக்கடலை விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரி வேலாயுதம், ‘‘எங்க சொந்த ஊரு தர்மபுரி மாவட்ட பென்னாகரம். 10 வருடமாக இந்த திருவிழாவில் நிலக்கடலை விற்பனை செய்ய வந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்துல நாட்டு நிலக்கடலை மட்டுமே இந்த திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் விவசாயத்தில் மாற்றம் ஏற்பட்டதால் தற்போது பலவகை நிலக்கடலைகளும் விற்பனைக்கு வருகிறது. நான் பச்சைக் கடலை 30 மூட்டையும், வறுத்த கடலை 10 மூட்டையும் கொண்டு வந்திருக்கிறேன். இதில் நேற்றே பாதி தீர்ந்து விட்டது.

இந்த திருவிழாவில் நிலக்கடலையை மொத்தமாக கொள்முதல் செய்யவும், வீட்டு உபயோகத்திற்கும், கோவில் வேண்டுதல்களுக்கும் நிலக்கடலை வாங்கிட்டு போவாங்க. எத்தனை மூட்டை நிலக்கடலை  கொண்டு வந்தாலும் அனைத்தும் விற்பனை ஆகிவிடும். இதுவே இந்த இடத்தின் மகிமை. இங்கு பச்சைக் கடலை, அவித்த கடலை, வறுத்த கடலை, தோல் நீக்கப்பட்ட கடலை கிடைக்கும். பச்சை நிலக்கடலை தரத்தை பொருத்து ஒரு படி 10 முதல் 20 வரையும் ஒரு மூட்டைக்கு 4000 முதல் 5000 வரையும் விற்கப்படுகிறது. வறுத்த கடலை தரத்தை பொருத்து 15 முதல் 25 வரையும், ஒரு மூட்டைக்கு 4500 முதல் 5500 வரை விற்கப்படுகிறது ’என்றார்.
தள்ளுவண்டியில் வறுத்தகடலை விற்றுக் கொண்டிருந்த வடமலை, ‘‘நான் இந்த வறுத்த கடலை விற்பனை செய்வதை சிறுதொழிலாக 20 வருடமாக செய்து கொண்டிருக்கிறேன். என் குடும்பத்திற்கு சோறு போடுவதே இந்த நிலக்கடலை விற்பனை தொழில்தான். நான் தொழில் தொடங்கும்போது ஒரு படி நிலக்கடலை 3 ரூபாய்க்கு வாங்கினேன். அப்போது ஒரு பொட்டலம் 1 ரூபாய்க்கு கொடுத்தேன். ஆனால் இப்போது ஒரு படி நிலக்கடலை 15 முதல் 25 வரை விற்கப்படுவதால் ஒரு பொட்டலம் 10 ரூபாய்க்கு விற்கிறேன்.
இப்போவெல்லாம் வெறுமைக்கு சாப்பிட வாயில நுழைய முடியாத பெயரில் எல்லாம் என்னன்னவெல்லாமோ திண்பண்டம் வந்திடுச்சி. ஆனா எத்தனை காலம் போனாலும் மக்களுக்கு நிலக்கடலை மீது மக்களுக்கு இருக்கும் மோகம் தீரவே தீராது. அந்த நிலக்கடலையை அரசு சிறப்பு கவனம் எடுத்து நிலக்கடலை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வீ.கே. ரமேஷ்

படங்கள்:
ரமேஷ் கந்தசாமி
நிலக்கடலை திருவிழா..!

பீ ட்ஸா, பர்கர் டே... கொண்டாடும் இந்த காலத்தில், பெங்களூரில் நிலக்கடலை திருவிழா கொண்டாடுகிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே. அதுவும் பல்வேறு...

வாட்ஸ் சேஜிங் அப் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய வசதி முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் சர்ச்சையும், விவாதமும் சூடுபிடித்த நிலையில் வாட்ஸ் அப், இந்த வசதி வேண்டாம் என்றால் அதை நீக்கும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.
வாட்ஸ் அப் சேவையில் பரிமாறப்படும் செய்தி படிக்கப்பட்டதா என்பதை உணர்த்தும் நீல நிற டிக் வசதி சமீபத்தில் அறிமுகமானது. ஒரு டிக்குகள் செய்தி அனுப்பட்டதை உணர்த்தும். இரண்டு டிக் அது சென்றடைந்துவிட்டதைத் தெரிவிக்கும். நீல நிறமாக இரண்டு டிக்குகள் தோன்றினால் அந்தச் செய்தி படிக்கப்பட்டதாகப் பொருள்.
ஆனால் இந்த வசதி பலத்த அதிருப்தியை உண்டாக்கியது. செய்திகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இது ஏற்படுத்துவதாகப் பயனாளிகள் கருதினர். பதில் அளிக்கப்படாத செய்தி எனும் சங்கடத்தையும் தேவையில்லாமல் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பயனாளிகளின் பரவலான அதிருப்தியை அடுத்து வாட்ஸ் அப், இந்த அம்சத்தை விரும்பாவிட்டால் அதைச் செயலிழக்க செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. செட்டிங் அமைப்பில் பிரைவசி பகுதிக்குச் சென்று இதைச் செயலிழக்க வைக்கலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் வாட்ஸ் அப் புதிய வர்ஷெனை டவுன்லோடு செய்து இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வாட்ஸ் அப் இணையதளத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பில் மாற்றம் -சைபர் சிம்மன்

வாட்ஸ் சேஜிங் அப் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய வசதி முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதிருப்தியை உண்டாக்கியது. இதனா...

பெங்களூர்:  காவிரியின் குறுக்கே வனப்பகுதியில் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காவல்துறை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடம் உள்ளது. இது காவிரியில் அர்காவதி என்ற துணை நதி கலந்து சங்கமிக்கும்  இடமாகும்.

இங்குக  காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு அண்மையில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுவும்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தியும்  தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது

மேகதாதுவில் கர்நாடக அரசு குடிநீருக்கு பயன்படுத்தவும், நீர் மின் நிலையங்கள் அமைக்கவும் மட்டுமே அணை கட்டுவதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைந்து விடும் ஆபத்து உள்ளது என்பதால்  மேகதாது திட்டத்துக்கு தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளனர். 
வனத்துறை எதிர்ப்பு ஏன்?
இந்நிலையில், மேகதாது வனப்பகுதியில்  அணை கட்ட சாத்தியக் கூறு   இல்லை என்று கர்நாடக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இரு மலைகளுக்கு இடையேதான் அணை கட்ட முடியும். திறந்தவெளி போன்ற நிலப்பரப்பில் அணை கட்டினால் அதிக அளவு தண்ணீரைத்  தேக்க முடியாது என்றும் அதனால் அதிக அளவில் பலன் கிடைக்காது என்றும்  வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.                 
மேகதாது அமைந்துள்ள ராம்நகர் மாவட்ட விவசாயிகளும், வனத்துறையினரும் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணை கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இவை பெரும்பாலும் விவசாய நிலங்கள் என்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு விவசாய அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்த திட்டத்தை வேறு வழியிலோ அல்லது வேறு இடத்திலோ நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேகதாது பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தரப்பிலும்  இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.

தற்போது கர்நாடக அரசு அணை கட்ட தேர்வு செய்துள்ள இடம்  பல ஆயிரம் வன உயிரினங்கள் வாழும் முக்கிய பகுதியாகும். இந்த இடத்தைத்  தான் யானைகள் தங்களின் வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றன.

இந்த வனப்பகுதியில் மட்டும்  6,000 யானைகளும், 300 க்கும் மேற்பட்ட புலிகளும் வசிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பலவகை  ஊர்வன மற்றும் பறவையினங்களும்   வாழ்கின்றன. அணை கட்ட 2,500 ஏக்கர் வனப்பகுதியை கையகப்படுத்தும் போது வன உயிரினங்கள் பாதிக்கப்படும். அதனால் அவைகளின் வாழ்விடத்தை கைப்பற்றி அணை கட்டுவது முறையல்ல என்று கர்நாடக வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பல லட்சம் மரங்களையும் அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கடந்த 24 ஆண்டுகளில்இந்தப்பகுதியில் உள்ள பல அரிய வகை வன உயிரினங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. எனவே வன உயிரினங்களைக்  காப்பாற்ற வேண்டுமானால் மேகதாது அணை திட்டத்தைக்  கைவிட வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்து இருப்பதாக கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா மாநில அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 
-vikatan-
காவிரியின் குறுக்கே அணை: கர்நாடக வனத்துறையே எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

பெங்களூர்:  காவிரியின் குறுக்கே வனப்பகுதியில் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காவல்துறை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து 10...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வந்த போலீஸாரை தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு, தாக்குதல் நடத்தி போக்குகாட்டி வந்த ஹரியானா சாமியார் ராம்பால், தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
12 ஏக்கர் பரப்பிலான அவரது ஆசிரமத்திற்குள் உள்ளே நுழைந்து பார்த்த போலீஸார், சாமியார் வாழ்ந்த ஆடம்பர மற்றும் உல்லாச வாழ்க்கைக்கு சாட்சிகளாக நிற்கும் மசாஜ் படுக்கைகளையும், நீச்சல் குளம் போன்றவற்றையும் பார்த்து திகைத்துப்போய் நிற்கிறார்கள்.
யார் இந்த ராம்பால்...? அவர் சாமியார் ஆனது எப்படி...ஆசிரமம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக உள்ளது என்பது குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போட் இங்கே...
ரியானா மாநிலம் சொனேபட் மாவட்டத்தில் எளிய விவசாய குடும்பத்தில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பிறந்தார் ராம்பால்.
முழு பெயர் ராம்பால் தாஸ். பள்ளிக் கல்விக்குப் பிறகு பொறியியல் டிப்ளமோ படிப்பை  முடித்துவிட்டு அரசின் பொது சுகாதாரத் துறையில் ஜூனியர் எஞ்சினியராக பணியில் சேர்ந்தார்.
இவரின் 48 ஆவது வயதில்,  பணியில் கவனக்குறைவாக இருக்கிறார் என்று துறை சார்ந்த நடவடிக்கை மூலம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ராம்பால் தாஸ் வாழ்க்கையில் ஆன்மிகக் காற்று அடிக்கத் தொடங்கியுள்ளது.18 ஆண்டு காலம் ஆன்மீக வாழ்க்கையின் அம்சங்களை, பயின்று, ஆன்மீகக்  கலையைத் தன் வசப்படுத்தினார் அரசு ஊழியராக இருந்து ஆன்மீக வாதியான சுவாமி  ராம்பால்.

1999 ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக சொற்பொழிவு  ஆற்றி பக்தர்களைக் கவர்ந்து வந்தார். 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் கபீர் என்பவரின் மறு அவதாரம் தாம்தான் என்று கூறி, லட்சக் கணக்கான மக்களை தன்பால் ஈர்த்தவர் ராம்பால். கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் 40 முறை சம்மன் அனுப்பியும், ஏதோ ஒரு காரணம் கூறி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்து வந்தார் சாமியார் ராம்பால். வெறுத்துப்போன நீதிமன்றம் அவரைக் கைது செய்திட  பிடிவாரண்ட் பிறப்பித்தது.  
இதனையடுத்து ஹிசாரில் உள்ள ராம்பாலின்  12 ஏக்கர் பரப்பிலான  பிரமாண்ட ஆஸ்ரமத்தைச் சுற்றி வளைத்தது காவல்துறை. ஆனால் கடுமையான எதிர்ப்பை ராம்பால் சீடர்கள் தரப்பில் இருந்து காவல்துறையினர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உள்ளே நுழைந்து எளிதில் சாமியார் ராம்பாலைக் கைது செய்ய முடியாமல் தவித்தனர்.சீடர்களின் எதிர்ப்பு போலீசாரை கொஞ்சம் மிரளவே வைத்தது எனலாம்.

ஆனாலும் கைது செய்திட தீவிரமான போலீசார் மீது தாக்குதலைத் தொடுத்தனர் ஆஸ்ரம சீடர்கள்.தொடர்ந்து  ஆசிரமத்தில் போலீசாருக்கும், அங்குள்ள சாமியார் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் போலீசார் மீது சராமரியாக  பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. இதனால் நிலை குலைந்த போலீசார், கலவரத்தை கட்டுக்குள் வர  கண்ணீர் புகை குண்டு வீசி  கூட்டத்தினரைக்  கலைத்தனர்.
இந்தக் கலவரத்தினால்  ஆசிரமம் அருகே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. 3 நாட்களுக்கும் மேல் இந்த மோதல் நீடித்தது. போலீசாரின் நடவடிக்கையில்   6 பேர் உயிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,நேற்று முன்தினம் விடாது முயன்று, ராம்பாலைக்   கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் வரும் 28 ஆம் தேதிவரை காவலில் வைத்து உத்தரவிட்டது. இதனால் ஹிசார் முழுக்க பலத்த   பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒரு கோட்டை போல் திகழ்ந்த ராம்பாலின் ஆஸ்ரமத்திற்குள் உள்ளே புகுந்து வந்த போலீஸார் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே இருக்கும் ஆடம்பர வசதிகள் குறித்து தெரிவித்துள்ள தகவல்கள், 'அம்மாடியோவ்..!' ரகமாக வாய் பிளக்க வைக்கின்றன.
12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பிரமாண்ட ஆஸ்ரமம். உயரமான, பலமான கதவுகள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டு யாரும் எளிதில் நுழையாத வண்ணம் கோட்டை போல மதில்களும் கொண்டது.ஒரு ஆன்மிகவாதிக்கு இருக்கவேண்டிய அம்சங்களைக் காட்டிலும்  சொகுசு வாழ்க்கையில் ஊறி திளைக்கும் மல்டி மில்லினர் போல வாழ்ந்து வந்திருக்கிறார் ராம்பால்.

சாமியாருக்கென சொகுசுக் கார்கள் உள்ளன. அதே போல அவரின் குடியிருப்பு  ,25 அடி நீளத்தில் நவீன நீச்சல்குளம், வெளிநாட்டு ஸ்டைல் குளியல் அறைகள், குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப்பட்ட மாடர்ன் அறைகள், பிளாட் ஸ்க்ரீன் டிவிகள் என 7 ஸ்டார் ஹோட்டலைபோல இருக்கிறது. அத்தோடு மசாஜ் மேடைகள், டிரட் மில், ஜிம்மில் உள்ள   நவீன உடற்பயிற்சி சாதனங்கள் என சொகுசு வாழ்க்கையில் ஜொலித்து உள்ளார் சாமியார். 

ஆஸ்ரமத்தின் உள்ளே ஒரு சிறப்பு கிளினிக்,எக்ஸ்ரே வசதிகளுடன் உள்ளது. இங்கிருந்து ஏராளமான மருந்து பொருட்கள் மற்றும் மூட்டை மூட்டையாய் உணவுப் பொருட்கள் ஆகியவை தற்போது போலீசார் கைபற்றி உள்ளனர்.
அதைவிட அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் என்னவெனில், ஒரு மாநிலத்திற்கு எதிராக மினி யுத்தத்தையே நடத்திடக் கூடிய அளவிற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதக்குவியல்கள்தான்.
சுமார் 350 க்கும் அதிகமான கைதுப்பாக்கிகள், ரைஃபிள்கள், கன்கள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் என அங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்த்து திகைத்துப்போய் உள்ளனர் போலீஸார். ஒருவருக்கு துப்பாக்கி லைசென்ஸ் இருந்தால் கூட இந்த அளவுக்கு ஆயுதங்களையோ அல்லது தோட்டாக்களையோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை.
இதுதவிர ஹோலி பண்டிகையின்போது வண்ணக்கலவை தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடிய 'வாட்டர் கன்' களும் ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் பெட்ரோல் மற்றும் ஆசிட்டுகள் நிரப்பப்பட்டிருந்ததாகவும், இதேப்போன்று பாட்டில்களிலும் பெட்ரோல் மற்றும் ஆசிட் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளனர் போலீஸார்.
மேலும் 50,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து ராம்பாலின் ஆன்மீக உரையைக் கேட்கும்   வகையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கூடம் உள்ளிட்ட அனைத்தும் தற்போது மூடி சீல் வைக்கப் பட்டுள்ளன...கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பும் பற்றமும் நிறைந்து இருந்த ஆஸ்ரமம் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் அமைதியாய் இருக்கிறது.
- தேவராஜன்
-vikatan-
மசாஜ் படுக்கை...எல்.சி. டி. டிவி...நீச்சல் குளம்: சாமியார் ராம்பாலின் அம்மாடியோவ் லைப் ஸ்டைல்!

நீ திமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வந்த போலீஸாரை தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு, தாக்குதல் நடத்தி போக்குகாட்டி வந்த ஹரியானா சாமியார் ...

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!
‘எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!
ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது… தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.
”எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.
ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்” என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப்பு முறைகளை விளக்கினார்.
”மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு… அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்” என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.
தரை சேதமாவதில்லை!
மகனைத் தொடர்ந்த சரஸ்வதி, ”சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவு நீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்து றோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அது மேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகற தில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட உயரத்தை அமைச்சுக் கணும். காலையில ஒரு மணி நேரம் சாயங் காலம் ரெண்டு மணி நேரம் மாடித் தோட்டத்துல குடும்பத்தோட வேலை பார்க்கிறோம். சாயங்காலம் எங்க வீட்டுக் குட்டிகளும் தோட்ட வேலையை ஆர்வமா செய்றாங்க. முழுக்க இயற்கை இடுபொருட் களையே பயன்படுத்துறோம்.
களைகள் முளைச்சா, அப்பப்போ எடுத்துடுவோம். கொடிப்பயிர்கள் படர்றதுக் காக ரீப்பர் குச்சிகளை தொட்டிக்குள்ள பதிச்சுருக்கோம். அறுவடை முடிஞ்ச தொட் டில செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திட்டு, தொட்டி மண்ணை சுத்தமான தரையில் கொட்டி வெயில்ல காய விடுவோம். தொட்டியையும் சுத்தமாக கழுவி உலர வெச்சுட்டு, காய வெச்ச மண்ணை நிரப்பி, ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ எரு, ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் போட்டு புதுசா செடிகளை நடுவோம். இங்க, மூலிகைச் செடிக அதிகமா இருக்கறதால, பூச்சிகள் வர்றதில்லை. அதையும் மீறி வர்ற பூச்சிகளை, நீம் மருந்து அடிச்சு விரட்டிடுவோம்’’ என்றார்.
இங்க இல்லாததே இல்லீங்க..!
மாமியாரைத் தொடர்ந்த கல்பனா, ”தக்காளி, கத்திரி, முள்ளங்கி, பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், வெண்டை, பொரியல்தட்டை, ‘கோழி’ அவரை, கொத்தவரை, ‘பெல்ட்’ அவரை, பீர்க்கன், பாகல், மிதிப்பாகல், சுரைக்காய், அகத்தி, புளிச்சக்கீரை, வல்லாரை, தவசி முருங்கை, மணத்தக்காளி, தூதுவளை, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, இஞ்சி, பூண்டுனு வகை வகையா காய்களை நட்டு வெச்சுருக் கோம். அப்புறம்… அக்ரகாரம், அப்பக்கோவை, ஆடாதொடா, இன்சுலின் (சர்க்கரைக் கொல்லிச் செடி), கற்பூரவல்லி, கானாவாழை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தல், பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, தொட்டால்சிணுங்கி, நித்யகல்யாணி, வெற்றிலை, நொச்சி, மென்தால், முசுமுசுக்கை, லெமன் கிராஸ், ஆகாச கருடன், சோற்றுக்கற்றாழைனு மூலிகைகள்; அரளி, ரோஜா, முல்லை, மல்லிகை, செண்டுமல்லி, நந்தியாவட்டை, இட்லிப்பூனு பூச்செடிகள்; பூவாழை, தேன்வாழை மரங்களும் மாடியில இருக்கு. தனியா அசோலாவையும் வளர்க்குறோம்’ என்று பட்டியல் போட்டுக் கொண்டே போக, அசந்து நின்றோம்.
ஆண்டுக்கு 15 ஆயிரம் லாபம்!
நிறைவாகப் பேசிய சிவக்குமார், ”எங்க குடும்பத்துல 5 பேர். எங்களுக்கான காய்கறி தேவையில 70% இந்த மாடியிலேயே கிடைச்சுடுது. அந்த வகையில வருஷத்துக்கு காய்கறிக்காக செலவழிக்கிற 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சம். காஸ்மோபாலிடன் சிட்டி, வெளிநாடுனு நல்லா வாழ்ந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டோமேங்கிற வருத்தம் முன்ன இருந்துச்சு. இப்போ அது போயேபோச்சு” என்றார், மகிழ்ச்சியுடன்.
நன்றி - விகடன் ,
1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை! ‘எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழ...

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .
(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்))) !
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று
அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து,"பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில் "கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் இதனை
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . (((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்))) ! நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 2...

2015–ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஜனவரி 1– ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை)

ஜனவரி 4– மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை)

ஜனவரி 15– பொங்கல் (வியாழக்கிழமை)

ஜனவரி 16– திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை)

ஜனவரி 17– உழவர் திருநாள் (சனிக்கிழமை)

ஜனவரி 26– குடியரசு தினம் (திங்கட்கிழமை)

மார்ச் 21– தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை)

ஏப்ரல் 1– வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுறவு வங்கிகள்) (புதன்கிழமை

ஏப்ரல் 2– மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை)

ஏப்ரல் 3– புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)

ஏப்ரல் 14– தமிழ்ப்புத்தாண்டு–அம்பேத்கர் பிறந்தநாள் (செவ்வாய்க்கிழமை)

மே 1– மே தினம் (வெள்ளிக்கிழமை)

ஜூலை 18– ரம்ஜான் (சனிக்கிழமை)

ஆகஸ்டு 15– சுதந்திர தினம் (சனிக்கிழமை)

செப்டம்பர் 5– கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை)

செப்டம்பர் 17– விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை)

செப்டம்பர் 24– பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை)

அக்டோபர் 2– காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)

அக்டோபர் 21– ஆயுத பூஜை (புதன்கிழமை)

அக்டோபர் 22– விஜயதசமி (வியாழக்கிழமை)

அக்டோபர் 23– முகரம் (வெள்ளிக்கிழமை)

நவம்பர் 10– தீபாவளி (செவ்வாய்க்கிழமை)

டிசம்பர் 23– மிலாதுநபி (புதன்கிழமை)

டிசம்பர் 25– கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு

2015–ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மோகன்...

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரசிப்பவர்களா..?!
Very Sorry.. உங்களின் மானம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.
அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா..?! அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) .
அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.
”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை.
அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.
அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள்.
பின்னர் Delete செய்துவிடுகிறார்கள்.
ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.
சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள்.
இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன.
இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.
இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.
இதைத் தவிர்க்க என்ன செய்வது?
முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள்.
காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது.
அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம்.
ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.
அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.
கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம்.
அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!
ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்…
உலகம் முழுக்க அது பரவி விடும்.
அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது.
அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.
இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள்.
பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!
Via - கதம்பம்
நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரசிப்பவர்களா..?!

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரசிப்பவர்களா..?! Very Sorry.. உங்களின் மானம் இப்போது உலகம்...

கிர்ணி ஜூஸ்!

ஒரு கிர்ணிப் பழத்தைத் தோல்நீக்கி, நறுக்கி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துப் பால் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுப் பருகவும்.
பலன்கள்: அதிக அளவு பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட் இருக்கிறது. அதிகமான சக்தியைக் கொடுக்கும். ஓரளவு நார்ச்சத்தும், குறைந்த அளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கந்தகம் போன்றவையும் இருக்கின்றன.
எல்லோருக்கும் ஏற்றது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்.
கிர்ணி ஜூஸ்!

கிர்ணி ஜூஸ்! ஒரு கிர்ணிப் பழத்தைத் தோல்நீக்கி, நறுக்கி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்துப் பால் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுப்...

3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.

காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.

இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.

வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.

உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.

இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.

இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.
வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?

3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய மு...