சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் உத்தப்பா, காம்பீர் இருவரும் பொறுப்புடன் ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் சென்னை பந்து வீச்சாளர்கள் திணறினர்.

அணியின் ஸ்கோர் 91ஐ தொட்டபோது உத்தப்பாவை அவுட் ஆக்கினார் நேகி. 32 பந்துகளை எதிர்கொண்ட உத்தப்பா 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய காலிஸ் ஒரு ரன்னில் வெளியேறியபோதும், மறுமுனையில் அரை சதம் கடந்து அதிரடியாக ஆடிய காம்பீர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்தபோது, ஜடேஜா பந்தில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னர் காம்பீர் பாணியில் 18-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்ட மணீஷ் பாண்டே 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டஸ்சாட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டக் அவுட் ஆகினர். கடைசி ஓவரில் யூசுப் பதான் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என பந்துகளை பறக்க விட்டார்.
இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. பதான் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 17 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. சென்னை தரப்பில் நேகி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ஸ்மித் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தபோதும், மெக்கல்லம்-ரெய்னா ஜோடி விறுவிறுப்பாக விளையாடியதால் ரன்ரேட் உயர்ந்தது.
30 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 39 ரன்கள் சேர்த்த மெக்கல்லம், பதான் ஓவரில் அவுட் ஆனார். அதேசமயம் அரை சதம் கடந்த ரெய்னா, சிக்சர்களாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மறுமுனையில் டோனி நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து ஆடிய ரெய்னா, 18-வது ஓவரில் தனது 3-வது டி-20 சதத்தை நிறைவு செய்தார். 59 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார்.
பின்னர் 12 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், யூசுப் பதான் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் டோனி. 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் மறுபடியும் இமாலய சிக்சர் அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.
இதனால், 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்த சென்னை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்...
Post a Comment