குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி வகித்தபோது அம்மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரதீப் சர்மா.
மோடியின் உத்தரவின் பேரில், இளம்பெண்ணை போலீசார் உளவு பார்த்த விவகாரம் கடந்த ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரதீப் சர்மாவின் பெயரும் இணைத்துப் பேசப்பட்டது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நில அபகரிப்பு குற்றச்சாட்டு உள்பட 5 குற்ற வழக்குகளை பிரதீப் சர்மா மீது அந்த மாநில போலீசார் பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தனக்கு எதிராக குஜராத் போலீஸ் விசாரித்து வரும் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குஜராத் மாநில அரசு தன்னை பழிவாங்குவதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல. அவர் மீதான குற்ற வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முகாந்திரம் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
குஜராத்தின் பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், கட்ச் மாவட்ட கலெக்டராக கடந்த 2004-ம் ஆண்டு பிரதீப் சர்மா பதவி வகித்தபோது, ஒரு நிறுவனத்திடம் இருந்து 29 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கடந்த 30-ம் தேதி அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் குற்றச்சாட்டின்படி, மாநில அரசின் வழிகாட்டி விலைமதிப்பீட்டை விட 4 மடங்கு குறைவான விலைக்கு அரசு நிலத்தை அந்த நிறுவனத்துக்கு விற்க பிரதீப் சர்மா அனுமதிளித்துள்ளார். இதனால், மாநில அரசுக்கு 1.2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இதற்குரிய கைக்கூலியை பெறும் வகையில் எந்த முதலீடும் செய்யாமல் தனது மனைவியை அந்த நிறுவனத்தின் 30 சதவீத பங்குதாரராக அவர் சேர்த்துள்ளார். மனைவிக்கு காசோலை மூலமாக அளிக்கப்பட்ட பங்கு லாபத் தொகையான 29.5 லட்சம் ரூபாயை பின்னாட்களில் பிரதீப் சர்மா தனது பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.
இதற்கான முழு ஆதாரம் கிடைத்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இது மட்டுமின்றி, குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள காலி நிலம் மற்றும் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா வீட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிறகு, காந்திநகரில் உள்ள அவரது பங்களாவுக்கு பிரதீப் சர்மா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மேல்விசாரணை நடைபெற்றது. மாவட்ட கலெக்டராக பணியாற்றிய கட்ச் மாவட்ட தலைநகருக்கு அவரை அழைத்துச்சென்ற ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை புஜ் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை காவலில் எடுத்தனர்.
நேற்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட பிரதீப் சர்மாவிடம் மேற்கொண்டு விசாரிக்க உள்ளதால் விசாரணை காவலை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என ஊழல் தடுப்பு பிரிவு வக்கீல் அனுமதி கோரினார். இதனை பிரதீப் சர்மாவின் வக்கீல் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இதே கோர்ட்டில் பிரதீப் சர்மாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t49252-topic#ixzz3FESh6vYa
Under Creative Commons License: Attribution

மோடியை எதிர்த்து மோதல் போக்கை கடைபிடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறையில் அடைப்பு
குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி வகித்தபோது அம்மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரதீப் சர்மா. மோடியின் உத்தரவின் ...
Post a Comment