கோடம்பாக்கத்தை நோக்கி மையம்கொண்டிருக்கிறது கொரிய சூறாவளி! 'அது நம்மளை நோக்கி வந்துட்டு இருக்கு... வந்துருச்சு!’ என டப்பிங் படத்தின் டைனோசருக்குப் பயப்படுவதுபோல, 'கௌம்பிட்டாய்ங்களா... வந்துருவாய்ங்களா... வந்து கேஸ் போட்ருவாய்ங்களா?’ என திகிலில் தவிக்கிறது கோடம்பாக்கம்.
கொரியாவுக்கும் கோடம்பாக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவுக்கும் கொரிய சினிமாவுக்கும் 'காப்பி - பேஸ்ட்’ சம்பந்தம் இருக்கிறது. கொரிய சினிமாக்களின் கதையை, கேரக்டர்களை, சில சீன்களை, சமயங்களில் மொத்தப் படத்தையுமே தழுவி தமிழில் பல படங்கள் வந்திருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்கள் அப்படியே நமது கலாசாரத்துக்கு நேர்மாறாக, தாறுமாறாக இருக்கும். ஆனால், கொரிய சினிமாக்கள் ஸ்கூல் காதல், அங்காளி - பங்காளி சண்டை, அதிரடி அடிதடி, காதலை விட்டுக்கொடுப்பது, தப்பைத் தட்டிக்கேட்பது... என நம்ம ஸ்டைலில் நெருக்கமாக இருக்கும். ஆரம்ப நாட்களில், கதைப் பஞ்சத்தில் கொரிய சினிமாக்களின் ஒன்-லைனை லைட்டாக 'சுட’ ஆரம்பித்த கோடம்பாக்க இயக்குநர்கள், பின்னாட்களில் 'அட நல்லா இருக்கே..!’ என கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் 'சுட’ ஆரம்பித்தார்கள்.

அதுவும் ஒருகட்டத்தில் சீனியர், ஜூனியர், அறிமுக இயக்குநர்... என அத்தனை பேருக்கும் கொரிய ஜுரம் தொற்றிக்கொள்ள சகட்டுமேனிக்கு காப்பிதான். இதில் உச்சம்... சமீபத்தில் வெளியான அந்த 'ட்வின் சிஸ்டர்ஸ்’ படம்! குறும்பட இயக்குநர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் தயாரிப்பாளரிடம், அந்த ஜப்பான் படத்தின் கதையை தன் கதை போலவே சொல்லி புராஜெக்ட்டுக்கு ஓ.கே வாங்கியிருக்கிறார் அந்த அறிமுக இயக்குநர். கேமரா ஆங்கிள் தொடங்கி, வசனம் வரை அப்பட்டமான காப்பி. படம் வெளியாகிப் பெரிதாகப் போகவில்லை. ஆனால், படம் 'காப்பி’ எனத் தெரியவர, செம கடுப்பாகிவிட்டார் தயாரிப்பாளர். இயக்குநரைக் கூப்பிட்டு 'லெஃப்ட் - ரைட்’ என வெளுத்துவாங்கியவர், 'இந்தப் படம் காப்பி என்பது தயாரிப்பாளருக்குத் தெரியாது. காப்பிரைட்ஸ் பிரச்னை வந்தால், அதற்கு நான்தான் முழுப் பொறுப்பு’ என இயக்குநரிடம் எழுதி வாங்கி அனுப்பிவிட்டார். ஏனென்றால், இங்கு காப்பிரைட்ஸ் பிரச்னையை ஒரு காபி டேபிள் சந்திப்பில் சமாளித்துவிடுவார்கள். ஆனால், மற்ற நாடுகளில் காப்பிரைட்ஸ் என்பது அவர்களது பிறப்பு உரிமை மாதிரி. தன் குழந்தைக்கு யாரோ ஒருவனுடைய இன்ஷியலை வைத்தால், எவ்வளவு கோபம் வரும்? அமெரிக்கா போன்ற நாடுகளில் 'அறிவுசார் சொத்துரிமை திருட்டு’ எனக் குற்றம் சாட்டினால், பில்லியன்களில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
சரி, இத்தனை வருடங்கள் கழித்து, திடீரென இப்போது எப்படி கொரியர்களுக்கு இது தெரியவந்தது?
தென் கொரியாவில் செட்டிலாகி ஏற்றுமதி-இறக்குமதியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிலதிபர்... தமிழர். படா கோடீஸ்வரரான அவர், கொரியப் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் கொரிய டப்பிங் சீரியல்களை ரசிக்கிறார்கள் எனத் தெரிந்ததும், கொரியப் படங்களை தமிழ்நாட்டில் மார்க்கெட் பண்ணலாம் என சென்னை வந்திருக்கிறார். முதல் படம் ஹிட் கொடுத்த ஓர் இயக்குநரைச் சந்தித்த அவர், 'கொரியப் படங்களின் ரீமேக் ரைட்ஸ் வாங்கிக்கொள்கிறீர்களா? நான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று கேட்டிருக்கிறார். 'பிரதர்... இங்கே ஆல்ரெடி பைசா செலவு இல்லாமல் கொரியப் படங்களைக் காப்பியடிச்சு படம் பண்ணிட்டு இருக்காங்க’ என்று இவர் கேஷ§வலாகச் சொல்ல, அவருக்கு செம ஷாக். இரண்டு, மூன்று காப்பி படங்களைப் பார்த்தவர், கடந்த மூன்று வருடங்களில் வந்த அத்தனை தமிழ்ப் படங்களின் டி.வி.டி-களையும் அள்ளிக்கொண்டு கொரியா பறந்திருக்கிறார். அவர் மூலம் இப்போதுதான் கொரிய சினிமா வட்டாரத்தில் கோலிவுட் காப்பி சங்கதி தெரியவந்திருக்கிறதாம்.
கொரிய தொழிலதிபருடன் பேசிய இயக்குநரிடம் பேசினேன். ''சும்மா பேசலாம்னு போனா, தூங்குன டிராகனை எழுப்பிவிட்ட மாதிரி ஆகிருச்சு. என் பேரைச் சொல்லிராதீங்க!'' என்று அடையாளம் மறைத்துக்கொண்டு விவரங்கள் சொன்னார். ''நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். கொரிய சினிமாக்களின் பாதிப்பில் படம் எடுத்திருந்தாகூடப் பரவாயில்லை. அதை அப்படியே அச்சுஅசலாக் காப்பியடிப்பதுதான் பிரச்னை. இங்கே இருந்து நிறைய டி.வி.டி-க்களை லிஸ்ட் போட்டு எடுத்துட்டுப் போயிருக்கார். 'தமிழ்நாட்டுல பல கொரிய சினிமாக்களை காப்பி அடிச்சிருக்காங்க’னு கொரிய சினிமா இண்டஸ்ட்ரி பரபரப்பாகிருச்சு. அநேகமா ரெண்டு, மூணு மாசத்துல லீகல் நோட்டீஸ் கொடுப்பாங்கனு நினைக்கிறேன்!'' என்றதோடு எஸ்கேப் ஆகிவிட்டார்.
தமிழ்நாட்டில் என்று இல்லை. சமீபத்தில் மலையாள சினிமாவிலும் இந்த காப்பிரைட்ஸ் பூதம் கரையேறி இருக்கிறது. 'பெங்களூரு டேஸ்’ படத்தில் வரும் 'நம்ம ஊரு பெங்களூரு’ பாடல் பிரைன் ஆடம்ஸ் என்கிற இசையமைப்பாளரின் 'சம்மர் ஆஃப் 69’ என்ற மியூசிக் ஆல்பத்தின் காப்பி எனக் குற்றச்சாட்டு கிளம்பி,'பெங்களூரு டேஸ்’ இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டார்கள். இந்தியா என்றால் இந்தி மொழி என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த வெளிநாட்டினருக்கு, இப்போதுதான் இந்தியாவில் மொழிக்கு ஒன்றாக சினிமா கலாசாரம் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஒருவேளை கொரியாவில் இருந்து தமிழ் சினிமா இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினால் பல சீனியர், ஜூனியர் இயக்குநர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கும். இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரிடம் கேட்டோம். ''இந்தியாவில் ஆடியோ ரைட்ஸ் விவகாரங்களைக் கையாள, இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட்ஸ் சொசைட்டினு ஓர் அமைப்பு இருக்கு. இசையமைப்பாளர்களின் ட்யூன்களை உரிமம் இல்லாமல் நட்சத்திர ஹோட்டல்களில் ஒலிபரப்பினால், அது வழக்குப் போட்டு ராயல்டி வாங்கித் தரும். அனுமதி இல்லாமல் ஒரு முறை பயன்படுத்தும் ட்யூனுக்கே எக்கச்சக்க ராயல்ட்டி கொடுக்க வேண்டியிருக்கும். அப்போ முழுப் படத்துக்கும் ராயல்ட்டி கேட்டா, எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும்? இதில் தயாரிப்பாளர்களைவிட இயக்குநர்களுக்குத்தான் சிக்கல். ஏனென்றால், 'நாங்க தயாரிக்கிறோம். அவங்கதான் கதைக்குப் பொறுப்பு’னு தயாரிப்பாளர் சொல்லிருவாங்க. அதனால இனி வர்ற காலங்கள்ல இயக்குநர்களிடம், 'இது என் சொந்தக் கதை. எந்தப் படத்தோட காப்பியும் இல்லை’னு எழுதி வாங்கப்போறோம். இயக்குநர்கள் தமிழ் மண் சார்ந்த கதைகளை உருவாக்க முயற்சி பண்ணணும்!'' என்கிறார் உஷாராக.
கொரிய பூதத்தை எப்படிச் சமாளிக்கப்போறீங்க டைரக்டர்ஸ்!?
- எஸ்.கலீல்ராஜா, எம்.குணா

கோலிவுட்டை மிரட்டும் கொரிய பூதம்
கோடம்பாக்கத்தை நோக்கி மையம்கொண்டிருக்கிறது கொரிய சூறாவளி! 'அது நம்மளை நோக்கி வந்துட்டு இருக்கு... வந்துருச்சு!’ என டப்பிங் படத்தின்...

Post a Comment