ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாமனம்…
ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர்,புல்வெளி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
நடந்து போய்க் கொண்டிருந்தவர் திடீரென்று தன்னையும்
அறியாமல் திரும்பிப் பார்த்தார்.
-
அப்போது தான் நடந்து வந்த பாதையில் தன் காலின்
கீழ் மிதிபட்ட புற்கள் மிகுந்த சிரமத்துடன் தலையை
நிமிர்த்தப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
இதைக் கண்ட அவரின் கண்களிலிருந்து கண்ணீர்
பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.
-
மனம் கலங்கிப் போனவர்,
“அடடா இவற்றுக்கும் உணர்ச்சி இருக்கும் என்பதை
உணராமல் இருந்துவிட்டேனே! நம் காலடி பட்டதால்தானே
இவை இவ்வளவு துன்பப் படுகின்றன?” என்று நினைத்தார்.
-
அன்று முதல் புல்வெளிகளில் நடப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.
================
-நெ.இராமன், சென்னை.
dinamani
ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாமனம்…
ஸ்ரீராமகிருஷ்ணரின் மகாமனம்… ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர், புல்வெளி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார். நடந்து போய்க் கொண்டிருந்தவர் திடீர...

Post a Comment