ரத்னமாலாவும் ராம்ஜெத்மலானியும்…..
***********************************************************
காலை நேரம், கர்நாடக உயர்நீதிமன்றம்……
காலை நேரம், கர்நாடக உயர்நீதிமன்றம்……
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது,. ஜெயலலிதா தரப்பில் ஜெத்மலானியும், அரசு தரப்பில் ஆஜராக பவானிசிங்கும் தயார்நிலையில் இருந்தனர்.
ஆனால், எவருமே கொஞ்சம்கூட எதிர்பார்க்காத வகையில் நீதிபதி ரத்தினகலாவோ, பவானிசிங்கை அரசு வக்கிலாகக் கருதுவதில் குழப்பம் இருப்பதாக அதிரடியாகத் தெரிவித்துவிட்டு, விசாரணையை ஆறாம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதிர்ச்சி அலைகள் பரவ ஆரம்பித்த அடுத்த சில மணித்துளிகளில்….. கிளைமாக்சை ஜெத்மலானி புரட்டிப் போடுகிறார். ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரலிடம் அதிரடியாக ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
“சட்ட விதி 389 (1)-ன் படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும். பத்து வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியே விடக் கோரும்போதுதான், அரசு தரப்பின் சார்பில் பதில் தேவை. இந்த வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. எனவே, அரசு வக்கில் இல்லாமலேயே, அவசர வழக்காகக் கருதி நீதிமன்றம் இந்த வழக்கில் தனது விசாரணையை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்.
இதைக் கருத்தில் கொண்ட தலைமை நீதிபதி நாளை ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு நீதிபதி அவசரமாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
மீண்டும் ரத்னகலா, ராம்ஜெத்மலானி, விசாரணை…..
சட்டங்கள் சாமானிய மனிதர்களுக்குச் சொந்தமில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிற நீதிபதி ரத்னகலாவுக்கு இந்தச் சட்டப்பிரிவு 389(1) எப்படித் தெரியாமல் போனது? அல்லது தெரிந்தும் எப்படி தெரியாதமாதிரி நடந்துகொண்டார் என்பதுதான் இப்போதைய கேள்வி.
ரத்னமாலாவும் ராம்ஜெத்மலானியும்….
ரத்னமாலாவும் ராம்ஜெத்மலானியும்…. . *********************************************************** காலை நேரம், கர்நாடக உயர்நீதிமன்றம்…… ஜெ...

Post a Comment