‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்த நடிகர் சூர்யா!
பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று நடிகர் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ தூய்மையான
சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான
இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்.பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரத இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவு தாருங்கள்.
‘ஜெய் பாரதம், தூய்மை பாரதம்’.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்த நடிகர் சூர்யா!
‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்த நடிகர் சூர்யா! பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து பணியாற்றுவோம் எ...
Post a Comment