சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்து வரும் வேளையில் வாடிக்கையாளர்கள் உடனடி தகவல் ஆப்ஸ்களை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் வாட்ஸ்-அப், வைபர் மற்றும் ஹைக் ஆகியவை பிரபலமாக உள்ளன.
தற்போது இவற்றுக்கு உள்ள வரவேற்ப்பை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் உடனடி தகவல் ஆப்ஸ் சேவையில் இறங்க திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் இந்த ஆப்ஸை ஆரம்பகட்டத்தில் இலவசமாகவும், பின்னர் 53 ரூபாய் என்ற அளவிலும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது கூகுள் இந்த ஆப்சை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் தான் முதன் முதலில் இந்த சேவையை துவங்கலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இந்திய மொழிகளையும் இதற்காக அந்த ஆப்சில் சேர்ப்பதாக கூறப்படுகிறது. கூகுளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிட்டாலும் கூகுள் இந்த சேவையை விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
-vikatan-
உடனடி தகவல் ஆப்ஸ்: கூகுளின் அடுத்த திட்டம்
சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்து வரும் வேளையில் வாடிக்கையாளர்கள் உடனடி தகவல் ஆப்ஸ்களை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். வாடி...

Post a Comment