திருவனந்தபுரம்: மாணவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரத்தில் தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு பத்திரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 6 வயது மாணவனை ஆசிரியை ஒருவர், நாய்கூண்டுக்கள் மூன்று மணி நேரம் அடைத்து வைத்துள்ளார். வகுப்பறையில் அருகில் இருந்த குழந்தையுடன் பேசியதால் இந்த தண்டனையை ஆசிரியை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும், தண்டனைக் கொடுத்த ஆசிரியையை கைது செய்யக்கோரியும் குழந்தைகள் நல ஆர்வலர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, புகாருக்கு உள்ளான தனியார் மழலையர் பள்ளியில் ஆய்வு செய்த மாநில கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர்கள் சமர்பித்த அறிக்கையை அடுத்து, அந்தப் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகி சசிகலா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாய் கூண்டுக்குள் மாணவனை அடைத்த தனியார் பள்ளிக்கு சீல்: கேரள அரசு அதிரடி!
திருவனந்தபுரம்: மாணவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரத்தில் தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தின் புறநகர் ப...

Post a Comment