ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும் தமிழகத்தில் அதிமுகவினர் நடத்தும் போராட்டம் பற்றி ஜெயலலிதா கவலை அடைந்திருக்கிறார்.
கொந்தளித்த மக்கள் தாமாக முன்வந்து போராடுவதாக முதலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால், நீதிபதியையும், ஹைகோர்ட்டையும், தீர்ப்பையும் கடுமையாக தாக்கி பேசுவதால் எதிர்பாராத விளைவுகள் உண்டாகும் என ராம் ஜெத்மலானி உள்ளிட்ட அதிமுக உறுப்பினரல்லாத சீனியர் வக்கீல்கள் சுட்டிக் காட்டினர். குறிப்பாக சரத் குமார் ஏற்பாடு செய்த நடிகர் நடிகைகள் உண்ணாவிரத கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்களும் எழுதி வைத்த பிளக்ஸ் பேனர்களும் நீதித்துறைக்கு கடும் கோபத்தை கிளப்பி விட்டிருப்பதாகவும், அதனால் உங்களுக்குதான் பாதகம் என்றும் ஜெயலலிதாவின் நலம் விரும்பிகள் எடுத்துரைத்தார்கள்.
இதை தொடர்ந்து ஜெயலலிதா மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று தமிழக உளவுத்துறை அதிகாரிகள் அவரை சந்தித்தபோது, யாரும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தக்கூடாது என்று ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செய்வதால் மக்கள்தான் அவதிக்கு ஆளாகிறார்கள். அதன் காரணமாக என் மீது அவர்களுக்கு உள்ள நல்லெண்ணம் சீர்குலையும் என்று சொல்லியிருக்கிறார்.
அதிமுக சார்பிலும் அரசின் சார்பிலும் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்குமாறும் ஜெயலலிதா யோசனை தெரிவித்து இருப்பதாக பிஎன்எஸ் மீடியாவுக்கு கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்கள் மூலம் இந்த வேண்டுகோள் விடப்படலாம்.
ஒரு கொசுறு செய்தி. மேற்படி அதிகாரிகள் ஜெயலலிதாவை பார்த்தபோது தலை குனிந்து, ஒரு கையால் வாயை பொத்தி, இன்னொரு கையால் பொங்கி வரும் கண்ணீரை துடைத்துக் கொள்வதுபோல் சைகையெல்லாம் செய்திருக்கிறார்கள். பலே பெர்பாமன்ஸ் என்று ஜெயலலிதா மனதுக்குள் அவர்களை பாராட்டினாரா இதெல்லாம் டூமச் என்று பெருமூச்சு விட்டாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால், ‘நானே தைரியமாக இருக்கிறேன். நீங்கள் இப்படி கோழை போல அழலாமா?’ என்று ஆறுதல் சொல்லி புன்னகைத்தார் என்பது நமக்கு கிடைத்த தகவல்
போராட்டம் வேண்டாம் – ஜெயலலிதா வேண்டுகோள்
ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும் தமிழகத்தில் அதிமுகவினர் நடத்தும் போராட்டம் பற்றி ஜெயலலிதா கவலை அடை...

Post a Comment