செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க ஆண்கள் வயாகரா மாத்திரையை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது உடல் நலத்துக்கு கேடு என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு கண் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது.
ஆஸ்திரேலியா நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், வயாகரா மாத்திரையில் ‘சில்டெனாபில்’ என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள என்னசம் கண்விழித்திரையில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.
அதுவே, கண்பார்வை பாதிப்புக்கும் பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி செல்களை கொன்று பார்வையை படிப்படியாக குறைத்து பின்னர் முழுவதும் பறிபோக செய்யும்.
இந்த சோதனை நல்ல உடல் நலத்துடன் இருந்த சுண்டெலிகளில் நடத்தப்பட்டது. வயாகரா மாத்திரை கொடுத்த 2 நாளிலேயே அவற்றின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
வயாகரா மாத்திரை கண்பார்வையை பாதிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை Vayakara pill can affect eyesight: experts warn
செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க ஆண்கள் வயாகரா மாத்திரையை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது உடல் நலத்துக்கு கேடு என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அத...

Post a Comment